குறுங்கதை 99 முறையீடு

ராயப்பன் அந்த வழக்கைத் தொடர்ந்த போது அவருக்குச் சொந்தமாக ஐந்தரை ஏக்கர் நிலமும் பம்ப்செட் ஒன்றும் இருந்தது. உள்ளூரிலே பேசி முடித்துத் தீர்த்து வைத்திருந்தால் எளிதாக முடிந்து போயிருக்கும். ஆனால் அவர் பக்கம் நியாயம் இருந்த போதும் எவரும் உதவிக்கு வரவில்லை. ராயப்பனுக்கு சொந்தமாக ஊரின் மேற்காக ஒன்றரை ஏக்கர் கரிசல் நிலமிருந்தது. அதைக் குத்தகைக்குக் கேட்பதற்காக அவரது தூரத்து உறவினர் கந்தசாமி வந்த போது ராயப்பன் கொடுப்பதற்குத் தயங்கினார்.  ஆனால் கந்தசாமிக்கு ஆதரவாகத் துளசி வாத்தியார் …

குறுங்கதை 99 முறையீடு Read More »

குறுங்கதை 98 சந்தோஷமான முடிவு

ஞாயிறுக்கிழமை காலை தணிகாசலம் தவறாமல் நூலகத்திற்குச் சென்றுவிடுவார். இப்போது அவரது வயது எழுபது . இருபது வயதிலிருந்து அவர் நூலகத்திற்கு சென்று வாசிக்கிறார். கதைகளை மட்டுமே அவர் வாசிப்பார். அதுவும் நாவல்களின் முடிவு சந்தோஷமாக இல்லாவிட்டால் அவராக அடித்துத் திருத்தி சந்தோஷமான முடிவை உருவாக்கி விடுவார். புத்தகம் என்பது வாசிப்பவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. அதில் எந்த எழுத்தாளனும் தலையிடமுடியாது என்று அவர் உறுதியாக நம்பினார். மனிதர்களைப் போல ஏன் கதாபாத்திரங்களும் துயரமான முடிவைச் சந்திக்க வேண்டும் என்று …

குறுங்கதை 98 சந்தோஷமான முடிவு Read More »

குறுங்கதை 97 கிணற்றடி பதுமைகள்

அந்தக் கிணற்றை வெட்டியன் சகரமல்லன். வடக்கிலிருந்து வந்த சகரமல்லனும் அவனது ஆட்களும் தென்மாவட்டங்களில் நிறையக் கிணறுகளை வெட்டியிருக்கிறார்கள். இது நடந்தது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு. சகரமல்லன் வெட்டிய கிணறுகளின் வடிவம் மற்றும் கலை நேர்த்தி வியப்பூட்டக்கூடியது. அப்படி ஒரு கிணறு தான் பரமனின் ஊரிலிருந்தது. அது நல்ல தண்ணீர் கிணறு. அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துத் தான் ஊரே குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டது. அந்தக் கிணற்றின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கம் இரண்டு பதுமைகளைச் …

குறுங்கதை 97 கிணற்றடி பதுமைகள் Read More »

குளிர் மலை

சசிகலா பாபு சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர். கல்குதிரையில் இவரது மொழிபெயர்ப்புகளை வாசித்திருக்கிறேன். அத்துடன் இவரது மொழியாக்கத்தில் வெளியான வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய் நூலை வாசித்திருக்கிறேன். தற்போது அவரது மொழியாக்கத்தில் வெளியான குளிர் மலை என்ற சீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பினை வாசித்தேன். தேர்ந்த மொழியாக்கம். தாவோயிச சிந்தனைகளை வெளிப்படுத்தும் இக்கவிதைகள் தனித்துவமிக்கவை. ஹான்ஷான் என்ற ஜென் துறவி எழுதிய இக்கவிதைகள் மொழிபெயர்ப்பிற்குச் சவாலானவை. அதை மிகச்சிறப்பாக உள்வாங்கிக் கொண்டு சசிகலாபாபு மொழியாக்கம் செய்திருக்கிறார். …

குளிர் மலை Read More »

குறுங்கதை 96 சுழலும் கிண்ணம்.

