படோல் பாபு – திரை நட்சத்திரம்

சத்யஜித் ரே நூற்றாண்டினை முன்னிட்டு அவரது மிகச்சிறந்த சிறுகதையை மீள்பிரசுரம் செய்கிறேன். இந்தக் கதை நாடகமாகவும் குறும்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீதர் நாராயணன். பதாகை இணைய இதழில் இந்த கதை வெளியாகியுள்ளது. ••• படோல் பாபு – திரை நட்சத்திரம் – சத்யஜித் ரே – (தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்) நன்றி : பதாகை நிஷிகாந்தா பாபு தெருவிலிருந்து அழைக்கும்போது படோல் பாபு சாமான்கள் நிறைந்த பையை தனது தோளில் மாட்டிக்கொண்டிருந்தான். …

படோல் பாபு – திரை நட்சத்திரம் Read More »

அன்னையின் பாலில் ஊறியவை

உடன்பிறந்தவளின் திட்டுகள் உடன்பிறந்தவர்களைப் பாதிப்பதில்லை! அவை அன்னையின் பாலில் ஊறியவை. என்றொரு வரியை எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் எழுதிய பச்சோ அத்தை சிறுகதையில் படித்தேன். அற்புதமான வரியது. அக்கா அல்லது தங்கையின் கோபம் அல்லது திட்டு அண்ணன் தம்பிகளைப் பாதிப்பதில்லை. அந்தக் கோபம் அன்பின் வெளிப்பாடு. உடன்பிறந்தவளின் திட்டுகள் என்பது உரிமையில் வெளிப்படும் சொற்கள். ஒற்றைப் பிள்ளையாக வளரும் இன்றைய குழந்தைகளுக்கு இந்தக் கோபம் அறியாமல் இருக்கக் கூடும். ஆனால் கடந்த காலங்களில் வீட்டிற்கு நான்கு ஐந்து …

அன்னையின் பாலில் ஊறியவை Read More »

அரூ சிறப்பிதழ்

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டுள்ளது. அத்தோடு எனது படைப்புகள் குறித்த கட்டுரைகளைக் கொண்ட சிறப்பு பகுதியும் வெளியிட்டுள்ளது. இந்தச் சிறப்பிதழை முன்னெடுத்த அரூ நண்பர்களுக்கும் கட்டுரையாளர்கள் பிருந்தா சாரதி, பு. பிரியதர்சினி, ராம் தங்கம் ,வினோத், கணேஷ் பாபுக்கும் எனது மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நேர்காணலை எடுப்பதற்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக எனது புத்தகங்களைப் படித்து கேள்விகளைத் தயாரித்து தொகுத்து அனுப்பி வைத்தார்கள். பதில்கள் கிடைத்தவுடன் …

அரூ சிறப்பிதழ் Read More »

ஒரே கிராமத்தினர்

ரஷ்யச்சிறுகதை வாலென்டின் காத்தயேவ் தமிழில் பாஸ்கரன் “பெண்கள் என்னைக் காதலிக்கின்றனர்” என்று சிலிர்த்த தலை மயிரையுடைய கட்டையான அழகிய சிப்பாய் ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தனது சகாக்களிடம் கூறினான்.  அவன் அந்தக் குடிசையின் நடுவில் நின்று கொண்டிருந்தான். அவனைத் தவிர அங்கே மூன்று நோயாளிகள் இருந்தனர். மக்கிப்போன வைக்கோல் நாரினால் கட்டப்பட்ட அகன்ற அட்டைகளில் அவர்கள் படுத்திருந்தார்கள். அதில் இருவர்  அசிரத்தையாக கூரையைப் பார்த்தவண்ணமிருந்தனர். மூன்றாவது ஆசாமி மூலையில்  படுத்தவாறே கிழிந்த துணிகளினால் பெண்ணைப் போல் சுற்றிக் …

ஒரே கிராமத்தினர் Read More »

ஆல்பெர் காம்யுவின் அம்மா

ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல் அந்நியன். ( Albert Camus’s ‘The Stranger’)  வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பக வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த நாவல் 1942-ல் எழுதப்பட்டது. “இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது” என்று ‘மெர்சோ’சொல்வதிலிருந்து நாவல் துவங்குகிறது. என் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைக் காணச் சென்றிருந்த போது அவர் இந்த நாவல் குறித்து வியந்து பேசிக் கொண்டிருந்தார். மெர்சோவைப் பற்றிய அவரது அவதானிப்பு மறக்கமுடியாதது. …

