நிறைவேறும் கனவுகள்

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இலக்கிய மாமணி விருது மூன்று பேருக்கு வழங்கப்படும். ஞானபீடம், சாகித்ய அகாதமி உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் கனவு இல்லம் கட்டித்தரப்படும் மதுரையில் எழுபதுகோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் உருவாக்கப்படும் என்று மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த நற்செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழையும் தமிழ் …

நிறைவேறும் கனவுகள் Read More »

மறையாத அதிகாரம்

.பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது இலங்கையின் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் குறுநில மன்னர்களைப் போல மக்கள் மீது அதிகாரம் செலுத்தினார்கள். சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.. அப்படிப்பட்ட ஒருவரின் கதையைத் தான் Elephant Walk திரைப்படம் விவரிக்கிறது. படம் ஜான் வைல் என்ற தேயிலைத் தோட்ட உரிமையாளர் இங்கிலாந்திற்கு வருவதில் துவங்குகிறது. அங்கே ரூத் என்ற வாடகை நூலகத்தினை நடத்தி வரும் இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான் வைல். ரூத்திற்கு இலங்கையைப் பற்றி எதுவும் …

மறையாத அதிகாரம் Read More »

கதையின் வெளிச்சம்.

திருச்சியை சேர்ந்த மீ. அ. மகிழ்நிலா எட்டாம் வகுப்பு பயிலுகிறார். எனது ஏழு தலை நகரம் சிறார் நாவலுக்கு மகிழ்நிலா எழுதியுள்ள விமர்சனம் ••• அக்கடா, கிறு கிறு வானம், ஏழு தலை நகரம் போன்ற நாவல்களையும் எழுதத் தெரிந்த புலி, தலை இல்லாத பையன்  போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். இவற்றுள் ஏழு தலை நகரம் என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் எனக்கு இந்தக்  கதை என் நண்பர்களின் …

கதையின் வெளிச்சம். Read More »

அன்னா ஸ்விர் கவிதைகள்

நான் என்னிலிருந்து வெளியே நீந்திப் போனேன் என்னைக் கூப்பிடாதே நீயும் உன்னிலிருந்து வெளியே நீந்திப் போ நாம் நீந்திப் போய்விடுவோம், நமது உடல்களை விட்டு கரையில் ஒரு ஜோடி கடற்கரைச் செருப்புகள் போல அன்னா ஸ்விர் (Anna Swir) போலந்தின் முக்கியக் கவிஞர். இவரது தந்தை ஒரு ஓவியர். ஆகவே குழந்தைப் பருவம் முழுவதும் ஒவியக்கூடத்திலே கழிந்தது. கல்லூரி படிப்பை முடித்த அன்னா சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றியிருக்கிறார். …

அன்னா ஸ்விர் கவிதைகள் Read More »

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள்

ஒரு சிறுகதையை ஆழ்ந்து படித்து எவ்வளவு சிறப்பாக ஆராய முடியும் என்பதற்கு உதாரணமாக உள்ளது ஜிஃப்ரி ஹாஸன் எழுதியுள்ள இந்த விமர்சனக்கட்டுரை இலங்கையில் வாழும் ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதைகளும் மொழிபெயர்ப்புகளும செய்து வருகிறார். பதாகை இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. பதாகைக்கும் ஜிஃப்ரி ஹாஸனுக்கும் எனது அன்பும் நன்றியும் •••• ஒரு காகிதப்பறவையின் சிறகுகள் – எஸ்.ரா.வின் காகிதப்பறவைகள் கதை கிளர்த்தும் சலனங்கள் -ஜிஃப்ரி ஹாஸன் –இலங்கை தமிழ்ச்சிறுகதையில் இருவேறுபட்ட பரிமாணங்களை மொழிசார்ந்து பரீட்சித்துப் பார்த்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். …

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள் Read More »

உப பாண்டவம்- மலையாளம்

எனது நாவல் உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகவுள்ளது. டிசி புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள். இந்த ஆண்டு மலையாளத்தில் எனது மூன்று நூல்கள் வெளியாக இருக்கின்றன.

மெளனியுடன் கொஞ்ச தூரம்

திலீப்குமார் எழுத்தாளர் திலீப்குமார் மெளனியின் படைப்புலகம் குறித்து ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன நூலை எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மிக முக்கியமான நூல் அந்த நூலின் துவக்கத்தில் திலீப்குமார் தனது இலக்கியப்புரிதலை அழகாக வரையறை செய்து கொண்டிருக்கிறார். •••• மௌனியைப் பற்றிப் பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடுமையாகத் தூஷிக்கவும் பலர் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’; ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், …

மெளனியுடன் கொஞ்ச தூரம் Read More »

மணிகௌல்

1983ம் ஆண்டு மணிகௌல் இயக்கிய மிகச்சிறந்த ஆவணப்படம் Dhrupad. ஹிந்துஸ்தானி இசையின் மேன்மையைச் சொல்லும் இந்தப்படம் மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது. குறிப்பாக இதன் இசை மெய்மறக்க செய்கிறது துருபத் என்பது ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையின் மிகப் பழமையான வடிவமாகும், தலைமுறை தலைமுறைகளாகப் பாடிக்கொண்டிருக்கும் ஹிந்துஸ்தானி பாடகர்கள் இந்த மரபை அப்படியே தொடருகிறார்கள். தியானத்தின் போது நாம் அடையும் அமைதியை, சந்தோஷத்தை இந்தப்படமும் நமக்குத் தருகிறது

ஆயிரம் கதைகளின் நாயகன்

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார். நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அனைவரும் காத்திருந்த வேளையில் இந்த மண்ணுலகவாழ்வு போதும் என்று உதறி விடைபெற்றுவிட்டார். விவசாயிகள் அப்படித்தான் பெரியதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். இளவயதிலே காசநோயாளியாகச் சாவின் விரல்கள் தன் மீது படருவதைச் சந்தித்து மீண்டவர் என்பதால் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது வாழ்க்கை என்றே சொல்லுவார். இந்த வாழ்க்கையைத் தேனை ருசித்துச் சாப்பிடுவது போலத் துளித்துளியாக அனுபவித்து வாழ்ந்தார். கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் அவரைப் போல விரிவாக எழுதியவர் எவருமில்லை.. …

ஆயிரம் கதைகளின் நாயகன் Read More »

கதையே வாழ்க்கை

இடக்கை நாவல் குறித்த விமர்சனம். செ.ஆதிரை.       இடக்கை நாவல் நூற்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்களையும், மன்னன்களின் அசுர வேட்டைகளையும், கொலைகளையும், அவர்களின் மன்னிப்புகளையும், மனித பசியின் கோரதாண்டவத்தையும், நீதி மறுக்கப்பட்டவர்கள், நீதி கேட்டு அலைவதையும், டெல்லி மாநகரைச் சுற்றி தெருத்தெருவாக அலைந்துதிரிந்து தெரிந்துகொண்டதுபோல் உள்ளது ….        இதில் முதல் கதையே ஒளரங்கசீப்பைப் பற்றியது தான் …..தனக்கு எதிராக போர்த் தொடுக்க வரும் மன்னர்களை பயத்தில் தள்ள, அரசனுக்கு எதிரான போரில் தோற்ற வீரர்களின் 1000 நாக்குகளை …

கதையே வாழ்க்கை Read More »