நிறங்களை இசைத்தல்

ராபர்ட் லாரன்ஸ் பின்யன் கலைவரலாற்றைப் பற்றிச் சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது Painting In The Far East கீழைத்தேயக் கலைகள் குறித்து மிகச் சிறந்த அறிமுகத்தைத் தருகிறது. மேற்கத்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கும், சீன ஜப்பானிய ஒவியங்கள் சிற்பங்களுக்குமான அடிப்படை வேறுபாடு மற்றும் தனித்துவம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த நூல் பல்வேறு ஒவியக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. தாகூர் இதனைச் சாந்தி நிகேதனின் ஒவியப்பள்ளியில் ஆதார நூலாகப் பயிற்றுவித்திருக்கிறார். பின்யனை வாசிக்கும் போது தேர்ந்த பேராசிரியரிடம் …

நிறங்களை இசைத்தல் Read More »

கவிதை எனும் வாள் வித்தை

லி போ (Li Po) அல்லது லி பாய் (Li Bai ) என்று அழைக்கப்படும் சீனக்கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் ஹா ஜின் The Banished Immortal என விரிவான நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான நாவலாசிரியர் ஒரு கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பது அபூர்வமான விஷயம். ஆகவே இதை விரும்பி வாசித்தேன். லி போ (Li Po) மற்றும் து ஃபூ (Tu Fu) இருவரும் நெருக்கமான நண்பர்கள், சீனாவின் மிகப் பெரிய கவிஞர்களில் …

கவிதை எனும் வாள் வித்தை Read More »

வீடு திரும்பிய நாட்கள்

ரஷ்ய இயக்குநர் பாவெல் லுங்கின் இயக்கிய இஸ்ரேலியத் திரைப்படம் Esau. பைபிள் கதை ஒன்றின் நவீன வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய எழுத்தாளர் மீர் ஷாலேவின் நாவலை மையமாகக் கொண்ட இந்தப்படம் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேரும் போது என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது “அன்றிலிருந்து இன்றுவரை மகிழ்ச்சியும் துரோகமும் ஒன்றுபோலவே இருக்கிறது“ என்று படத்தின் ஒரு காட்சியில் ஏசா குறிப்பிடுகிறார். அது தான் படத்தின் மையப்புள்ளி குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசலும் கசப்புணர்வும் காலம் மாறினாலும் விலகிப்போய்விடுவதில்லை. …

வீடு திரும்பிய நாட்கள் Read More »

துறவின் பாதை

ரெட் பைன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் அமெரிக்க எழுத்தாளரான பில் போர்ட்டர் பௌத்தம் ஞானம் மற்றும் சீன இலக்கிய நூல்களை தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார். குறிப்பாகத் தாவோயிசம் மற்றும் பௌத்த சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதில் இவரே முன்னோடி.. 1989 அவர் சீனாவில் விரிவாகப் பயணம் செய்தார். அப்போது சுங்கான் மலைகள் வழியாகப் பௌத்த துறவிகளைத் தேடி அலைந்து பெற்ற அனுபவத்தை Road to Heaven என்ற நூலாக எழுதியிருக்கிறார். இந்த நூல் …

துறவின் பாதை Read More »

ஆசையின் மலர்கள்

டேவிட் லீன் இயக்கிய Brief Encounter ஒரு அழகான காதல் கதை. காதலிக்கும் இருவரும் நடுத்தரவயதைச் சேர்ந்தவர்கள். தற்செயலாக ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. ஒரு ரயில் நிலையத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு அழகான காதல்கதையை உருவாக்கியிருப்பது எழுத்தாளர் நோயல் கோவர்ட்டின் தனித்துவம். ரஷ்ய நாவல் ஒன்றைப் படிப்பது போலவே இருக்கிறது. மில்ஃபோர்ட் செல்வதற்காக லாரா ரயில் நிலையத்தில் காத்திருப்பதில் படம் துவங்குகிறது. அப்போது நாம் காணும் காட்சி படத்தின் பிற்பகுதியில் மறுபடியும் இடம்பெறுகிறது. ஆரம்பக் காட்சியின் …

ஆசையின் மலர்கள் Read More »