ஆல்பெர் காம்யுவின் அம்மா Read More »

வான் நோக்கும் கண்கள்

புகைப்படக்கலை அறிமுகமாவதற்கு முன்னால் மன்னர்களும் பிரபுக்களும் ஓவியர்களை வரவழைத்து தனது உருவத்தை வரைந்து கொள்வதை விருப்பமாகக் கொண்டிருந்தனர். இதனால் உருவப்படம் வரையும் திறமையான ஓவியர்களுக்குப் பெரிய கிராக்கியிருந்தது. இதில் ஏராளமான பணமும் கிடைத்தது. ஆனால் உருவப்படம் வரைவதில் திறமைசாலிகளாக இருந்தவர்களில் பெரும்பான்மையினர் ஆண்கள். அதுவும் மூத்த ஓவியர்கள். அவர்களை மீறிப் புதிதாக ஒரு இளம் ஓவியருக்கு வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். அதுவும் ஒரு பெண் ஓவியராக இருந்தால் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. இந்தத் தடைகளை மீறி ஓவிய …

வான் நோக்கும் கண்கள் Read More »

எழுத்தாளர்களின் உலகம்

 ‘எனதருமை டால்ஸ்டாய்’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்கள் முனைவர் சாமுவேல் சுதானந்தா அவர்களும் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்களும் வகுப்பறையில் ‘நாவல் இலக்கியம்’ பாடத்தை நடத்தினார்கள். அவர்கள் பிற ஆசிரியர்களைப் போலக் ‘கதைச்சுருக்கம்’ கூறுபவர்கள் அல்லர்; தம்மோடு மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, அந்த நாவலின் வழியாக அந்தப் படைபாளரின் படைப்பு மனத்தைப் பின்தொடர்பவர்கள். நாவலையும் சிறுகதையையும் பல கோணத்தில் புரிந்துகொள்ளவும் ஆராயவும் கற்றுக்கொடுத்தவர்கள்.  கி. ராஜநாராயணனையும் தி. ஜானகிராமனையும் …

எழுத்தாளர்களின் உலகம் Read More »

அம்மாவின் சுதந்திரம்

வாழ்வின் தேவை -சிறுகதை குறித்து தயாஜி. மலேசியா •• அம்மாவிற்கு குடும்பத்தில் என்ன மாதிரியான இடத்தை கொடுக்கின்றோம் என்கிற அடிப்படை கேள்வியை முன் வைக்கும் கதை. யோசிக்கையில் இதுவெல்லாம் ஒரு கேள்வியா என்றும் தோன்றலாம். ஆனால், அந்த யோசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது ‘வாழ்வின் தேவை’. அப்பா இறந்துவிட்டார். அவர் இருக்கும் வரையில் அம்மாவை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். வெளியூரில் வசிக்கும் மகளுக்கு இரண்டாம் பிரசவத்திற்கு பின் அம்மா அங்கு செல்ல வேண்டி வருகிறது. கொஞ்ச …

அம்மாவின் சுதந்திரம் Read More »

காதலின் மஞ்சள் மலர்

உலகின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது Sunflower (Italian: I girasoli). விட்டோரியா டிசிகா இயக்கியுள்ள இந்தப்படம் வழக்கமான காதல்கதை போலக் காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பேசுவதில்லை. மாறாகக் காதலின் புதிய பரிமாணத்தை அடையாளம் காட்டுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது கதை நடக்கிறது போர் முடிந்த போதும் வீடு திரும்பாத ராணுவ வீரர்களின் நிலையைப் பற்ற அறிந்து கொள்ள இத்தாலியிலுள்ள அரசாங்க தகவல் மையத்தில் பலரும் காத்து கிடக்கிறார்கள். அங்கே தன் கணவன் என்ன ஆனான் …

காதலின் மஞ்சள் மலர் Read More »

கனவினை வடிவமைப்பவர்கள்

“Devrim Arabaları” (Cars of the Revolution) என்ற துருக்கிப்படத்தினைப் பார்த்தேன் துருக்கியில் 1960 ல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே. பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் மட்டுமே தேசம் சுதந்திரமாக இருக்க முடியும் என்று புதிய அதிபர் ஜெனரல் செமல் நம்புகிறார். இதற்காக நாட்டில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறார். ஆனால் பொருளாதார வளமில்லை என்று காரணம் காட்டி அதிகாரிகள் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் செய்கிறார்கள். துருக்கியால் சிறிய குண்டூசியைக் கூடத் தயாரிக்க முடியாது. …

கனவினை வடிவமைப்பவர்கள் Read More »