புத்தகங்களை நேசிப்பவள்.

The Bookshop என்ற 2017ல் வெளியான திரைப்படத்தைப் பார்த்தேன். 1978 ஆம் ஆண்டு பெனிலோப் ஃபிட்ஸ்ஜெரால்டு எழுதிய நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள். பெண் இயக்குநரான இசபெல் கோய்செட் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ஸ்பானிய திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர். இந்தப் படத்தில் எமிலி மோர்டிமர், பாட்ரிசியா கிளார்க்சன் மற்றும் பில் நைகி ஆகியோர் நடித்துள்ளனர் 1950 களின் பிற்பகுதியில் கதை நடக்கிறது. புளோரன்ஸ் கிரீன் என்ற பெண் போரில் கணவனை இழந்தவர். பல ஆண்டுகளாகக் காலியாக உள்ள தனது …

புத்தகங்களை நேசிப்பவள். Read More »

காகிதப்பறவைகள்

புதிய சிறுகதை •• உண்மையான பறவைகளை விடவும் காகிதத்தில் செய்த பறவைகள் கூடுதல் வசீகரமாகியிருக்கின்றன. அவை வீட்டிற்குள் பயமின்றி  பறக்கின்றன. காகித பறவைகளின் வானம் வீட்டுக்கூரை தானே. தபால்கார மார்டினின் மூத்தமகள் ஸ்டெல்லா அழகாகக் காகிதப்பறவைகள் செய்வாள். அவளுக்குத் திக்குவாய் என்பதாலும் மனவளர்ச்சி அடையவில்லை என்பதாலும் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டில் சமையல் வேலைக்குத் துணையாக இருந்தாள். தாயற்ற பெண் என்பதால் அவளை  மார்டின்  கண்டிப்பதில்லை. பகல் நேரங்களில் அவள் வண்ண காகிதங்களை வெட்டி காகிதப்பறவைகள் செய்வாள். சில …

காகிதப்பறவைகள் Read More »

இலக்கியத்துக்கு கிடைத்த மரியாதை

நோயல் நடேசன் . சமீபத்தில் தென் கொரியாவில் உள்ள ஜேஜு தீவில் ஒரு சர்வதேச மிருக வைத்திய மகாநாடு நடந்த போது அதில் பங்குபற்றச் சென்றேன். மகாநாட்டு குழுவினரால் ஒதுக்கப்பட்ட தென்கொரியாவின் பெரிய நட்சத்திர ஹோட்டல் லோட்டேயில் தங்கினேன் . நான்கு நாள் மகாநாட்டில் இரண்டு நாள் மட்டும் மகாநாட்டில் கலந்து கொண்டேன். மற்றைய இரண்டு நாட்களில் ஒரு நாள் ஊர் சுற்றிப் பார்க்;கச் சென்றேன். மற்றைய நாளில் றக்கிங் என பதினைந்து கிலோ மீட்டர் நடந்து …

இலக்கியத்துக்கு கிடைத்த மரியாதை Read More »

பிறமொழிகளில்.

கதாவிலாசம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, புகழ்பெற்ற ஆங்கிலப் பதிப்பகம் இதனை வெளியிட முன்வந்துள்ளது. ஜனவரி 2021ல் இந்நூல் வெளியாகவுள்ளது •• எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பும் ஜனவரியில் வெளியாகிறது •• சஞ்சாரம் நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 2021ல் வெளியாகவுள்ளது •• உப பாண்டவம் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. பிரபல புத்தக நிறுவனம் இதனை வெளியிடுகிறது •• இடக்கை நாவல் செர்பிய மொழியில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. 2021 ஜூனில் இந்த நாவல் வெளியாகக் கூடும் •• தெலுங்கில் …

பிறமொழிகளில். Read More »

