அன்று கண்ட முகங்கள்

தமிழ் நாடகக் கலைமணிகள் என்றொரு நூலைச் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் எழுதியிருக்கிறார். சிறந்த நடிகரான வெங்கட்ராமன் நாடகம் சினிமா இரண்டிலும் நீண்டகால அனுபவம் கொண்டவர். அவர் தனது நினைவுகளைத் தொடராக எழுதியிருக்கிறார். அதை அறந்தை நாராயணன் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். இந்த நூல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது. அந்தக் கால நாடக உலகம் மற்றும் திரையுலகம் சார்ந்த ஆளுமைகளையும் அனுபவங்களையும் வெங்கட்ராமன் சுவைபட எழுதியிருக்கிறார். இதில் மூன்று கட்டுரைகள் மிக முக்கியமானவை. நாடகவுலகின் ராணியாகக் கொண்டாடப்பட்ட …

அன்று கண்ட முகங்கள் Read More »

விநோத சங்கீதம்

நியூ கினியாவின் மலைக் காடுகளுக்குள் வாழும், சாக்சனி பறவையின் தோற்றமும் குரலும் வசீகரமாகயிருக்கிறது. தனது துணையை ஈர்ப்பதற்காக அது எழுப்பும் விநோதமான குரல் சங்கீதம் போலவே ஒலிக்கிறது. மரத்தில் சாக்சனி துள்ளிக் குதித்து எடுக்கும் பயிற்சிகளும் குரலை உச்சமாக ஒலிப்பதில் வெளிப்படுத்தும் உற்சாகமும் அலாதியானது. பெண் பறவையை ஈர்க்கும் வரை இதன் குரல் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. காணொளி இணைப்பு.

வாழ்த்துகள்

கவிஞர் சுகுமாரன் ஆசிரியராகப் பணியாற்றிக் காலச்சுவடு 100 ஆவது இதழ் வெளியாகியுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காலச்சுவடு பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறது. இந்த இதழின் முகத்தை உருவாக்கியதிலும். அதன் தனித்துமிக்கப் பார்வைகள் மற்றும் படைப்புகளைத் தேர்வு செய்து வெளிக்கொண்டு வந்ததிலும் சுகுமாரனின் பங்கு முக்கியமானது. சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு அவரது கனவின் வெளிப்பாடாக இருந்தது. அதன் அடுத்த கட்ட நகர்வினை, புதிய சாளரங்களைத் திறந்து வைத்ததில் சுகுமாரன் …

வாழ்த்துகள் Read More »

ஒரு அடியீடு மட்டும்

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற மலையாள எழுத்தாளர் என். பி. முஹம்மதுவின் ஒரு அடியீடு மட்டும் மறக்கமுடியாத சிறுகதை. பாலைவனத்தின் காட்சிகளை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இவரது வேறு கதைகள் எதுவும் தமிழில் வெளியாகியுள்ளதா எனத் தெரியவில்லை. இந்தக் கதையை வாசித்துப் பல ஆண்டுகள் ஆகியும் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. நீதிக்கதைகளின் சாயலில் எழுதப்பட்டிருந்த போதும் கொள்ளைக்கார யூசுஃப் யாத்ரீகனை சந்திக்கும் காட்சியும் நன்மையின் பாதையில் செல்ல முற்படுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அடி தான் இடைவெளி …

ஒரு அடியீடு மட்டும் Read More »

சொற்களின் புதிர்பாதை

– வாசிப்பு அனுபவம் தயாஜி, மலேசியா தேர்ந்த எழுத்தாளர்கள் தன் படைப்பின் மீது மட்டுமே தம் வாசகர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை விரும்புவதில்லை. தான் ரசித்த தன்னைப் பாதித்த பிற படைப்புகளையும் பிற படைப்பாளிகளையும் தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறார்கள். அதுவே தம் வாசகர்களுக்கு அவர்கள் செலுத்தும் நன்றியாகப் பார்க்கின்றேன். வாசகர்களின் வாசிப்பை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்ல அதுவே வழி. இவ்வாறாக எஸ்.ராவின் கட்டுரைகள் வழி பல மொழி படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் அறிந்துக் கொண்ட …

சொற்களின் புதிர்பாதை Read More »

காற்றில் பறந்த மலர்கள்

ஜப்பானிய இயக்குநர் யசுஜிரா ஓசு இயக்கிய பெரும்பான்மை திரைப்படங்கள் திருமணத்தை மையமாக் கொண்டவை. தகுந்த இடத்தில் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்ய விரும்பும் தந்தை. தனிமையில் வசிக்கும் தந்தைக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் மகள். விதவையான பெண்ணுக்கு நடக்கும் மறுதிருமணம், குழந்தையோடு தனித்து வாழும் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆசை. உறவிற்குள் திருமணம் செய்வதில் ஏற்படும் சிக்கல். காதல் திருமணத்தினை வீடு எப்படிப் புரிந்து கொள்கிறது என்ற சிக்கல். சகோதரிகளுக்குள் திருமணத்தால் ஏற்படும் …

காற்றில் பறந்த மலர்கள் Read More »

சிறப்பு சலுகை

தேசாந்திரி பதிப்பகம் புதிய சிறப்பு சலுகையினை அறிவித்துள்ளது இணைப்பு தேசாந்திரி பதிப்பகம் , டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 (044)-23644947 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/ desanthiri-travel-combo  

முடிவில்லாத அறைகள்

1924 ஆம் ஆண்டில், ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பர்ட் ஒரு விசித்திரமான கேள்வியை எழுப்பினார்  அதாவது சில முடிவிலிகள் மற்றவற்றை விடப் பெரியதா? (are some infinities bigger than others?)  அவர் தந்த பதில் ஆம் என்பதே. அதை விவரிப்பதற்காக எண்ணிக்கையற்ற அறைகள் கொண்ட ஒரு ஹோட்டலைக் கற்பனை செய்து கொள்ளும்படியாக செய்தார். அதன் எல்லா அறைகளிலும் விருந்தினர்கள் இருந்தார்கள். அங்கே அறை காலியில்லை என்ற பலகை தொங்குகிறது. ஆனால் புதிதாக ஒருவரை தங்க அனுமதிக்க …

முடிவில்லாத அறைகள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கி நாடகங்கள்

2016ம் ஆண்டில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாடகமாக எழுதினேன். தியேட்டர் லேப் ஜெயராவ் தன் குழுவினருடன் அதை மேடையேற்றினார். ஒரு மணி நேர நாடகமது. சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நிகழ்த்தப்பட்ட அந்த நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு முன்பு புதுவை பல்கலைக்கழகத்தில் முருகபூபதி நாடகக்கலை படித்த போது அவருக்காக மரணவீட்டின் குறிப்புகள் எனத் தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from a Dead House யை மையமாகக் கொண்டு நாடகம் எழுதினேன். அந்த நாடகம் புதுவையில் …

தஸ்தாயெவ்ஸ்கி நாடகங்கள் Read More »

கவிதையின் ரகசியப் பாதை

அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் பில்லி காலின்ஸ்.(billy collins) Poet Laureate ஆகத் தேர்வு பெற்றவர், நியூயார்க்கில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.. Questions about angels: poems 2) . Picnic, lightning. 3) Sailing alone around the room: new and selected poems. 4) Nine horses: poems 5) Trouble with poetry and other poems. 6) Ballistics: poems 7) Aimless love: new and selected poems. …

கவிதையின் ரகசியப் பாதை Read More »