நினைவுப் பெண்

புதிய சிறுகதை ஹூப்ளி எக்ஸ்பிரஸில் யாரோ ஒரு பெண் தவறவிட்டதாக அந்தச் சிவப்பு நிற மணிபர்ஸை ரயில்வே காவல் நிலையத்தில் வித்யா ஒப்படைத்தபோது மார்கண்டன் ஸ்டேஷனில் இல்லை. ஆறாவது பிளாட்பாரத்தில் கிடந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து துர்நாற்றம் அடிப்பதாகப் பயணிகள் புகார் செய்த காரணத்தால் அதைப் பரிசோதனை செய்யப் போயிருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு மரப்பெட்டியில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலை அவர்கள் கைப்பற்றினார்கள். அவளது தலையை மட்டும் காணவில்லை. ஆனால் உடல் மூன்றாகத் துண்டிக்கபட்ட நிலையில் …

நினைவுப் பெண் Read More »

கோடுகளும் சொற்களும்

கே.எம். வாசுதேவன் நம்பூதிரி கேரளாவின் முக்கிய ஓவியர். வைக்கம் முகமது பஷீர். தகழி, கேசவதேவ். உரூபு, வி.கே.என் எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட முக்கியப் படைப்பாளிகளின் தொடர்களுக்குச் சித்திரம் வரைந்தவர். எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் தொடருக்கு இவர் வரைந்த மகாபாரதக் கோட்டோவியங்கள் அற்புதமானவை. தான் பீமனின் மனநிலையை முதன்மையாகக் கொண்டு கோட்டோவியங்கள் வரைந்தேன். இந்தத் தொடருக்கு ஓவியம் வரைந்தது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம் என்கிறார் நம்பூதிரி. அவரும் எம்.டி.வாசுதேவன் நாயரும் சந்தித்து உரையாடும் நேர்காணல் …

கோடுகளும் சொற்களும் Read More »

முழுநாள் கருத்தரங்கம்

எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நவம்பர் 14 ஞாயிறு (14.11.2021) சென்னை மயிலாப்பூரில் உள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறவுள்ளது. தேர்ந்த வாசகர்களே இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த முழுநாள் கருத்தரங்கில் எனது சிறுகதைகள். குறுங்கதைகள், நாவல். உலக இலக்கியக் கட்டுரைகள். வரலாறு சார்ந்த கட்டுரைகள். வாழ்வியல் கட்டுரைகள். சிறார் புனைவுகள் எனப் பல்வேறு பிரிவுகளில் உரைகள் நிகழ்த்தபட இருக்கின்றன. நிகழ்வு குறித்த முழுவிபரங்களை இரண்டு நாட்களில் வெளியிடுகிறேன் இந்த நிகழ்வை முன்னிட்டு மாலை …

முழுநாள் கருத்தரங்கம் Read More »

மாயநிலத்தில் அலைவுறும் நிழல்

.அமெரிக்காவின் கொலராடோ பகுதியுள்ள Monument Valley க்குப் படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்ற எனது நண்பர் அங்கே இயக்குநர் ஜான் ஃபோர்டின் ஆவி இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இப்போதும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ என்று சொன்னார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை, இந்தப் பள்ளத்தாக்கினை ஜான் ஃபோர்டு போல யாரும் படமாக்கியிருக்க முடியாது. இன்று அந்தப் பள்ளத்தாக்கு அவரது நினைவுச்சின்னமாகவே குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கச் சினிமாவின் நிகரற்ற இயக்குநர் ஜான் ஃபோர்டு. சென்ற லாக்டவுன் நாட்களில் தொடர்ச்சியாக …

மாயநிலத்தில் அலைவுறும் நிழல் Read More »

