அபாயவீரன்

.ஒரு புத்தகத்தின் பக்கங்களை பகடையை உருட்டி அதில் விழும் எண்ணிற்கு ஏற்ப படிக்க வேண்டும் என்ற முறையில் எழுதப்பட்ட ஆங்கில சிறார் நூல் ஒன்றை 2008ல் படித்தேன். என் பையன் ஆகாஷ் அப்போது ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்காக வாங்கப்படும் புத்தகங்களை நானும் படிப்பேன். புத்தகத்தை வைத்து விளையாடுவது பிடித்திருந்த காரணத்தால் அது போன்ற ஒன்றை நானே எழுதலாம் என்று முடிவு செய்து சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கினேன். அதை வீட்டிற்கு வரும் சிறுவர்களிடம் …

அபாயவீரன் Read More »

மாடத்தி

லீனா மணிமேகலை தயாரித்து இயக்கியுள்ள மாடத்தி திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழ் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் சிறந்த படம். கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான லீனா தொடர்ந்து மாற்றுசினிமாவை முன்னெடுத்து வருபவர். தனது ஆவணப்படங்களின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லீனா மாடத்தியின் வழியே புதிய திரைச்சாதனையைச் செய்திருக்கிறார். சுயாதீனப்படங்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. அந்த வகையில் மாடத்தி மிக முக்கியமான படம் என்பேன். மாடத்தி கோவிலுக்குச் செல்லும் புதுமணத்தம்பதிகளின் வருகையில் …

மாடத்தி Read More »

கதைகளின் வழியே

எழுத்தாளர் வால்டர் பெஞசமின் கதை சொல்வதன் முக்கியத்துவத்தை விளக்கி The Storyteller Essays என ஒரு கட்டுரை தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். சிறப்பான கட்டுரைகள் உள்ளன. அதில் உள்ள ஒரு கட்டுரையில் கதைகளில் சில விஷயங்கள் ஏன் என்று விளக்கப்படாமல் விடப்படுகின்றன. அந்த விடுபடல் தான் கதையின் சுவாரஸ்யம். அதுவே கதைகளைக் காலம் தாண்டி பேசவைக்கின்றன என்கிறார். பாரசீக பேரரசர் காம்பிசஸால் தோற்கடிக்கப்பட்டா மன்னர் சம்மேனிடஸ் தனது மகள் சிறைபிடிக்கப்பட்டபோதோ, மகன் மரணதண்டனையை நோக்கிச் செல்லும் போதோ கண் …

கதைகளின் வழியே Read More »

வேம்பலையின் மனிதர்கள்

ஜேகே நெடுங்குருதி நாவல் குறித்த விமர்சனம் புத்தகங்கள் எப்போதும் ஆச்சரியங்களையே நமக்கு அளிக்கின்றன. வார இறுதியில், இன்னமும் சில நாட்களில் இழுத்து மூடப்படப்போகும் புத்தகசாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லா புத்தகங்களையும் கழிவு விலையில் ஐந்து டொலர்கள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். புத்தக வரிசையில் லாகிரியின் லோ லாண்ட் இருந்தது. கைட் ரன்னர் இருந்தது. லோங்கிடியூட் இருந்தது. டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி பிரச்சட் என்று ஆதர்சர்கள் அனைவருமே, ஐந்து டொலர்களுக்குள் அடங்கியிருந்தார்கள். ஐநூறு பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். …

வேம்பலையின் மனிதர்கள் Read More »

வெளிச்சத்தைத் தேடி

பாவண்ணன் – “செகாவின் மீது பனி பெய்கிறது” – விமர்சனக் கட்டுரை (திண்ணை இணைய இதழில் வெளிவந்தது) ••• தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும் அழவும் செய்கிற மனிதன் எழுத்துகளின் வழியாக உருப்பெற்று எழும் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டு சிரிக்கவும் அழவும் தூண்டப்படுகிறான். மானுட குலத்தின் துக்கத்துக்கும் ஆனந்தத்துக்கும் …

வெளிச்சத்தைத் தேடி Read More »

