காலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும்

எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தனது நேர்காணல் ஒன்றில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். அவற்றை என்ன செய்வார் என்று சொல்லவில்லை. கனவுகளிலிருந்து எழுதுவதற்கான கருவைப் பெறுவதாக எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ரஸ்கின் பாண்டிற்கும் கனவு வழிகாட்டவே செய்கிறது. திப்புசுல்தான் தனது கனவுகளை இது போலத் தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்துமிருக்கிறார். அவை தனி நூலாக வெளிவந்துள்ளன. ரஸ்கின் பாண்டின் சிறார்கதைகைள் தலைமுறைகள் …

காலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும் Read More »

காலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்

லாக்டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாடத் துவங்கினார். ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகிவிடவே இரவு பதினோறு மணி வரை சலிக்காமல் விளையாட ஆரம்பித்தார். மகனுக்கோ, மகளுக்கோ விருப்பமில்லை என்று எழுந்து கொள்ள முயன்றால் கோபம் கொண்டுவிடுவார்.  அவருக்காக மனைவி நீண்ட நேரம் துணையாக விளையாட வேண்டியிருந்தது. இது போலவே காலை ஆறுமணிக்கெல்லாம்  கையில் காபியுடன்  மகளை விளையாட அழைக்க ஆரம்பித்துவிடுவார். இதனால் …

காலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள் Read More »

வாழ்க்கை பொன்னிறமாகயில்லை

பெங்களூருவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோலார் தங்கவயல். KGF எனப்படும் கோலார் தங்கவயலின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படமான After the gold பார்த்தேன். Youtubeல் இப்படியான அபூர்வமான படங்களும் இருக்கின்றன. தேடிப்பார்க்கிறவர் குறைவு. இந்த ஆவணப்படத்தை ஜானகி நாயர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு. ஆர்.வி.ரமணி. மிக முக்கியமான ஆவணப்படமிது. KGF திரைப்படத்தில் கோலார் தங்கவயல் அடிமைகளின் உலகமாகச் சித்தரிக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு நிஜவரலாற்றிற்கும் சம்பந்தமில்லை. அது ஒரு கற்பனைக் கதை. ஆனால் ஜானகி நாயரின் ஆவணப்படம் கோலார் …

வாழ்க்கை பொன்னிறமாகயில்லை Read More »

காலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம்

பிக்காஸோவை பற்றி ரே பிராட்பரி ( Ray bradbury) ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதன் பெயர் In a Season of Calm Weather. பாப்லோ பிக்காஸோ ஓவியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பிராட்பரி அவரை முக்கியக் கதாபாத்திரமாக்கி இக் கதையை எழுதியிருக்கிறார். ஜார்ஜ் ஸ்மித் என்ற அமெரிக்கன் தன் மனைவியுடன் பிரான்சிலுள்ள கடற்கரை ஒன்றுக்கு விடுமுறைக்குச் செல்கிறான். ஸ்மித் பிக்காஸோவின் தீவிர ரசிகன். பிக்காஸோவை ஒவியவுலகின் கடவுளாக நினைப்பவன். அவர்கள் விடுமுறைக்குச் சென்றிருந்த கடற்கரைக்குச் …

காலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம் Read More »

நூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர்

அவர் எப்போது பொதுநூலகத்திற்கு வரும்போதும் கையில் அஞ்சல் அட்டைகளுடன் தான் வருவார். எழுபது வயதிருக்கும். நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் சாயல் கொண்டவர். உயரமும் அவரைப் போலவே இருக்கும். உடைந்த மூக்குக்கண்ணாடியை நூல் கொண்டு கட்டியிருப்பார். ரப்பர் செருப்புகள். பெட்ரோல் பங்க் ஒன்றில் கணக்குவழக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்துப் பி.ஏ.. கதர் வேஷ்டி சட்டை தான் எப்போதும் அணிந்திருப்பார். நாளிதழ்கள் பகுதியைத் தவிர வேறு எங்கும் போக மாட்டார். தமிழ் ஆங்கில நாளிதழ்கள் அத்தனையும் உட்கார்ந்து படிப்பார். படித்து …

நூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர் Read More »

காலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்

ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவாவின் குறிப்பு ஒன்றில் ஒரு நிகழ்வு விவரிக்கபடுகிறது. ஒரு நாள் தோழியுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பாலத்தின் அருகில் ஏதோ யோசனையுடன் நின்றுவிட்டார். தோழி அவரிடம் என்ன யோசனை என்று கேட்டதற்குக் கவிஞரும் தன் தோழியுமான மரினா ஸ்வெட்டேவா எப்படியிருக்கிறாள் என்று விசாரித்திருக்கிறார். உடனே தோழி ஆச்சரியமாக, இதே இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரினா உன்னைப் பற்றி விசாரித்தாள். ஒரே இடத்தில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் …

காலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம் Read More »

கவிஞனின் நாட்கள்

அனிதா தேசாயின் புகழ்பெற்ற நாவல் In Custody. இதனை மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். முக்கிய வேஷத்தில் சசிகபூர், ஓம்பூரி, ஷப்னா ஆஸ்மி நடித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற உருது கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடியை சந்தித்து ஒரு நேர்காணலை மேற்கொள்ளத் தேவன் சர்மா முயல்வதே மையக்கரு. மிர்பூரில் உள்ள ராம் லால் கல்லூரியில் இந்தி இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியரான தேவனுக்கு உருதுக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு. வீட்டிலிருந்து தேவன் கல்லூரிக்குக் கிளம்புவதில் படம் ஆரம்பமாகிறது. அவர் மனைவி பள்ளிக்குச் …

கவிஞனின் நாட்கள் Read More »

சிறிய மனிதனும் பெரிய உலகமும்.

வில்லியம் சரோயன் (William Saroyan) எழுதிய தி ஹ்யூமன் காமெடி 1943ல் வெளியான சிறந்த நாவல். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கலிபோர்னியாவின் இதாக்காவில் கதை நிகழுகிறது. பதினான்கு வயதான ஹோமரைப் பற்றியதே நாவல். அவன் பகுதி நேரமாகத் தந்தி அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனது அம்மா, சகோதரி பெஸ் மற்றும் தம்பி யுலிஸஸ் என அவனது உலகம் மிகச்சிறியது. தந்தி அலுவலகத்தில் இரவு நேரம் தந்தி வந்தால் அதைக் கொண்டு கொடுப்பதற்கு ஆள் தேவை என்பதால் …

சிறிய மனிதனும் பெரிய உலகமும். Read More »

நிழல் வேட்டை

23 Paces to Baker Street 1956 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரில்லர் திரைப்படம். ஹென்றி ஹாத்வே இயக்கியது. பிலிப் ஹன்னன்  என்ற பார்வையற்ற நாடக ஆசிரியர் ஒருவர் குற்ற நிகழ்வு ஒன்றினைக் கண்டறிவதே இந்த திரைப்படம். Don’t Breathe, ஒப்பம் , ராஜ் தி கிரேட் போன்ற படங்களுக்கு இதுவே முன்னோடி. தன்னைச் சுற்றி நடக்கும் உரையாடல்களைத் துல்லியமாக நினைவில் பதிவு செய்து கொள்ளும் திறன் கொண்டவர் பிலிப். நாடக ஆசிரியராக இருப்பதால் கற்பனை …

நிழல் வேட்டை Read More »

உலக இலக்கியத்தின் சாளரம்.

வாசிப்பை நேசிப்போம் குழுவில் கா.மூர்த்தி எழுதியுள்ள புத்தக விமர்சனம். •••• நூல் : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம் ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி ஒரு வருடத்தில் எந்தெந்த புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயாரிப்பதற்கு ஒரு “Shortcut” 1.  எஸ்ரா அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் 2. எஸ்ரா பரிந்துரைக்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் இதை முடித்தால் அந்த ஒரு வருடத்திற்கு பலதரப்பட்ட புத்தகங்களைப் படித்த அனுபவம் கிடைக்கும். இந்த …

உலக இலக்கியத்தின் சாளரம். Read More »