உலகம் அறியாத காதல்.
ரோம் நகரிலுள்ள பழைய குடியிருப்பு ஒன்றில் மேல் மாடியில் வசிக்கிறாள் அன்டோனியெட்டா. அவள் ஆறு பிள்ளைகளின் தாய். அவளது கணவன் இமானுவேல் முசோலினியின் தீவிர விசுவாசி. கட்சி உறுப்பினர். 1930 களில் ரோமில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் அவர்கள் வாழுகிறார்கள். ஒரு நாள் காலை அவள் படுக்கையிலிருந்து எழுந்து தனக்கான காபியைத் தயாரித்து அருந்திக் கொண்டு பிள்ளைகள் ஒவ்வொருவராக எழுப்பிவிடுகிறாள். படுக்கையிலிருந்த கணவனை எழுப்பி நேரமாகிவிட்டது என்று துரத்துகிறாள். அவளது காபியின் …