துர்கனேவும் தஸ்தாயெவ்ஸ்கியும்

தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிய மிகச்சிறந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருகிறார் சர்வோத்தமன். துர்கனேவின் நாவலையும் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலையும் ஒப்பிட்டுள்ள இந்த கட்டுரை மிக முக்கியமானது. அவரது வலைத்தளத்திலிருந்து இதனை மீள்பிரசுரம் செய்கிறேன்•• தந்தைகளும் மகன்களும் : துர்கனேவும் தஸ்தாயெவ்ஸ்கியும் சர்வோத்தமன் சடகோபன்••• துர்கனேவ் எழுதிய தந்தைகளும் மகன்களும் (Fathers and Sons – 1862)1 , தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய பதின் (The Adolescent – 1875)2 ஆகிய இரண்டு நாவல்களும் ரஷ்யாவில் நில அடிமைகளின் விடுதலையின் காலகட்டத்தையும் அந்தக் காலகட்டத்தில் …

துர்கனேவும் தஸ்தாயெவ்ஸ்கியும் Read More »

தேசாந்திரி அறிவிப்பு

தேசாந்திரி பதிப்பகம் அனைத்து நூல்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. புதிதாக கர்னலின் நாற்காலி, தேசாந்திரி, எனது இந்தியா ஆகிய மூன்று நூல்களும் கெட்டி அட்டைப்பதிப்பாக வெளிவந்துள்ளது. எனது புதிய நூல்களுக்கும் இதே சலுகை வழங்கப்படுகிறது ஆன்லைனில் வாங்க https://www.desanthiri.com/ தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93தொலைபேசி (044)-23644947desanthiripathippagam@gmail.com

லாட்சோ டிரோம்

பல்வேறு நாடுகளிலுள்ள நாடோடி இசைக்கலைஞர்களைப் பற்றிய சிறந்த ஆவணப்படம் லாட்சோ டிரோம் டோனி கேட்லிஃப் இயக்கிய இந்தப் பிரெஞ்சு ஆவணப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. ரோமானி என்று அழைக்கப்படும் ஜிப்சிகள் உலகெங்கும் வாழுகிறார்கள். இவர்களின் பூர்வீகம் இந்தியா எனவும், 11ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் என்றும் கருதுகிறார்கள் இந்தியாவின் தார் பாலைவனத்தில் தொடங்கி எகிப்து, துருக்கி, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் பிரான்ஸ் வழியாக நாடோடி இசைக்குழுவினர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை விவரிக்கிறது இந்த …

லாட்சோ டிரோம் Read More »

புகைப்படம் சொல்லும் உண்மை

ஒரு புகைப்படத்தால் உலகத்தையே தன் பக்கம் திருப்ப முடியும். சிறந்த புகைப்படக்கலைஞர்கள் சமகாலப் பிரச்சனைகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள். குறிப்பாக உலகப்போர் மற்றும் நாஜி இனப்படுகொலையின் குரூரங்களையும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் பாதிப்புகளையும் உலகமறியச் செய்ததில் புகைப்படக்கலைஞர்களின் பங்கு முக்கியமானது. இன்றும் அழிந்து வரும் கானுயிர் வாழ்க்கை மற்றும் பற்றி எரியும் சமூகப்பிரச்சினைகளைத் தேடிப் புகைப்படக்கலைஞர்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். தனது புகைப்படத்தின் வழியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தருகிறார்கள். புகைப்படம் பொய் …

புகைப்படம் சொல்லும் உண்மை Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் ஐரோப்பியப் பயணம்.

WINTER NOTES ON SUMMER IMPRESSIONS  தஸ்தாயெவ்ஸ்கியின் ஐரோப்பியப் பயண அனுபவம் குறித்த நூலாகும். 1862 ஆம் ஆண்டு, தஸ்தாயெவ்ஸ்கி மேற்கு ஐரோப்பாவுக்குப் பயணம் சென்றார். அப்போது அவருக்கு வயது 41. சைபீரியாவில் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு பீட்டர்ஸ்பெர்க் திரும்பியிருந்தார். மிகுந்த மனச்சோர்வும் உடல் வேதனையும் கொண்டிருந்த அவர் அதிலிருந்து விடுபட வேண்டி நீண்ட பயணத்தை மேற்கொள்ள விரும்பினார். இதுவே அவரது முதல் வெளிநாட்டுப்பயணமாகும். 7 ஜூன் 1862 இல் பயணத்தினை மேற்கொண்டார். இதில் , கொலோன், பெர்லின், …

தஸ்தாயெவ்ஸ்கியின் ஐரோப்பியப் பயணம். Read More »