குறுங்கதை 124 பெரிய தோசை.
அந்தச் சிறுமிக்கு நான்கு வயதிருக்கும். உணவகத்தில் தன் மேசைக்கு எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் இலையில் உள்ள உணவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன சாப்பிடுறே தேவி“ எனக்கேட்டார் அவளது அப்பா “பெரிய தோசை“ என இரண்டு கைகளையும் அகல விரித்துக் காட்டினாள் சிறுமி “உன்னாலே பெரிய தோசையை சாப்பிட முடியாது. இட்லி வாங்கிக்கோ“ என்றாள் அம்மா “இல்லை. நான் வானம் அளவுக்குப் பெரிய தோசைன்னாலும் சாப்பிட்ருவேன்“ என்றாள் சிறுமி அதைக்கேட்டுச் சிரித்தபடியே சர்வர் “அப்போ ஒரு …