எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். படைப்பாளர்கள், திரைத்துறையினர், குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
நண்பர்கள் அகரமுதல்வன். செந்தில் ஜெகனாதன். வாசு முருகவேல். வேடியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டிப் பிறந்த நாளைக் கொண்டாடினேன்.

தூத்துக்குடி சலூன் நூலகம் மாரியப்பன் பிறந்தநாளை முன்னிட்டு தனது நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்திருந்தார். வாழ்த்துச் சுவரொட்டிகள். வாசகர்களுக்கு நூல் கொடை, மரம் நடுதல். பள்ளி மாணவர்களுக்கு பரிசு எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அவருடன் இணைந்து சிவகாசி. அருப்புக்கோட்டை, விருதுநகர் என வாசகர்கள் பலரும் எனது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.அவர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பும நன்றியும். இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்த பொன். மாரியப்பன். ஆசிரியர் ஜெயபால். அருண்பிரசாத், ஆசிரியர் ராம் குமார். சிவகாசி மாலை ராஜன். . உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றி
அழகிய மணவாளன் சிறப்பான பாடல் ஒன்றை தயாரித்து அனுப்பியிருந்தார். அவருக்கு எனது நன்றி.
சமூக ஊடகங்களிலும். தொலைபேசி வழியாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆசியும் என்னைத் தொடர்ந்து வழி நடத்தும்.