தென்னிந்திய நாடகவிழாவில்

சங்கீத நாடக அகாதமியின் Festival of plays by Young Directors of South Zone நாடகவிழாவில் எனது அரவான் நாடகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாடகத்தைப் புதுவை பல்கலைக்கழக நாடகத்துறையைச் சேர்ந்த சுகுமார் சண்முகம் இயக்கியுள்ளார்.

முன்னதாக அவர் அரவான் நாடகத்தைப் புதுவையில் மேடையேற்றியபோது கண்டிருக்கிறேன். மிகச்சிறப்பான தயாரிப்பு. சுகுமார் சிறந்த நடிகர். நவீன நாடகங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். ஆரோவில் நாடகக் குழுவோடு இணைந்து ஆங்கில நாடகங்களிலும் பணியாற்றுகிறவர். திரைத்துறையிலும் நடிகர் தேர்வு மற்றும் நடிகர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.

நண்பர் கருணா பிரசாத்திற்காக இந்த நாடகத்தை எழுதினேன். அவர் தமிழகம் எங்கும் இந்த நாடகத்தைச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார். அவர் தீப்பந்த வெளிச்சத்தில் இந்த நாடகத்தை  நிகழ்த்தியது முற்றிலும் புதுமையானது.

சுகுமார் முற்றிலும் புதிய வடிவில் அரவான் நாடகத்தை உருவாக்கியுள்ளார். சிறந்த ஒளியமைப்பு. நடிப்பு, இசை, கலை என நாடகம் தனித்துவமிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அரவான் நாடகம் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் திருச்சூரில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் இந்த நாடகம் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரியண்ட் பிளாக்ஸ்வான் வெளியீடாக வந்துள்ளது.

24 அக்டோபர் மாலை 6.30 மணிக்கு இந்த நாடகம் நேரலையில் நிகழ்த்தப்படவுள்ளது.

0Shares
0