லடாக்கில் உள்ள சாங் பௌத்த மடாலயத்தில் புத்தரின் புனித வார்த்தைகள் வெள்ளி, தங்கம் மற்றும் செப்பு கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த மடாலயத்தைக் காணுவதற்காக நிரஞ்சன் சென்றிருந்தான். லேவிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. அங்கே சிரிக்கும் புத்தர் என்று அழைக்கப்படும் மைத்ரேய புத்தர் சிலை இருபது அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. மடாலயத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்யும்படியான பெரிய தியான மண்டபம் இருந்தது. அங்கே தியானம் செய்வதற்காக நிரஞ்சன் சென்றான். ஊசி …

குறுங்கதை 96 சுழலும் கிண்ணம். Read More »

பெயரற்ற மேகம் -2 ரியோக்கன் எனும் பட்டம்

Who calls my poems poems? My poems are not poems. Only when you know my poems are not poems can we together speak about poems – Ryokan Sky above Great Wind என்ற ஜென் மாஸ்டர் ரியோக்கனைப் பற்றிய நூலை வாசித்தேன். ஜப்பானியக் கவிஞர்களில் தனிமையைப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியவர் ரியோக்கன். ஜென் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இவர் துறவியாகத் தேசம் முழுவதும் சுற்றியலைந்து வாழ்ந்திருக்கிறார். …

பெயரற்ற மேகம் -2 ரியோக்கன் எனும் பட்டம் Read More »

குறுங்கதை 95 சுவரை ஒட்டிய கிளை

வீட்டின் பின்புறமிருந்த மாமரத்தில் சுவரை ஒட்டிய  கிளையில் இதுவரை ஒரு பறவை கூட வந்து அமர்ந்ததேயில்லை. நிறையக் கிளிகளையும் அணில்களையும் அந்த மரத்தில் காணுகிறேன். ஆனால் ஒரு கிளி கூட சுவரை ஒட்டிய கிளையில் அமர்ந்ததேயில்லை. நாம் எந்த வீட்டிற்குப் போனாலும் நமக்கான ஆசனத்தைத் தேர்வு செய்து அமருவது போலத் தான் பறவைகளும் மரத்தில் தனக்கான கிளையில் அமர்கிறதா?. சில நேரம் கிளிகளின் கூட்டமே தரையிறங்கும். அப்போதும் ஒரு கிளி கூட சுவரை ஒட்டிய கிளையில் அமராது. …

குறுங்கதை 95 சுவரை ஒட்டிய கிளை Read More »

சிறப்புத் திட்டம்.

என் மகன் ஹரிபிரசாத் மற்றும் அவனது நண்பர்கள் இணைந்து DESANTHIRI YOUTUBE CHANNELயை கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய நல்ல உள்ளங்களுக்கு மனம் நிரம்பிய நன்றி. குறிப்பாக ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ், புகைப்படக்கலைஞர் இளவேனில், மணிமாறன், அன்பு, சித்துராஜ் பொன்ராஜ், திருவாசகம்,  உள்ளிட்ட நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்.. இந்தச் சேனல் வழியாகப் புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக உலகச் சினிமா குறித்த எனது உரைகள். …

சிறப்புத் திட்டம். Read More »

குறுங்கதை 94 இப்படியும் ஒரு காதல்

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயிலுவதற்காக ரகு போயிருந்த நாட்களில் சென்னையிலுள்ள அவனது வீட்டிற்கு ஒரு இளம் பெண் வந்திருக்கிறாள். அவனது அறையிலே தங்கியிருக்கிறாள். அவனது கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறாள். புத்தக அடுக்கினைப் புரட்டியிருக்கிறாள். அவனது சிறுவயது புகைப்படங்களை ஆசையாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதை எல்லாம் அம்மா சொல்லிக் கேட்டபோது ரகுவிற்குக் கூச்சமாக இருந்தது. “ஏன் அந்தப் பெண்ணை அனுமதித்தீர்கள்“ என்று கோவித்துக் கொண்டான் “மோகன் மாமா அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ஏதோ விளையாட்டுப் போட்டிக்கு …

குறுங்கதை 94 இப்படியும் ஒரு காதல் Read More »

குறுங்கதை 93 தலைமறைவு

பிளேடைப் பாதியாக உடைத்துச் சவரம் செய்யும் பழக்கம் தலைமறைவு காலத்தில் தான் குணாவின் அப்பாவிற்கு ஏற்பட்டது. அரசியல் காரணங்களுக்காகக் அவர் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அப்போது குணாவிற்கு வயது நான்கு. அப்பா எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் என்று தான் வீட்டில் சொல்லியிருந்தார்கள். மணல் தேரிகளுக்குள் இருந்த சிறிய கிராமத்தில் அப்பா அடைக்கலம் புகுந்திருந்தார். அந்த ஊரிலிருந்த நாவிதர் கருப்பையாவின் அண்ணன் என்றே அவரைச் சொல்லி வைத்திருந்தார்கள். தலைமறைவு காலத்தில் அப்பா ஒரு வாளித் தண்ணீரில் குளிக்கப் …

குறுங்கதை 93 தலைமறைவு Read More »