வாழ்த்துகள்
கனலி இணையதளம் கலை இலக்கியம் சார்ந்து சிறப்பான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இணைய இதழுடன் அச்சில் கனலி இருமாத இதழாக வெளிவரவுள்ளது. கனலி விக்னேஷ்வரன் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்
கனலி இணையதளம் கலை இலக்கியம் சார்ந்து சிறப்பான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இணைய இதழுடன் அச்சில் கனலி இருமாத இதழாக வெளிவரவுள்ளது. கனலி விக்னேஷ்வரன் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்
கலை கார்ல்மார்க்ஸ் இந்தத் தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு விதமாக உள்ளது. முன்னுரையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ‘ஒவ்வொரு தொகுப்பும் ஒரு காலகட்டத்தில் எனக்கு இருந்த மனநிலையின் சாட்சி’ எனக் குறிப்பிடுகின்றார். மேலும், ‘முந்தைய கதைகளிலிருந்து அவரது கதைகள் வேறு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாகவும்’ குறிப்பிடுகின்றார். ஆம். அது முற்றிலும் உண்மை தான். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும் பொழுது மனம் எங்கெங்கோ பயணித்து …
மஞ்சுநாத் சைக்கோ என்ற வகைமையில் வாழ்ந்து வந்தவர்களை வாழ்ந்து வருபவர்களை எவ்விதப் பொருளில் வகைப்படுத்துவது. வரலாறு அவர்களை ஒரு பட்டியலாக மட்டுமே வகைமைப்படுத்தியுள்ளது. மனநோயாளிகளாக அவர்கள் மீது கருனை கொள்வதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை. அவர்களுக்கு மனம் இருக்கிறது. சாமானியன் மனதைவிட அது சிறப்பாகவே செயல்புரிகிறது. துடிப்பான வேகத்தோடு செயலாற்றும் ஒன்றிற்கு நோயின் சாயத்தைப் பூச முயல்வது அனர்த்தம் மட்டுமல்ல ஆபத்தும் கூட. மனதின் செல்வாக்கிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களைச் சைக்கோவாகப் பொருள் கொள்வதில் ஒரு உடன்பாடு உள்ளது. …
எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியைச் சேர்ந்த ஜில்லேல பாலாஜி. நூலின் பிரதி வேண்டுவோர் தேசாந்திரி பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும் விலை ரூ 250 தேசாந்திரி பதிப்பகம் டி&1, கங்கை அப்பார்ட்மெண்ட், 110, 80 அடி ரோடு, சத்யா கார்டன், சாலிக்கிராமம், சென்னை – 600 093, தொலைபேசி: 044 2364 4947, +91 96000 34659. desanthiripathippagam@gmail.com www.desanthiri.com
எனது யாமம் நாவல் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வாசிக்க விரும்புகிறவர்கள் இங்கே பெறலாம் https://keralabookstore.com/book/yamam/15009/
சௌந்தர்.G ஒரு நாவலுக்குள் , வரலாற்று தடயங்கள் , காலக்கணக்குகள், தத்துவார்த்த நிலைகள் , மனித அவலங்கள் , தீர்வும் , தீர்வற்ற முடிவுகள். என பல படிகள் கட்டமைக்கப்பட்டு , ஒரு உச்சத்தில், கதையை அந்தரத்தில் மிதக்க விடுவதோ , சரித்து கீழே தள்ளி, கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்ப்பதோ, அந்த படைப்பாளியின் தேர்வாக இருக்கலாம். வாசகனுக்கு அந்த நாவல் மிச்சம் வைப்பது என்ன? என்பதுவே அந்த நாவலின் வெற்றி. தொடர்ந்து பேசப்பட்ட, அப்படியான …
நேற்று கவிஞர் தேவதச்சனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இயற்கையை ஏன் கவிதைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பேசிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் வருகிறது. உரைநடைக்கு அதில் ஏன் அவ்வளவு பெரிய கவனமில்லை என்ற பேச்சு வந்தது. அதைப்பற்றி உரையாடினோம் கவிதையைப் பற்றிய உரையாடல்கள் என்பது பாராட்டு அல்லது நிராகரிப்பு என்ற இருநிலைகளுக்குள் இன்று சுருங்கிப் போயிருக்கிறது. ஆனால் கவிதைகளின் போக்கு மற்றும் அதன் இயல்புகள். இன்று உருவாகி வரும் மாற்றங்கள். அது மொழியில் வெளிப்படும் விதம். …
வெனிஸ் திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு பெற்றுள்ள Dear Comrades என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன். சமகால ரஷ்யப் படங்கள் ஹாலிவுட் படங்களுடன் போட்டிப்போடும் விதமாகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றன. சர்வதேசச் சந்தையைக் குறித்து வைத்து உருவாக்கப்படும் இந்தப் படங்கள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் சிறந்த கலைப்படங்களின் உருவாக்கமும் விநியோகமும் குறைந்து வருகிறது. ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கி போன்ற சினிமா மேதைகள் உருவாக்கிய புதிய அழகியலை இளம் இயக்குநர்களில் ஒரிருவரே முன்னெடுக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது …
இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. A Companion to Salman Rushdie என இவர் சல்மான் ருஷ்டி பற்றிய நூல் ஒன்றைத் தொகுத்திருக்கிறார். அதைப் படித்திருக்கிறேன். மற்றபடி இவரது நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என நேற்று வரை பத்திரிக்கைகள் கணித்த எந்தப் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை. 2005ம் ஆண்டின் புக்கர் பரிசு பட்டியலில் இவரது நாவல் இடம்பெற்றிருந்திருக்கிறது. …
எனது அனைத்து நூல்களுக்கும் தேசாந்தரி பதிப்பகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இருபது சதவீதத் தள்ளுபடியில் நீங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம் Desanthiri Pathippagam : D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093 Phone: 044 2364 4947 Mobile 9789825280 https://www.desanthiri.com/