புயலுக்குப் பின்பு

நிவர் புயல் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னையே முடங்கிப் போனது. நேற்று முழுவதும் மின்சாரத் தடை காரணமாக வீடு இயங்கவில்லை. எனது வீதியே முழு இருளில் மூழ்கிப் போனது. மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்கள். இடைவிடாத கன மழை. மழையுடன் பலத்த காற்றும் சேர்ந்து கொண்டது. செம்பரப்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதால் எங்கே வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் மேலோங்கியிருந்தது. அடையாறு,வேளச்சேரி, கோட்டூர்புரம் பகுதியில் வாழும் நண்பர்கள் தங்கள் பகுதியினை வெள்ளம் சூழ்ந்து வருவதைப் பதற்றமாகத் …

புயலுக்குப் பின்பு Read More »

நூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம்

நூலகங்களில் நடைபெறும் புத்தக அறிமுகக் கூட்டங்கள் எளிமையானவை. ஐம்பது பேருக்குள் தான் வருவார்கள். ஆனால் அக்கறையுடன் பேச்சைக் கவனிப்பார்கள். கேள்வி கேட்பார்கள். மேடை அலங்காரங்கள் கிடையாது. பொன்னாடை போட மாட்டார்கள். மைக் செட் வசதி கூட இருக்காது. ஆனால் அந்த கூட்டம் தரும் நெருக்கம் பெரிய மேடைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தந்ததில்லை. சிறுநகரங்களில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுவது மிகக் குறைவு. அதுவும் திருக்குறள், கம்பராமாயணம், தேவாரம் திருவாசகம் தவிர்த்து வேறு புத்தகங்களைப் பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறுவது அபூர்வமே. …

நூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம் Read More »

அனோடியின் கால்பந்து

Two Half Times in Hell கால்பந்து விளையாட்டினை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக முக்கியமானது. பலமுறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். 1961ல் சோல்தான் ஃபாப்ரி இயக்கிய இந்தத் திரைப்படம் சினிமா வரலாற்றில் தனியிடம் பெற்றது. ஏப்ரல் 1944 ல் ஹிட்லரின் பிறந்த நாளை கொண்டாட, ஜெர்மனி ராணுவம் ஒரு கால்பந்தாட்ட போட்டி நடத்த விரும்புகிறது. ஜெர்மனி அணிக்கும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள போர் கைதிகளைக் கொண்ட அணிக்கும் இடையில் போட்டி ஏற்பாடு செய்கிறார்கள். இந்தப் போட்டி எவ்வாறு நடைபெற்றது …

அனோடியின் கால்பந்து Read More »

நூலக மனிதர்கள் 20 புத்தகங்களுக்கு நடுவே

பல்லாயிரம் புத்தகங்களுக்கு நடுவே இருந்தாலும் ஒரு சில நூலகர்களே புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் அது ஒரு வேலை மட்டுமே. ஆனால் தனது வேலையும் பார்த்துக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் படித்துக் கொண்டும் இருக்கக் கூடிய சிவானந்தம் போன்ற நூலகர் இருக்கத் தானே செய்கிறார்கள் சிவானந்தம் நிறையப் படிக்கக் கூடியவர். யாராவது ஏதாவது கேட்டால் உடனே அந்த எழுத்தாளரைப் பற்றியும் அவர் எழுதிய முக்கியமான புத்தகங்களைப் பற்றியும் சொல்லுவார். ஒருவரிடமும் ஒரு வார்த்தை கோபமாகப் …

நூலக மனிதர்கள் 20 புத்தகங்களுக்கு நடுவே Read More »

