வ. அதியமான் கவிதைகள்

சொல்வனம் இதழில் வ. அதியமான் எழுதும் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறப்பான கவிதைகள். தனக்கான கவிதை மொழியினையும் குரலையும் கொண்டுள்ள இளங்கவிஞராக இருக்கிறார் அதியமான். இதுவரை அவரது கவிதைத் தொகுப்பு எதுவும் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகளின் வழியே அவர் உருவாக்கும் சித்திரங்கள் எளிமையும் அழகும் கொண்டவை. மரபும் நவீனமும் இணைந்த கவிமொழியைக் கையாளுகிறார். ஒளியும் இருளும் கலந்த இந்தக் கவிதைகள் நெருக்கடிக்குள்ளும் வாழ்வின் இனிமையைப் பேசுகின்றன. ஜென் கவிதைகளில் அடையும் உணர்வுகளின் இன்னொரு …

வ. அதியமான் கவிதைகள் Read More »

ஜெயகாந்தனுடன்

2012ல் ரஷ்யக் கலாச்சார மையம் துவங்கி நாற்பது ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடந்த விழாவில் ஜெயகாந்தன் அவர்களால் கௌரவிக்கப்பட்டேன். அந்தப் புகைப்படத்தை நேற்று நண்பர் தங்கப்பன் மெயிலில் அனுப்பியிருந்தார். ஜேகே அவர்களுடன் பழகிய நாட்களை நினைத்துக் கொண்டேன். அபூர்வமான மனிதர். அரிய புகைப்படம்.

சிறிய உண்மைகள் 5 மண்டோவின் அதிசயம்

சதத் ஹசன் மண்டோவின் குறுங்கதைகளில் பெரும்பான்மை பிரிவினையின் போது ஏற்பட்ட மதக்கலவரத்தை முன்வைத்து எழுதப்பட்டவை. வீடு புகுந்து கொள்ளையடிப்பது. தீவைப்பது. கூட்டமாகச் சேர்ந்து அப்பாவிகளைக் கொலை செய்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது போன்றவற்றை மண்டோ உண்மையாகப் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு கதையில் ஒரு வீட்டினை கொள்ளையடிக்கக் கும்பல் ஒன்று திரண்டு போகிறார்கள். ஒரு ஆள் கதவை ஏன் தேவையில்லாமல் உடைக்கப் போகிறீர்கள். நானே திறந்துவிடுகிறேன் என்று திறந்துவிடுகிறான். இது போலவே வீட்டில் உள்ள நகை …

சிறிய உண்மைகள் 5 மண்டோவின் அதிசயம் Read More »

நான் புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாடகமாக எழுதியிருக்கிறேன். ஒரு மணி நேர அளவில் நடக்கும் நாடகம். எனது நண்பர் கருணா பிரசாத் இதனை இயக்கவுள்ளார். கருணாபிரசாத் எனது அரவான் நாடகத்தை மிகச்சிறப்பாக நடித்து இயக்கியவர். மிகத் திறமையானவர். ஒராண்டிற்கு முன்பாக இந்த நாடகத்தை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். பெருந்தொற்றுச் சூழல் மற்றும் நாடகம் தயாரிக்கத் தேவையான பொருளாதார வசதிகள் கிடைக்காத காரணத்தால் நாடகத்தை நிகழ்த்த இயலவில்லை. விரைவில் அந்த நாடகம் நிகழ்த்தப்படும் என நம்புகிறேன்.

பஷீரும் தகழியும்

புனலூர் ராஜன் எடுத்த பஷீரின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறப்பான புகைப்படங்கள். ராஜன் ரஷ்யாவிற்கு சென்று மாஸ்கோ பல்கலைக்கழகத்துடன் இணைந்த USSR Institute of Cinematographyயில் மூன்று ஆண்டுகள் ஒளிப்பதிவு பயின்றவர். அன்றைய கேரள கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான திரைப்படங்களை தயாரிக்க விரும்பியது. அதன் பொருட்டே ராஜன் ரஷ்யா அனுப்பி திரைக்கலை பயின்று வந்தார். ராஜனின் மாமா கம்பிசேரி கருணாகரன் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர். ராஜன் ஒளிப்பதிவு  படித்து முடித்து திரும்பிய போது கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட …

பஷீரும் தகழியும் Read More »