மணமகளின் காதல்

Brides என்ற கிரேக்கத் திரைப்படத்தைப் பார்த்தேன். சமகாலக் கிரேக்க திரைப்படங்கள் ஒளிப்பதிவிலும் இசையிலும் புதிய கதை சொல்லும் முறையிலும் உச்சத்தை அடைந்திருக்கின்றன. பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கிய ஐந்து படங்களை முன்னதாகப் பார்த்திருக்கிறேன். இதில் 2013ல் வெளியான Little England நிகரற்ற படம். கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் இதுவே. எண்பது வயதான வோல்காரிஸ் மிகச்சிறந்த படங்களை இயக்கியுள்ளார், சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார். கடலோடிகளின் வாழ்க்கையை மையமாக் கொண்டு கிரேக்கத்தில் நிறையப் …

மணமகளின் காதல் Read More »

வெளியில் ஒருவன்

எனது முதற்புத்தகம் வெளியில் ஒருவன். சென்னை புக்ஸ் வெளியிட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டுவர ஏற்பாடு செய்தவர் எழுத்தாளர் தமிழ்செல்வன். அவரே கதைகளைத் தேர்வு செய்து தொகுப்பை உருவாக்கிவிட்டார். நான் பதிப்பாளரைச் சந்திக்கவேயில்லை. இப்படி ஒரு அதிர்ஷ்டம் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது. அந்த வகையில் அண்ணன் தமிழ்செல்வனை என்றும் நன்றியோடு நினைவு கொள்வேன். திருநெல்வேலியில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டு அரங்கில் இந்த நூல் வெளியிடப்பட்டது. அதற்காக என்னை அழைத்தபோது தான் புத்தகம் வெளிவரப்போகும் தகவலே …

வெளியில் ஒருவன் Read More »

நாகரீகத்தின் கதை

பிபிசி தயாரிப்பில் 1969ல் வெளியான கலைவரலாற்று தொடரான Civilisation 13 பகுதிகளைக் கொண்டது. இதற்கு இணையாக இன்று வரை ஒரு கலைவரலாற்றுத் தொடர் வெளியாகவில்லை. இந்தத் தொடர் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மிகச்சிறந்த ஒலி ஒளியில் காணக்கிடைக்கிறது. கலைவிமர்சகர் கென்னத் கிளார்க் இத் தொடரைத் தயாரித்து வழங்கினார். அவர் ஒரு நிகரற்ற கலையாளுமை. ஓவியம், சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை குறித்த அவரது பார்வையும் ஆழ்ந்த அவதானிப்புகளும் பிரமிப்பூட்டக்கூடியவை. இந்தத் தொடருக்காகக் கென்னத் கிளார்க் எழுதிய உரை சிறு …

நாகரீகத்தின் கதை Read More »

குண்டூசியின் பயணம்

– நித்தியானந்தம். ஒரு குண்டூசியை வைத்துக் கொண்டு இவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு கதையைச் சொல்ல முடியுமா என்று வியப்பாகவே இருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய அக்கடா என்ற சிறுவர் நூலை படித்தேன். விறுவிறுப்பான கதை. நல்ல கற்பனை. நீண்டகாலமாக யாரும் பயன்படுத்தாமல் போட்டு வைத்த ஒரு குண்டூசி தனது நண்பர்களைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தின் கதையே அக்கடா. ஒவ்வொரு குண்டூசியும் ஒரு இடத்தில் இருக்கிறது. அவர்களைத் தேடிப் போய்ப் பார்த்து நலம் விசாரிக்கிறது அக்கடா. குண்டூசிகளை எல்லாம் …

குண்டூசியின் பயணம் Read More »

வகுப்பறையின் பாடல்

சிறந்த சிறார் எழுத்தாளரான ஷெல் சில்வர்ஸ்டைன்(Shel Silverstein) எழுதிய சிறார் பாடல்களையும் கதைகளையும் விரும்பி வாசித்திருக்கிறேன். இவரைப் போலவே  ரோல்ட் டாலின் (Roald Dahl) கதைகளையும் தேடிப் படித்திருக்கிறேன். இந்த வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த சிறார் எழுத்தாளர், பாடலாசிரியர். ஆலன் ஆல்பெர்க் (Allan Ahlberg), இவர் எழுதிய கதைகளுக்கு அவரது மனைவி ஜேனட் ஆல்பெர்க் அழகான ஓவியங்களை வரைந்திருக்கிறார். முப்பது ஆண்டுகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் ஆலன். பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற இந்த …

வகுப்பறையின் பாடல் Read More »