தெலுங்கு மொழியாக்கம்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு தெலுங்கில் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. நைல் நதி சாட்சிகா என்ற தலைப்பில் இந்த தொகுப்பு வெளியாகிறது. ஜி.பாலாஜி எனது யாமம் நாவலை முன்னதாக மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்த தருணத்தில் தெலுங்கில் இந்த கதைகள் வெளிவர முன்முயற்சி எடுத்த நண்பர் குறிஞ்சி வேலன் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளியின் பயணம்.

லைட்டிங் என்பது ஒளியை ஒரு குறிப்பிட்ட விதமாக எடுத்துச் செல்வது.  கையாளுவது. மிகையான வெளிச்சம் காட்சியின் இயல்பைக் கெடுத்துவிடும் ஆகவே நான் பெரும்பாலும் ஒளியை விட நிழல்களைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்கிறார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட். ஆஸ்கார் விருது பெற்றவர். ஹாலிவுட் இயக்குநர்கள். நடிகர்கள் பற்றி நிறைய ஆவணப்படங்கள் உருவாக்கபட்டுள்ளன. ஆனால் அதன் ஒளிப்பதிவாளர்கள். இசையமைப்பாளர்கள் பற்றி மிகக் குறைவான ஆவணப்பதிவுகளே காணப்படுகின்றன. ஹங்கேரியை பூர்வீகமாகக் கொண்ட ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட் பற்றிய ஆவணப்படமான …

ஒளியின் பயணம். Read More »

இரண்டு விநோதக் கதைகள்

குளிர்சாதனப் பெட்டி இசபெல் ஸாஜ்ஃபெர் தமிழில் : லதா ராமகிருஷ்ணன் என்னுடைய பாட்டி இறந்து விட்ட பிறகும் இடுகாட்டிற்குப் போக மறுத்தாள். நாங்கள் என்ன சொல்ல இயலும்? குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கீழ்தள அடுக்குகளை அகற்றிவிட்டு, அங்கே அவளை இடுப்புப் பகுதியிலிருந்து நேராய் நிமிர்த்திக் காய்கறி வைக்கும் ட்ரேயில் பொருத்தி வைத்தோம். நாங்கள் கைப்படியை இழுத்துத் திறக்கும்போதெல்லாம் அவள் புன்சிரிப்பாய்க் கேட்பாள் – ஹாய், எப்படியிருக்கிறாய் இன்று? நாங்கள் குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து வைத்தபடி, அவளோடு அளவிளாவிய படியே …

இரண்டு விநோதக் கதைகள் Read More »

புத்தக வெளியீட்டுவிழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 மாலை எனது ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நேரலையில் நடைபெறவுள்ளது. அதன் அழைப்பிதழைப் பகிர்ந்திருக்கிறேன். விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் இந்த நேரலை நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ஸ்ருதி டிவி யூடியூப் பக்கம் மற்றும் ஸ்ருதி டிவி முகநூல் பக்கத்தில் இந்த நேரலை ஒளிபரப்பாகும்.

இலக்கியப் பேருரை

டிசம்பர் 18 வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு பி ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் கிரேக்க நாடகமான ஈடிபஸ் குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன் சிறிய இடம் என்பதால் குறைவான நபர்களே கலந்து கொள்ள முடியும், ஆகவே முன்பதிவு செய்தல் அவசியம். 9042461472 தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். முகவரி பி ஃபார் புக்ஸ் எஸ் ஜிபி நாயுடு காம்ப்ளெக்ஸ் தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம்பாரதியார் பார்க் எதிரில் வேளச்சேரி சென்னை 31

நேரலை நிகழ்ச்சி

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா தேசாந்திரி பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது. வழக்கமாக ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழா இந்த ஆண்டு கரோனா காரணமாக அரங்க நிகழ்வாக நடைபெறவில்லை. ஆகவே டிசம்பர் 25 மாலை நாலரை மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து ஸ்ருதி டிவி நேரலை நிகழ்ச்சியின் மூலம் புத்தக வெளியீடு மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் விருப்பமான வாசகர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்கலாம். நேரலை …

நேரலை நிகழ்ச்சி Read More »

நூலக மனிதர்கள் 29 கதையும் திரையும்.

ஒரு திரைக்கதையை எழுதுவதற்காகத் தான் ரவிச்சந்திரன் பொதுநூலகத்திற்கு வருகை தர ஆரம்பித்தான். அவனைப் போன்ற உதவி இயக்குநர்களுக்கு நூலகம் தான் எழுதுவதற்கான இடம். பூங்காவில் அமர்ந்து எழுத முடியாது. எந்த நேரமும் ஆள் நடமாட்டம் சப்தம் இருக்கும். தனியே அமர்ந்து எழுதுவதற்கு இவ்வளவு பெரிய நகரில் இடமே கிடையாது. நூலகத்தில் தேவையான புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் கேள்வி கேட்கமாட்டார்கள். சில நேரம் அவனைப் போன்ற உதவி இயக்குநர்கள் யாராவது வந்து சேர்ந்துவிட்டால் …

நூலக மனிதர்கள் 29 கதையும் திரையும். Read More »

சிந்துபாத்தின் மனைவி

நாளை டிசம்பர் 13 ஞாயிறு மாலை தியேட்டர் லேப் அரங்கில் எனது சிந்துபாத்தின் மனைவி நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை ஜெயராவ் இயக்கியுள்ளார்.அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.முகவரிதியேட்டர் லேப்No 6 Mahaveer Complex, Munusamy Salai, K K Nagar West, Chennai – 600078,(Near Discovery book palace)Ph : 097888 58881

நூலக மனிதர்கள். 28 சாட்சியாய் ஒரு புகைப்படம்.

மனோகர் அந்த முறை ஒரு ஒவியரை நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போலவே நூலகரிடம் சென்று ரெபரென்ஸ் பகுதியிலுள்ள மாவட்ட சுதந்திரப் போராட்ட மலரைக் காண வேண்டும் என்று கேட்டார். மனோகர் எப்போது நூலகத்திற்கு வந்தாலும் அந்த மலரைக் கேட்டு வாங்கிப் பார்ப்பது வழக்கம். சில நேரம் உறவினர்கள் சிலரை அழைத்து வந்தும் அந்த மலரைக் காட்டியிருக்கிறார். அந்த மலரில் அவரது தாத்தா கிருஷ்ணப்பாவின் புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதுவும் ஊர்வலம் ஒன்றில் கொடியை ஏந்தியபடி முன்னால் …

நூலக மனிதர்கள். 28 சாட்சியாய் ஒரு புகைப்படம். Read More »

கடலின் காட்சிகள்

யாழினி ஆறுமுகம்•• தங்களது சிறுகதைகள் தொகுப்பான “அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது” தற்போது தான் படித்தேன்.ஒவ்வொரு கதையும் அருமை. வரலாற்றையும், நினைவுகளையும், நடப்பு உலகையும் தனது அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன என்று கூறியுள்ளீர்கள். ஆனால் உருவாக்கியுள்ளீர்கள் என்று தான் கூறுவேன். கிரேக்கத்து முயல் கதை மிகவும் அருமை. பின்னிரவுத் திருடன், பெரிய வார்த்தை, இருபது வயதின் அவமானங்கள், வயதின் கனவுகள் கதைகள் எல்லாம் மனதின் சிக்கல்களை மிக நுட்பமாக போகிற போக்கில் கதை மாந்தர்கள் சொல்லிக் கொண்டே போகிறார்கள். …

கடலின் காட்சிகள் Read More »