உறவின் மதிப்பு.
ஃபின்னிஷ் இயக்குனர் கிளாஸ் ஹாரோ இயக்கிய திரைப்படம் ONE LAST DEAL. கலைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒலாவி முதுமை மற்றும் வணிக நெருக்கடிகள் காரணமாக ஓய்வு பெற முயல்கிறார். குடும்பத்தை விடவும் அவருக்குக் கலைப்பொருட்கள் விற்பனை மீதே நாட்டம் அதிகம். ஆகவே கேலரியில் தனியே வசிக்கிறார். கலைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் தான் அவரது நண்பர்கள். கலையின் மீதான ரசனை மற்றும் விற்பனை முறைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் அவரைப் போன்ற தீவிர கலை ஆர்வலர்களால் ஏற்றுக் கொள்ள …









