இருபத்திநான்கு கண்கள்.

1954ல் வெளியான அகிரா குரசேவாவின் செவன் சாமுராய் படத்தோடு போட்டியிட்டு பல்வேறு திரைப்படவிழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படம் Twenty-four Eyes. கினோஷிதா இயக்கியது. பெண் எழுத்தாளர் சாகே சுபோய் எழுதிய நாவலினை மையமாக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய சினிமா என்றாலே சாமுராய் படங்கள் என்ற பொதுப்புத்தியிலிருந்து முற்றிலும் மாறுபட்டபடமிது. ஓசுவின் திரைப்படங்கள் ஜப்பானின் ஆன்மாவை பிரதிபலிப்பதாக இருந்தன. அது போலவே கினோஷிதா இயக்கிய படங்களும் இலக்கியப்பிரதிகளின் ஒப்பற்ற திரைப்படைப்பாக விளங்குகின்றன ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவு பற்றிய …

இருபத்திநான்கு கண்கள். Read More »

இயற்கையின் குரல்

David Attenborough: A Life On Our Planet என்ற புதிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். வாழ்வில் சிலரைத் தான் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நினைப்பேன். அவர்களில் ஒருவர் டேவிட் அட்டன்பரோ. உலகில் அவர் கால்படாத இடமேயில்லை. காடுகள் பனிமலைகள் குகைகள் பாலைவனம் என்று இந்தப் பூமியில் அவர் சுற்றித்திரியாத இடமேயில்லை. அவர் தயாரித்த புவிவாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள் மிகச்சிறப்பானவை. ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் இப்படி அரிய உயிரினங்களைத் தேடி, இயற்கையின் வனப்புகளைத் தேடி பயணம் …

இயற்கையின் குரல் Read More »

சிறுகதை குறித்து

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’ ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது. தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங் மடாலயத்து பௌத்தத் துறவி தமது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் சிரமப்பட்டு ஒரு பயணத்தை மலையிலிருந்து அடிவாரத்துக்கு மேற்கொள்கிறார். அதன் நோக்கம் தமது வாழ்நாளில் தாம் இரவலாகப் பெற்று திருப்பித் தராமற் போன மூன்று பொருட்களை கொடுத்தவரிடம் ஒப்படைப்பது. பௌத்த சூத்திரங்களாலான ஒரு நூலை …

சிறுகதை குறித்து Read More »

அக்காலம் : மதராஸ் பீபில்ஸ் பார்க்

என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடக்கும் வருஷோற்சவம் வருகிற 1879 – ளு ஜனவரி மீ 1 உ நமது காருண்ணிய மகாராணியாரவர்கள் இந்தியச் சக்கரவர்த்தினிப்பட்டம் சூடிய மகோற்சவ தினமாகையால் அதைக் கொண்டாடு நிமித்தம் அதற்கு முன் இரண்டு நாளும், விசேஷமாய் அன்றும் பீபில்ஸ்பார்க் என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடத்தப்படுகிற மகா விநோதங்களை ஒவ்வொன்றாக நடக்கும் வண்ணம் விவரித்துச் சொல்ல வேண்டுமானால் மிகவும் பெருகுமாதலால் அவற்றை ஒருவாறு சுருக்கித் தெரிவிக்கிறோம். மேற்கண்ட சிங்காரத் தோட்டத்தில் எப்போதும் ஜன செளக்கியத்திற்கும், …

அக்காலம் : மதராஸ் பீபில்ஸ் பார்க் Read More »

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்  என்ற எனது சிறுகதை The Tenth Rasa  என்ற பென்குவின் வெளியிட்டுள்ள ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கதையை மொழியாக்கம் செய்திருப்பவர் கவிஞர் லதா ராமகிருஷ்ணன். ••

சிவப்பு மச்சம்

– சிறுகதை “என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே… உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே… வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக் கொண்டிருந்தாள். வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள். “சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார். …

சிவப்பு மச்சம் Read More »

கால் முளைத்த கதைகள்

விமர்சனம் •• தமிழக அரசின் புதிய பாடநூலில் கால்முளைத்த கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு கதை இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நிறையப் பேர் இந்த நூலை ஆர்வமாக வாசித்து விமர்சனம் எழுதி வருகிறார்கள். இணையத்தில் நான் படித்த ஒரு விமர்சனத்தை பகிர்ந்து தருகிறேன் ••• ஆந்தைக்குத் தூங்குவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆகவே அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது மரங்கொத்தி ஒன்று …

கால் முளைத்த கதைகள் Read More »

புகைப்படங்களின் எதிரி

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜே.டி.சாலிஞ்சர் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். 2013ல் வெளியான இந்தப் படத்தை Shane Salerno தயாரித்திருக்கிறார் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு.பெரும்பாலும் எழுத்தாளர் மற்றும் அவரது நண்பர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பாகவே ஆவணப்படங்கள் இருக்கின்றன.தமிழின் நேர்த்தியான ஆவணப்படங்கள் என்று கவிஞர் ரவிசுப்ரமணியன்.அம்ஷன்குமார் இயக்கிய ஆவணப்பபடங்களைக் குறிப்பிடலாம். சாகித்யஅகாதமியே ஆண்டு தோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறது.ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் குறுந்தகடாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.அவற்றில் …

புகைப்படங்களின் எதிரி Read More »

காந்தி

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆடியோ ஒலிபரப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு Nilu Nadi Sakshiga” Story https://youtu.be/3WXcSxZ5lpQ Telugu Translator: Jillela Balaji Narrator: Malleswara Rao Akula, IBS

காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரான சிந்தியா ஓசிக்  கட்டுரை ஒன்றில் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வி பற்றி எழுதியிருக்கிறார்.  இந்தக் கதைகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே அக் கேள்வி. இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத எழுத்தாளரே கிடையாது. ஏன் தொடர்ந்து இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞரிடம்  கண்டுபிடிப்பிற்கான எண்ணம் எங்கிருந்து கிடைத்தது என்று எவரும் கேட்பதில்லை. வேறு துறை சார்ந்த அறிஞர்கள் எவரிடம் இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுவதில்லை. ஆனால் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து …

காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன Read More »