புகலிடம் தேடி.

ஜான் ஸ்டீன்பெக்கின் Of Mice and Men திரைப்படத்தைப் பார்த்தேன்.. 1937 வெளியான ஸ்டீன்பெக்கின் நாவலை மையமாகக் கொண்ட படமிது. புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர் இருவரது வாழ்க்கைக் கதையே இப்படம். கேரி சினிஸ் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் துவக்கக் காட்சியில் ஜார்ஜ் மில்டன் மற்றும் லென்னி இருவரும் பண்ணை ