கதைகளின் பாதை

கதைகள் செல்லும் பாதை பற்றிய வாசிப்பனுபவம் –       தயாஜி, மலேசியா   மிகுந்த மகிழ்ச்சியில் இதனை எழுதுகிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கிற்காக அல்ல. பொழுதும் போகும்தான் அதே சமயம் அதனை தாண்டியது அதன் பயணம். முதலில் கதை எதனால் சொல்லப்படுகிறது யாருக்காகச் சொல்லப்படுகிறது என்பது யோசிக்கையில் மனதில் பல பதில்கள் கிடைக்கும். என் வரையில் அது ஒரு வழிகாட்டியின் தகவல் பறிமாற்றம். வழிகாட்டுதல் என்பது பயணத்திற்கு எத்தனை உதவியாக அமையும். மிக நீண்ட பயணத்தின் சிக்கல்களை கலைவதற்கும், …

கதைகளின் பாதை Read More »

கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்

கு.அழகிரிசாமியின் கதைகள் குறித்துச் சிறந்த விமர்சன நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் என்.ஆர்.தாசன். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் 1987ல் வெளியானது. இன்றும் ரூ 12க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. இது போல மௌனி, பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரை தொகுப்புகளும் மலிவு விலையில் வானதி பதிப்பகத்தில் கிடைக்கின்றன. ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்த கதைகளையும் வாசித்து இப்படி விரிவாக விமர்சனம் எழுதப்படுவதே அவருக்கான உண்மையான அங்கீகாரம். அதை என்.ஆர் தாசன் சிறப்பாகச் செய்திருக்கிறார். என். ஆர். தாசன் அழகிரிசாமியை ஆழ்ந்து …

கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள் Read More »

ஆங்கில வெளியீடு

எனது உறுபசி நாவலின் ஆங்கில மொழியாக்கம் CHRONIC HUNGER, இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பேராசிரியர் வெங்கடாசலம். தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது விலை ரூ 200 சிறார்களுக்காக நான் எழுதிய கிறுகிறுவானம் நாவலின் ஆங்கில மொழியாக்கம் Whirling Swirling Sky, இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் ஜி. கீதா தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது விலை ரூ 180 எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு THE TWO BUBBLES இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பேராசிரியர் ராம்குமார் தேசாந்திரி …

ஆங்கில வெளியீடு Read More »

நைல் நதி சாட்சிகா

எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகியுள்ளது. நைல் நதி சாட்சிகா என்ற இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பாலாஜி. இவர் சாகித்ய அகாதமிக்காக எனது சஞ்சாரம் நாவலையும் தெலுங்கில் மொழியாக்கம் செய்து வருகிறார் Nylu nadhi sakshiga (Short Stories)S. Ramakrishnan’s tamil stories translated by Gillella Balaji விலை ரூ 120 தொடர்புக்கு Desanthiri Pathippagam : D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil …

நைல் நதி சாட்சிகா Read More »

கறை படிந்த சட்டை

.Beijing Bicycle படத்தின் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்ற இயக்குநர் வாங் சியாஷுவாய் உருவாக்கியுள்ள புதிய படம் 11 Flowers. பாடகரும் ஓவியருமான ஒருவரின் பதினோறு வயது மகனைப் பற்றியது. ஹானின் தந்தை  ஓவியம் வரைவதற்காகப் பூக்குவளையில்  மலர்களை அடுக்குவதில் படம் துவங்குகிறது. குறிப்பிட்ட கோணத்தில் மலர்களை எப்படி அவதானிப்பது என்பதை ஆரம்பக் காட்சியிலே மகனுக்குக் கற்றுத் தருகிறார் வாங் ஹானின் தந்தை. கலாச்சாரப் புரட்சிக்குப் பின்பு குய்ஷோ மாகாணத்தில் நடக்கும் கதையிது. பள்ளியில் படிக்கும் வாங் …

கறை படிந்த சட்டை Read More »

அட்டன்பரோவின் காந்தி

காந்தி படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியபோது படப்பிடிப்பில் என்ன நடந்தது. எவ்வாறு அந்தப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன். ஒளி மற்றும் ஒலியின் தரம் மோசமாக இருந்த போதும் காந்தி திரைப்படம் குறித்த அரிய ஆவணப்பதிவு என்பதால் இதனை விரும்பிப் பார்த்தேன். காந்தியிடம் என்னைக் கவர்ந்த விஷயம் அவரது அறிவுத்திறன் மற்றும் நம்பிக்கை . அவர் கொண்டிருந்த லட்சியவாதம் முதன்மையானது. தனது அறிவுத்திறனை அவர் வெளிப்படுத்திய விதமும் அதை எளிய மனிதர்களின் விடுதலைக்காகப் பயன்படுத்திய …

அட்டன்பரோவின் காந்தி Read More »

நாவலின் விதி

எழுத்தாளர் ஐரின் நெமிரோவ்ஸ்கி இரண்டாம் உலகப்போரின் போது ஆஷ்விட்ஷ் முகாமில் கொல்லப்பட்டவர். உக்ரேனிய யூத வம்சாவளியைச் சேர்ந்த இவர் பிரான்சில் வாழ்ந்தவர். பிரெஞ்சு மொழியில் எழுதினார். இவரது Suite française நாவல் அவர் மறைந்து அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மனிதர்களைப் போலவே நாவலின் விதியும் விசித்திரமானதே. எழுதப்பட்ட உடனே எல்லா நாவல்களும் வெளியாவதில்லை. சில நாவல்கள் பதிப்பகத்தாலும். எழுத்தாளரின் விருப்பமின்மை மற்றும் மனச்சோர்வினால் அப்படியே முடங்கிப் …

நாவலின் விதி Read More »

எலியின் சாகசம்

கலை கார்ல்மார்க்ஸ் திருவாரூர். எலியின் பாஸ்வேர்டு நூல் பற்றிய வாசிப்பனுபவம். ••• நூல் : எலியின் பாஸ்வேர்டு ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் விலை : ரூ.35 பதிப்பகம் : தேசாந்திரி இது குழந்தைகளுக்கான / சிறுவர், சிறுமியர்களுக்கான படைப்பு. தொன்று தொட்டு இயங்கி வரும் உணவுச்சங்கிலியில் பாம்புக்கும் எலிக்குமான பிணைப்பில், எது பிழைக்கும் என்ற கேள்வியில், வலியதே பிழைக்கும் என்பதே விடையாய் உள்ளது. எப்படியும் இறுதியில் வெல்வது பாம்புகளாகவே உள்ளன. உயிர்கள் தோன்றிய காலம் தொட்டே வலியது …

எலியின் சாகசம் Read More »

சிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய பூவை என்ற சிறுகதையில் பேரக்கா என்ற ஒரு பெண் வருகிறாள். அவள் ஒரு அநாதை. அண்டி வாழும் அவள் மாடு மேய்க்கிறாள். பாட்டிக்குக் கைகால் பிடித்துவிடுகிறாள். அவளுக்குத் தலைமுடி சரியாக வளரவில்லை என்று மொட்டையடித்துவிடுகிறார்கள். நாலைந்து முறை இப்படிச் செய்தபிறகே அவளுக்குக் கூந்தல் வளருகிறது. அவளது கல்யாண நாளை பற்றியதே கதை. மணப்பெண் என்பதால் அவளை அலங்கரித்துத் தலையில் பூச்சூடுகிறார்கள். இந்தப் பூவாசனை தாங்காமல் பேரக்கா மயங்கிவிடுகிறாள். காரணம் இதுவரை அவள் பூச்சூடி …

சிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை Read More »

மலையாளத்தில்

மாத்யமம் மலையாள இதழில் எனது பஷீர் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பொன்மனை வல்சகுமார்.