ஜெயமோகனின் அவதூறு

ஜெயமோகன் தனது இணையதளத்தில் இன்று என்னைப் பற்றி ஒரு அவதூறு எழுதியிருக்கிறார். வழக்கமாக இது போன்ற அவதூறுகள் எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது நான் பெரிதும் மதிக்கும் கோவை ஞானியின் பெயரில் வந்துள்ள பொய் ஜெயமோகனின் இந்த அவதூறு எப்போதும் போல இறந்தவரின் வாக்குமூலமாக ஒலிக்கிறது. விஷ்ணுபுரம் நூல் விழாவில் நான் பேசியது உண்மை. புத்தகம் படிக்காமலே நான் பேசினேன் என்பது அவரது கற்பனை. தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது இது போன்று சேற்றை வாறி …

ஜெயமோகனின் அவதூறு Read More »

காலைக்குறிப்புகள் -4 மழையும் குடையும்

ரிச்சர்ட் கார்சியா என்ற கவிஞரின் கவிதை ஒன்றில் குடை ஒரு காலத்தில் சீனர்களின் முக்கியமான ஆயுதமாக விளங்கியது. இன்றோ அது வெறும் அலங்காரப் பொருள். குடை தன் வரலாற்றை மறந்துவிட்டது என்ற வரியை வாசித்தேன். குடை பற்றி உலகெங்கும் நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. குடை ஒரு காலத்தில் வசதியானவர்களின் அடையாளம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான் என்று ஒரு பழமொழி இருக்கிறது. மழைக்காலத்தில் தான் குடையை தேடுவார்கள். இன்று மழையோ வெயிலோ குடை என்பது கூடவே வைத்திருக்கும் …

காலைக்குறிப்புகள் -4 மழையும் குடையும் Read More »

காலைக்குறிப்புகள் -3 மணலின் விதி

Collection of Sand என்ற கட்டுரைத் தொகுப்பில் இதாலோ கால்வினோ விசித்திரமான பழக்கம் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பெண் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருந்து பிடி மண் அள்ளிக் கொண்டுவந்து அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டுப் பாதுகாத்து வைப்பது வழக்கம். அந்த ஜாடியின் வெளியே அது எந்த ஊரில் எடுக்கப்பட்ட மண் என்று எழுதி வைத்துக் கொள்வார். இப்படி அவர் சேகரித்தவற்றை ஒரு முறை கண்காட்சியில் வைத்திருக்கிறார். அதைப் பார்வையிட்ட கால்வினோ …

காலைக்குறிப்புகள் -3 மணலின் விதி Read More »

நினைவுகளின் ஊர்வலம்.

ஞானபீடம் விருது பெற்றுள்ள மலையாளத்தின் தலைசிறந்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியப் பகுதிகளையும் அவரது நேர்காணல் ஒன்றையும் கொண்டுள்ள தொகுப்பே நினைவுகளின் ஊர்வலம். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பினை டாக்டர் டி.எம்.ரகுராம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். எம் டி வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வறுமையும் கஷ்டங்களும் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது. அவரது அப்பா இலங்கையில் வேலை பார்த்த நினைவுகளையும், மாமா வீட்டில் தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களையும் வாசுதேவன் …

நினைவுகளின் ஊர்வலம். Read More »

வீட்டின் இதயம்

லியோ மெக்கரி இயக்கி 1937ல் வெளியான “Make Way for Tomorrow” என்ற படத்தைப் பார்த்தேன். பார்க்லி மற்றும் லூசி கூப்பர் வயதான தம்பதியினர். அவர்களின் வீடு கடனுக்காகப் பறிபோகும் நிலையில் படம் துவங்குகிறது. இனி தாங்கள் எங்கே வாழுவது என்பதைத் தீர்மானிக்கத் தனது ஐந்து பிள்ளைகளையும் அவர்கள் வரவழைக்கிறார்கள். ஐந்தாவது மகள் தொலைவில் கலிபோர்னியாவில் இருக்கிறாள். ஆகவே அவள் வரவில்லை. மற்ற நான்கு பிள்ளைகளும் பெற்றோர்களைக் காண வருகிறார்கள். இனி முதுமையின் காரணமாகத் தன்னால் வேலை …

வீட்டின் இதயம் Read More »