குறுங்கதைகள் விமர்சனம்

பொன் மாரியப்பன். தூத்துக்குடி. காலச்சுவடு 2021 ஆகஸ்ட் மாத இதழ் வாங்கினேன். 21 குறுங்கதைகளில் தங்களின் 3 குறுங்கதைகள் படித்தேன். மூன்றும் வாசிப்பில் இனிமையும் மாற்றத்தையும் உருவாக்கியது. இது போன்ற குறுங்கதைகள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்பேன். பதினேழாவது ஆள் பழைய நிழற்படத்தைக் கொண்டு வாசிக்கும் எல்லோருடைய மனதிலும் பதினேழாவது ஆள் தோன்றி மறைகிறான்.அது தான் மனசாட்சி. அந்த நிழற்படத்தின் பதினேழாவது தான் என்னை எழுத வைக்கிறது.ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும் குரூப் போட்டோ தூசி தட்டப்படும். நினைவுகள் …

குறுங்கதைகள் விமர்சனம் Read More »

அப்பாவின் கதைகள்

ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே. –     அலெக்சாந்தர் ரஸ்கின் அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற சிறார் நூலை நா.முகம்மது செரீபு மொழியாக்கம் செய்திருக்கிறார். சுவாரஸ்யமான சிறார் நூல். தனது தந்தையின் பால்ய நினைவுகளைக் கேட்பதில் பிள்ளைகளுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதுவும் பள்ளி நினைவுகளை விவரிக்க துவங்கினால் இப்படி எல்லாம் நடந்ததா என்று வியப்படைவார்கள். தந்தையோ, தாயோ தான் படித்த பள்ளிக்குப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய் காட்ட …

அப்பாவின் கதைகள் Read More »

காலச்சுவடு இதழில்

இம்மாத காலச்சுவடு இதழில் எனது மூன்று குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு கதை வைக்கம் முகமது பஷீரைப் பற்றியது. குறுங்கதைகளின் சிறப்பிதழாக காலச்சுவடு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணையா

ரஷ்ய இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம். . நா. தர்மராஜன், ரகுநாதன் டி.எஸ்.சொக்கலிங்கம், பாஸ்கரன் ஆகியோரின் பணியும் பங்களிப்பும் மகத்தானது. அவற்றைப் படித்து உருவானவன் என்ற முறையில் அவர்கள் மீது பெருமதிப்பும் அன்பும் உண்டு. இவர்களில் நா.தர்மராஜன் அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் பூ.சோமசுந்தரம், கிருஷ்ணையா இருவரது பெயர்கள் மட்டுமே அறிமுகம். ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களில் அவர்களைப் பற்றி வேறு எந்தத் தகவலும் இடம்பெற்றிருக்காது. அவர்களின் புகைப்படத்தைக் கூட நான் கண்டதில்லை. இதில் கிருஷ்ணையா, …

கிருஷ்ணையா Read More »

கன்னடத்தில்

எனது இந்தியா கன்னடத்தில் தொடராக வெளியாகிறது. அவதி இணைய இதழில் இந்தத் தொடர் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே. நல்லதம்பி. கன்னடத்திலிருந்து தமிழுக்கு சிறந்த நூல்களை மொழியாக்கம் செய்திருப்பவர். இது போலவே தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். அவருக்கு என் அன்பும் நன்றிகளும். இணைப்பு

சிறிய உண்மைகள் 3 நட்சத்திரத்தின் நிழல்

தொலைவிலிருந்து பார்க்கும் போது தான் நட்சத்திரங்கள் அழகாக தெரிகின்றன. அவை தரையிறங்கி வந்துவிட்டால் அதன் மதிப்பு போய்விடும். நட்சத்திரத்திற்கும் நமக்குமான இடைவெளி தான் அதன் அழகை வியக்க வைக்கிறது. சத்யஜித்ரேயின் நாயக் திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகர் அரிந்தம் முகர்ஜி (உத்தம்குமார்) டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வாங்குவதற்காக கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்கிறார். அந்த ரயில் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள். மற்றும் அரிந்தம் முகர்ஜியின் கடந்தகால நினைவுகளின் வழியே சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார் சத்யஜித்ரே. …