ஒலிம்பிக் வெற்றி

கடந்த பதினைந்து நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைத் தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து வந்தேன். இந்தப் போட்டிகள் மனதை மிகவும் உற்சாகப்படுத்தியது. பெருந்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதுமே பெரும் மனச்சோர்வும் அச்சமும் பீடித்திருந்த சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் இதற்கு மாற்றான நம்பிக்கையை, உத்வேகத்தை அளித்தன. இந்தியர்கள் போட்டியில் வெல்லும் தருணங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சி நிகரற்றது.  அதிலும் ஹாக்கி மற்றும் மல்யுத்த போட்டிகளில் கடைசி நிமிஷம் வரை ஏற்பட்ட பரபரப்பும் முடிவில் நாம் அடைந்த வெற்றியும் மறக்க முடியாதது. ஒலிம்பிக் முழுவதும் …

ஒலிம்பிக் வெற்றி Read More »

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

தமிழ் பதிப்புத்துறை வரலாற்றில் வாசகர் வட்டத்திற்குத் தனியிடம் உண்டு. அது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய பதிப்பகம். அவர் தியாகி சத்தியமூர்த்தியின் மகள். எம்.எல்.சி.யாக இருந்தவர். உலகத் தரம் வாய்ந்த புத்தகத் தயாரிப்பினை வாசகர்வட்டம் மேற்கொண்டிருக்கிறது. கலாஸாகரம் ராஜகோபால் வரைந்த ஒவியம் மற்றும் அட்டை வடிவமைப்பு. ஒரே அட்டை ஒவியம் தான் எல்லா நூல்களுக்கும். புத்தக விலை மிகவும் குறைவு. ஆனால் தரமான இந்தப் புத்தகங்கள் விற்காமல் போய் பெரிய நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி என்னிடமுள்ள வாசகர் …

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி Read More »

சூடி மறையாத சூரியன்

குறுங்கதைகள் பற்றிய வாசிப்பனுபவம் சக்திவேல் ••• உங்களின் பூக்களை வரையும் சிறுமி குறுங்கதை வாசித்தேன். ஓவியத்தை வரைந்து நீருற்றி வளர்க்க முயலும் சிறுமி, ஒருகட்டத்தில் சலித்து முடியாமையால் விலகி விடுகிறாள். பின்பொரு நாள், தன் ஓவியம் மாறாது நிலைப்பது என்ற உணர்தலை அறிந்தவுடன் இயற்கையோடு முரண் கொள்வதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தைச் சூடிக் கொள்கிறாள். அவள் வரையும் அந்தச் செடியும் மலருமான ஓவியம் என்பது இயற்கையில் ஒருகணத்தில் சுடர்ந்தொளிரும் அற்புதம் அல்லவா. நம் நினைவுகள் அப்படித் தான் இருக்கின்றன. …

சூடி மறையாத சூரியன் Read More »

பண்பாட்டின் வாசல்கள்

ஞானபீடம் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளரான . உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி எனும் யு.ஆர். அனந்தமூர்த்தி பற்றி Ananthamurthy…Not a biography…but a hypothesis என்ற ஆவணப்படத்தைக் கிரிஸ் காசரவள்ளி இயக்கியுள்ளார். கடஷ்ரத்தா என்ற அனந்தமூர்த்தியின் கதையைப் படமாக்கி தனது திரை வாழ்க்கையைத் துவக்கியவர் காசரவள்ளி. கிரிஷ் காசரவள்ளி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அவர் வாசித்த கதை கடஷ்ரத்தா. அக் கதையின் பாதிப்பைப் பல ஆண்டுகளாக அவரால் மறக்க முடியவில்லை. பூனே திரைப்படக்கல்லூரியில் படித்து முடித்துத் திரும்பிய …

பண்பாட்டின் வாசல்கள் Read More »

முன்செல்லும் பறவை

இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவரான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் குறித்து The Seer Who Walks Alone என ஆவணப்படம் ஒன்றை இயக்குநர்: ஜி.அரவிந்தன் இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் ஜேகே உருவான விதம், மற்றும் அவரது சொற்பொழிவுகளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. 1985 ஆண்டுத் தயாரிக்கப்பட்ட இப்படம் 50 நிமிஷங்கள் ஓடக்கூடியது. சென்னையில் ஜே.கிருஷ்ணமூர்த்திப் பேசுவதைக் கேட்கத் திரளும் விதவிதமான ஆட்களையும் தரையில் அமர்ந்து உரையை ஆழ்ந்து கேட்கும் அவர்களின் ஈடுபாட்டினையும் காணும் போது வியப்பாக இருக்கிறது. புத்தர் …

முன்செல்லும் பறவை Read More »