மலர்களை நேசிக்கும் நாய்

மேரி ஆலிவரின் கவிதை ஒன்றை கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்து தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் நல்ல கவிதை. விலங்குகளைப் பற்றிய மேரி ஆலிவரின் கவிதைகள் தனித்துவமானவை. இந்த கவிதையில் வரும் நாய் மலர்களைத் தேடிச் செல்கிறது. ரோஜாவைக் கண்டதும் நின்றுவிடுகிறது. வழியில் காணும் மலர்களை ஆராதிக்கிறது. மனிதர்கள் ஒரு மலரை ஆராதிக்கும் போது அடையும் உணர்வுகளை போலவே தானும் அடைகிறது எனலாமா, ஒருவேளை நாம் தான் அப்படி புரிந்து கொள்கிறோமோ என்னவோ உண்மையில் ஒரு …

மலர்களை நேசிக்கும் நாய் Read More »

சீனன் சாமி

வனம் இணைய இதழில் சித்துராஜ் பொன்ராஜ் சீனன் சாமி என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான சிறுகதை. சிங்கப்பூர் வரலாற்றையும் கடந்த கால நினைவுகளையும் மடிப்பு மடிப்புகளாகக் கொண்டு வியப்பூட்டும் ஒரு நிகழ்வைச் சிறுகதையாக்கியிருக்கிறார். மலைப்பாம்ப வச்சுக் கும்பிட்டா அதிர்ஷ்டம்னு சீனனுங்க சொல்லுவானுங்க,” என்றான் வீரா என ஒருவன் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு வருவதில் கதை துவங்குகிறது. மலைபாம்பை என்ன செய்வது என்பதைப்பற்றிய உரையாடலின் ஊடாகவே அவர்கள் நிரந்தர வேலையில்லாத மலேசிய கேஷுவல் …

சீனன் சாமி Read More »

உயிர்மை 200

உயிர்மை 200வது இதழ் வெளியாகியுள்ளது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் கைகோர்த்து வந்துள்ள இந்த இதழ் குறிப்பிடத்தக்கது. இதில் வெளியாகியுள்ள தேவதச்சனின் கவிதைகள் அபாரமானவை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது சிறுகதை உயிர்மை இதழில் வெளியாகியுள்ளது. மனுஷ்யபுத்திரன் என்றும் என் அன்பிற்குரிய நண்பர். அவர் தொலைபேசியில் அழைத்துக் கதை கேட்டதும் உடனே அனுப்பி வைத்தேன். எனது கதைக்கு மனோகர் வரைந்துள்ள ஒவியம் அத்தனை பொருத்தமாக உள்ளது. மனோகருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

மகிழ்ச்சியின் தூதுவன்

Autumn of the Magician என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் , டொனினோ குவாரா பற்றியது. இவர் ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் நெருக்கமான நண்பர். அன்டோனியோனி, பெலினி பிரான்செஸ்கோ ரோஸி, தியோ ஆஞ்சலோபோலஸ் படங்களுக்குத் திரைக்கதை ஆசிரியர். ஓவியர், கவிஞர், சிற்பி. கட்டிடக்கலைஞர், சமையற்கலைஞர். இசைக்கலைஞர், நாடகாசிரியர், தோட்டக்கலை நிபுணர், நாவலாசிரியர், பள்ளி ஆசிரியர், வேட்டைக்காரன், தியானி, நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். லியோனார்டோ டாவின்சியோடு தான் இவரை ஒப்பிட வேண்டும் என்கிறார்கள். மண்ணில் செய்து வைத்த பறவை உருவங்கள். …

மகிழ்ச்சியின் தூதுவன் Read More »

சுவரும் வானமும்

2020ல் வெளியான 200 Meters திரைப்படம் வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படமாகப் பார்வையாளர்களின் விருதைப் பெற்றுள்ளது. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமான பிரச்சனையைப் படம் புதிய கோணத்தில் சித்தரிக்கிறது பாலஸ்தீன நகரமான துல்கர்மிலுள்ள முஸ்தபாவின் வீட்டில் படம் துவங்குகிறது. அவனது மனைவி சல்வா சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். ஆசையாக அவளை நெருங்கிக் கட்டிப்பிடிக்கிறான். அவளே குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விலக்கிவிடுகிறாள். அவன் தனது முதுகுவலியைப் பற்றிச் சொல்கிறான். இந்த உடல்நிலையோடு கட்டிட வேலை செய்து கஷ்டப்பட வேண்டாம் …

சுவரும் வானமும் Read More »