சிறிய உண்மைகள் 3 நட்சத்திரத்தின் நிழல் Read More »

இரவின் இனிமை

யாமம் – நாவல் குறித்த விமர்சனம் ஏழுமலை •• எஸ் ராமகிருஷ்ணனின் வெயிலை போலவே இரவும் எத்தனை இனிமையானதாக இருக்கிறது நெடுங்குருதி வெயில் மையச் சரடாக வும் தொன்மை படிமமாகும் பின்னப்பட்டிருக்கும் இந்த நாவலில் இரவும் வரலாறும் அத்தர் வாசனையும் மையச் சரடாக இருக்கிறது. யாமம் என்றால் இரவு, இரவை போல விளங்கமுடியாத இருளாக மனிதர்களும் அவர்களின் அகமும் இருக்கிறது என்பதையே இந்த யாமம் . ஒரு ஞானியிடம் இருந்து அத்தர் தயாரிக்கும் முறையைப் பெறும் அப்துல் …

இரவின் இனிமை Read More »

மன்னா மெஸ்

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 99வது கிலோ மீட்டர், அச்சிறுப்பாக்கத்தில் உள்ளது மன்னாமெஸ் (MANNA MESS) சுவையான அசைவ உணவுகளைப் பராம்பரிய முறையில் தயாரிக்கிறார்கள். மதுரை செல்லும் போது அங்கே சாப்பிட்டிருக்கிறேன். மிகச் சுவையாக இருந்தது. ஜெயராஜ் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் தேசாந்திரியின் புத்தகங்கள் யாவும் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன. நெடுஞ்சாலைப் பயணத்தில் எனது புத்தகங்கள் தேவைப்படுகிறவர்கள் இங்கே வாங்கிக் கொள்ளலாம்

சிரிப்பை இழந்தவர்

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் ஆங்கில எழுத்தாளர் பி.ஜி. வுட்ஹவுஸ் மற்றும் அவரது மனைவி எத்தேல் ஆகியோர் பிரான்சில் வசித்து வந்தார்கள். நகைச்சுவையான கதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பி.ஜி. வுட்ஹவுஸ் பெரும்புகழ் பெற்றிருந்தார். அமெரிக்காவில் அவரது கதைகளுக்கு இருந்த புகழின் காரணமாக ஹாலிவுட் மற்றும் அமெரிக்க மேடைநாடகங்களுக்கு எழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இதனால் அவரது வருமானம் கொட்டியது. இங்கிலாந்தின் நார்மண்டியில் வசித்த போது அங்கு ஏற்பட்ட வரிப்பிரச்சனை காரணமாகத் தனது தேசத்தை விட்டு வெளியேறி வுட்ஹவுஸ் பிரான்சில் …

சிரிப்பை இழந்தவர் Read More »

ஃபெலுடா- 50

சத்யஜித்ரேயின் ஃபெலுடா (Feluda) கதைகள் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் ஆனதை ஒட்டி சாக்னிக் சாட்டர்ஜி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.  Feluda: 50 years of Ray’s detective என்ற அப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். இயக்குநர் கோவிந்த் நிஹலானி மற்றும் ரேயின் மகன் சந்தீப்பிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சாக்னிக் சாட்டர்ஜி தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் ஆறு மொழிகளில் ஃபெலுடா கதைவரிசை வெளியாகியுள்ளது. வீ.பா.கணேசன் மொழியாக்கத்தில் பாரதி புத்தகாலயம் ஃபெலுடா கதைவரிசையை வெளியிட்டபோது நான் தான் புத்தகங்களை வெளியிட்டேன். …

ஃபெலுடா- 50 Read More »