நீரும் நிலமும்

Lakshmanrekha என்றொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நந்தன் சக்சேனா மற்றும் கவிதா பஹ்லி இயக்கியுள்ள இப்படம் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமத்தின் நீர்வளத்தை லட்சுமன் சிங் எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் லபோடியாவினைச் சுற்றியிருந்த 58 கிராமங்களின் விதியை மாற்றியது படத்தின் துவக்கக் காட்சியில் டெல்லியின் குடியிருப்பு ஒன்றில் ஆழ்துளைக் கிணறு போடுவதற்காக இயந்திரம் வருகிறது. போர் போடும் பணி துவங்குகிறது ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை.. நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு போய்விட்டது. எங்கே போனது …

நீரும் நிலமும் Read More »

உண்மையின் அடையாளம்

இந்து தமிழ் திசை நாளிதழில் நான் எழுதிய சிறந்த தமிழ் படங்கள் குறித்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெண்ணிற நினைவுகள் என தனி நூலாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்தத் தொகுப்பிலுள்ள ஒரு கட்டுரை •• ஒரு தமிழ்ப் படத்தின் தொடக்கத்தில் அந்தப் படத்தின் கதையை உருவாக்க எந்தெந்தப் புத்தகங்களெல்லாம் துணையாக இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்ட ஒரே படம் ‘சிவகங்கை சீமை’. படத்தின் டைட்டில் காட்சியில் ‘சிவகங்கை சரித்திரக் கும்மியும் அம்மானையும்’, ‘திருநெல்வேலி மானுவல்’, ‘ராமநாதபுரம் …

உண்மையின் அடையாளம் Read More »

ரிதுபர்னோ கோஷின் தாகூர்

வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் மகாகவி தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். Jeevan Smriti என்ற இந்த ஆவணப்படமே கோஷின் கடைசிப்படம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் இன்று இணையத்தில் காணக்கிடைக்கிறது. 12 தேசிய விருதுகளை பெற்றுள்ள ரிதுபர்னோ கோஷ் கவித்துவமான சினிமாவை உருவாக்கியதில் முன்னோடி. இவர் தாகூரின் கதைகளை சிறந்த திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் தாகூரின் 150வது ஆண்டினை முன்னிட்டு மத்திய அரசின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோலவே சத்யஜித்ரே தாகூரைப் பற்றி …

ரிதுபர்னோ கோஷின் தாகூர் Read More »

கோடைகாலப் பறவை

புதிய சிறுகதை ரங்கநாத் கையில் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகளிட்ட சிறகொன்றை வைத்திருந்தான். நீளமான அச்சிறகு வசீகரமாகயிருந்தது “அது என்ன பறவையின் சிறகு“ என்று கேட்டாள் லூசி. “பெயர் தெரியவில்லை. ஆனால் இப்படியான சிறகை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்“ என்றான் ரங்கநாத் கோத்தகிரியிலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றினாள் லூசி. தங்கபிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கூர்மையான நாசி, ஐந்தரை அடிக்கும் மேலான உயரம். ஒடிசலான உடல்வாகு. அரக்கு வண்ண காட்டன் புடவை …

கோடைகாலப் பறவை Read More »

ரெட் பைனின் பயணம்

முப்பது நாட்களில் முப்பது கவிஞர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுச் சீனாவில் ரெட் பைன் பயணம் செய்த அனுபவத் தொகுப்பே Finding Them Gone. வித்தியாசமான பயணநூல். இரண்டு வேறு காலங்களுக்கு இடையே அவர் பயணம் செய்து திரும்பியதை உணர முடிகிறது பீஜிங்கிலிருந்து தனது பயணத்தைத் துவங்கும் ரெட்பைன் மின்சார ரயிலில் சென்று கன்பூசியஸின் சொந்த ஊரை முதலில் காணத் திட்டமிடுகிறார். சீனாவின் அதிநவீன ரயில் சேவை பிரமிப்பூட்டக்கூடியது. ரயில் நிலையங்கள் விமானநிலையம் போலவே அமைக்கப்பட்டிருப்பதையும், …

ரெட் பைனின் பயணம் Read More »

மீட்கப்படும் உண்மைகள்

. The Dig என்ற புதிய பிரிட்டிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். ஜான் பிரஸ்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு சைமன் ஸ்டோன் இயக்கிய படம் 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற சுட்டன் ஹூ அகழ்வாராய்ச்சியின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு இத்தனை உணர்ச்சிப்பூர்வமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருப்பது வியப்பளிக்கிறது. மிகச் சிறந்த ஒளிப்பதிவு. படத்தொகுப்பு மற்றும் சிறந்த நடிப்பு படத்தோடு நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது. நிறைய நேரங்களில் நாம் ஒரு திரைப்படம் …

மீட்கப்படும் உண்மைகள் Read More »

ரெட் பைனின் சீனக்கவிதைகள்

சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது. பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார். இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் …

ரெட் பைனின் சீனக்கவிதைகள் Read More »

வாழ்வின் நிமித்தம்

திப்பு சுல்தான் நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம் •• நிமித்தம், நான் பல முறை படித்த புத்தகம் மட்டுமல்ல என்றெல்லாம் யாரையெல்லாம் தனிமை வாட்டுகிறதோ அப்போதெல்லாம் அவர்களெல்லாம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல். தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண நாளின் முன் இரவில் கதை தொடங்குகிறது. தன் திருமணத்துக்கு தன் நண்பர்களை எதிர்பார்க்கிறான். யாருமே இல்லை. மாப்பிள்ளையின் தோழர்களாக வந்து திருமண நாளைக் கொண்டாட வேண்டிய அவன் வயது ஒத்த சகாக்கள் எல்லாரும் அப்பாக்களாகவும் …

வாழ்வின் நிமித்தம் Read More »

காந்தியின் பாடல்

காந்தியடிகளால் விரும்பி பாடப்பட்ட வைஷ்ணவ ஜன தோ பாடலைப் பற்றி Gandhi’s Song என்ற புதிய ஆவணப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இரவில் அந்த ஆவணப்படத்தைப் பார்த்தேன். மாயங்க் சாயா எழுதி இயக்கியிருக்கிறார். நேர்த்தியான ஆவணப்படம். துஷார் காந்தியின் நேர்காணல் படத்தின் தனிச்சிறப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங் மேத்தாவால் எழுதப்பட்ட இந்த குஜராத்தி மொழிப்பாடல் “பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பதை விளக்குகிறது. இந்த ஆவணப்படம் நர்சிங் மேத்தாவின் வாழ்க்கை …

காந்தியின் பாடல் Read More »

நிறங்களை இசைத்தல்

ராபர்ட் லாரன்ஸ் பின்யன் கலைவரலாற்றைப் பற்றிச் சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது Painting In The Far East கீழைத்தேயக் கலைகள் குறித்து மிகச் சிறந்த அறிமுகத்தைத் தருகிறது. மேற்கத்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கும், சீன ஜப்பானிய ஒவியங்கள் சிற்பங்களுக்குமான அடிப்படை வேறுபாடு மற்றும் தனித்துவம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த நூல் பல்வேறு ஒவியக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. தாகூர் இதனைச் சாந்தி நிகேதனின் ஒவியப்பள்ளியில் ஆதார நூலாகப் பயிற்றுவித்திருக்கிறார். பின்யனை வாசிக்கும் போது தேர்ந்த பேராசிரியரிடம் …

நிறங்களை இசைத்தல் Read More »