மேய்ச்சல் மனிதர்கள்.

ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் கசாக் இன மக்களின் மாறிவரும் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம் Fade Away Pastoral. ஹதிஷா மற்றும் ஹுமார் குடும்பங்களின் கதையைச் சொல்கிறது. ஹுமார் மேய்ச்சலுக்குச் செல்பவர்களின் வழிகாட்டியாக விளங்குகிறார். கசாக்குகள் செம்மறி ஆடுகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் மந்தைகளை ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் மேய்ச்சலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். பனிப்பிரதேசத்தில் அவர்கள் மந்தைகளுடன் செல்லும் காட்சிகள் படத்தில் பிரமிப்பூட்டுகின்றன. மிகச்சிறந்த ஒளிப்பதிவு. கடும்பனிப்புயலில் மந்தையோடு அவர்கள் சிக்கிக் கொள்வதில் …

மேய்ச்சல் மனிதர்கள். Read More »

காலைக் குறிப்புகள் 19 நினைவின் நறுமணம்

ஜப்பானிய இயக்குநர் ஓசுவின் திரைப்படம் ஒன்றில் திருமணமாகிச் செல்லும் மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துப் போகிறார்கள். அவள் தந்தையிடம் ஆசி பெறுகிறாள். அப்போது இத்தனை ஆண்டுகள் தன்னை வளர்த்து அன்பு செலுத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறாள். தந்தை அவளது எதிர்காலம் கடந்தகாலத்தை விடவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார். அந்தக் காட்சியை என்னால் மறக்கமுடியவில்லை கடந்தகாலத்தை விடவும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பது தான் இலக்கியத்தின் பணியும். அந்தத் தந்தையின் ஆசியைப் போன்ற ஒரு …

காலைக் குறிப்புகள் 19 நினைவின் நறுமணம் Read More »

அஞ்சலி.

அன்பிற்குரிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயார்  திருமதி.ராஜாமணி அவர்கள் இன்று காலமானார். திருமதி.ராஜாமணி எங்கள் ஊருக்கே தாயாக விளங்கியவர். மல்லாங்கிணற்றில் அவர்களின் வீடு ஒரு அன்னசாலை. வீடு தேடி வந்தவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்து தேவையான உதவிகள் செய்த அன்பின் திருவுருவம். எங்கள் குடும்பத்தின் மீது அவர்கள் காட்டிய அன்பு நிகரற்றது. அன்னையை இழந்து வாடும் அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். ••

சபார்டி ஜோகோ தமோனோ

விருட்சன் என்ற புனைபெயரில் எழுதிவரும் கார்த்திகேயன் தமிழில் அதிகம் கவனிக்கப்படாத தென்கிழக்கு ஆசியக் கவிதைகளை ஆர்வத்துடன் மொழியாக்கம் செய்து வருகிறார். இவர் மொழியாக்கம் செய்து சிறுவெளியீடாக வெளியிட்டுள்ள சபார்டி ஜோகோ தமோனோ (Sapardi Djoko Damono ) இந்தோனோஷியாவின் முக்கியக் கவிஞர். அவரது கவிதைகளின் இரண்டு ஆங்கிலத் தொகுப்புகள் என்னிடமுள்ளன. அவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன். விருட்சன் சபார்டியின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல தேர்வு. மொழியாக்கத்தில் சில சொற்களைத் திருத்தம் செய்து மேம்படுத்தினால் …

சபார்டி ஜோகோ தமோனோ Read More »

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர் சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த வாசகர். தன் பேச்சின் நடுவே தான் படித்த நல்ல புத்தகங்கள், கதைகள் குறித்து அழகாக எடுத்துப் பேசக்கூடியவர். அவரது மேடைப்பேச்சை ரசித்துக் கேட்டிருக்கிறேன். சிரித்த முகத்துடன் ,கடுஞ்சொல்லால் எவரையும் தாக்கிப் பேசாமல்,மிக நாகரீகமான முறையில், அழகாகத் தனது கருத்துகளை முன்வைக்கக்கூடியவர். லாக்டவுன் காலத்தில் அவர் தனக்கு விருப்பமான சிறுகதைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார். தி.ஜானகிராமன், வண்ணதாசன். அ.முத்துலிங்கம் சூடாமணி எனச் சிறந்த படைப்பாளிகளின் கதைகளைப் பாரதி பாஸ்கர் சிறப்பாக …

பாரதி பாஸ்கர் Read More »

கார்க்கியின் இளமைப்பருவம்.

எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதியாகச் சோவியத் ரஷ்யாவில் படமாக்கியிருக்கிறார்கள். The Childhood of Maxim Gorky, Gorky 2: My Apprenticeship, Gorky 3: My Universities என 1938ல் வெளியான இந்தப் படங்களைப் பார்த்தேன். இயக்குநர் மார்க் டான்ஸ்காய் இயக்கியது. ஹாலிவுட் படங்களும் ரஷ்ய படங்களுக்கும் தயாரிப்பிலும் கலைவெளிப்பாட்டிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை இந்தப் படங்களைக் காணும் போது அறிந்து கொள்ள முடிகிறது. ரஷ்யாவில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை மிகுந்த கவித்துவமாக …

கார்க்கியின் இளமைப்பருவம். Read More »

காந்தியின் நிழலில் 6 இன்றைய தேவை.

காந்தி இன்றிருந்தால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவாரா என்றொரு கேள்வியை தினேஷ் என்ற கல்லூரி மாணவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நிச்சயம் பயன்படுத்துவார். காந்தியின் காலத்திலிருந்த தந்தி, கடிதம், தொலைபேசி எல்லாவற்றையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார் தானே. ஆனால் எப்படிப் பயன்படுத்தினார் என்பதில் தான் அவரது தனித்துவமிருக்கிறது. நம்மில் பெரும்பான்மையினர் சமூக ஊடகங்களின் வழியே  மனதிலுள்ள வெறுப்பை, கசப்பை, எதிர்மறையான எண்ணங்களைப் பொதுவெளியில் கக்குவது போல அவர் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார். சமூக ஊடகங்களின் …

காந்தியின் நிழலில் 6 இன்றைய தேவை. Read More »

அகரமுதல்வன் உரை

நண்பர் தமிழ்நேசன் நடத்தும் மும்பை இலக்கியக் கூடம்  நிகழ்வில் எழுத்தாளர் அகரமுதல்வன் எனது படைப்புகள் குறித்து உரையாற்றுகிறார் நாள்: 03.10.2020 சனிக்கிழமை மாலை 7.00 மணி ஜூம் செயலி மற்றும் பேஸ்புக் நேரலை  வழியாக நிகழ்வு நடைபெறும். Meeting Id  : 215 501 3891 Password  : 231764. தொடர்புக்கு : இரா. தமிழ் நேசன்

காதலின் நிழல்.

காஸபிளங்கா படத்தை இருபது முறைகளுக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன். மைக்கேல் கர்டிஸ் இயக்கி 1942 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில், ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பெர்க்மேன் மற்றும் பால் ஹென்ரிட் ஆகியோர் நடித்துள்ளனர்.நேற்றிரவு திரும்பும் காஸபிளாங்கா பார்த்தேன். பழைய போட்டோ ஆல்பங்களைத் திரும்பப் பார்க்கும் போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் தரும் அனுபவமது. பிரிந்த தனது காதலியை மறுபடியும் சந்திக்கும் ஒருவனின் கதை சினிமாவில் என்றும் அழியாதது. அதுவும் காதலி உதவி கேட்டு நிற்கும் சூழலும் அவளுக்காகக் காதலன் …

காதலின் நிழல். Read More »