நூலக மனிதர்கள் 19 இரண்டு பெண்கள்

அந்தப் பெண்கள் இருவரும் தாலுகா அலுவலகத்தில் வேலை செய்தார்கள். வாரம் இரண்டு முறை அலுவலகம் விட்டு வீடு திரும்பும் போது நூலகத்திற்கு வருவார்கள். நாவல்கள் பகுதியில் தேடி ஆளுக்கு ஒரு புத்தகம் எடுத்துக் கொள்வார்கள். ஒரே நாளில் தான் இருவரும் திருப்பிக் கொடுப்பார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவரும் எப்போதும் ஒரே எழுத்தாளரின் இரண்டு புத்தகங்களைத் தான் தேர்வு செய்வார்கள். ஒருவர் படித்து முடித்தவுடன் மற்றவர் படிக்கக் கொடுத்துவிடுவார்களோ என்னவோ. ஏன் வேறுவேறு புத்தகங்களை அவர்கள் தேர்வு …

நூலக மனிதர்கள் 19 இரண்டு பெண்கள் Read More »

கனலி ஜப்பானிய சிறப்பிதழ்

இந்த ஆண்டிற்கான எனது புதிய புத்தகங்களின் தயாரிப்புப் பணிகள் காரணமாக இணையத்தில் வெளியாகும் இதழ்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. கனலி இணைய இதழ் வெளியிட்டுள்ள ஜப்பானியச் சிறப்பிதழைத் தினமும் ஒன்றிரண்டு எனக் கடந்த பத்து நாட்களாக வாசித்தேன். கனலியின் ஜப்பானியச் சிறப்பிதழ் மிக முக்கியமான பங்களிப்பு. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், நேர்காணல்கள் எனச் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். மிகச்சிறப்பான மொழியாக்கங்கள். நேர்த்தியான வடிவமைப்பு. சிறுகதைகளில் என் கனவுகளின் கெண்டை மீன், கடைசிப் புகைப்பிடிப்பாளன், தூய …

கனலி ஜப்பானிய சிறப்பிதழ் Read More »

வஞ்சிக்கும் அழகு

Bitter Rice 1949ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். Giuseppe De Santis இயக்கியுள்ளார் நேர்த்தியான ஒளிப்பதிவும் அழுத்தமான கதையும் சிறந்த நடிப்பும் கொண்ட இப்படம் காலத்தைக் கடந்து இன்றும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. இத்தாலியின் போ பள்ளத்தாக்குப் பகுதியில் நெல் அறுவடைக்கும் நடவு நடுவதற்கும் ஒரு ரயில் முழுவதும் பெண்களை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார்கள். அந்த வேலையாட்களுடன் வால்டர் என்ற திருடனின் காதலியான பிரான்செஸ்கா சேர்ந்து பயணிக்கிறாள். காவலர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவே அவள் அந்தக் …

வஞ்சிக்கும் அழகு Read More »

நூலக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும்

நூலகத்திற்கு வந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பதற்காக ஒருவர் அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா ? பத்து நாட்களுக்கு ஒரு முறை அப்படி ஒரு பையன் அடிவாங்குவான். ஆவேசமாக நூலகத்திற்குள் வரும் அவனது மாமா அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசிவிட்டுக் கன்னத்தில் அறைவார். அடிவாங்கிய போதும் அவன் சலனமேயில்லாமல் உட்கார்ந்திருப்பான். ஒரு முறை அந்தப் பையன் அடிவாங்கிய போது நூலகத்திலிருந்த பலரும் அவனது மாமாவைக் கண்டித்தார்கள். ஆனால் அவரோ “வேலையைப் போட்டுட்டு இங்கே உட்கார்ந்து பொஸ்தகம் படிச்சிட்டு …

நூலக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும் Read More »

இணைந்த கரங்கள்.

Made in Bangladesh என்ற பங்களாதேஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். டாக்காவிலுள்ள ஆயுத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களின் அவல வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய ஆயுத்த ஆடை ஏற்றுமதியாளராகப் பங்களாதேஷ் விளங்குகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், பங்களாதேஷின் ஆயுத்த ஆடைத் தொழில் 19 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தை ஆயுத்த ஆடை வணிகம் பெறுகிறது. ஆயுத்த ஆடைத் தொழிலில் 4.4 …

இணைந்த கரங்கள். Read More »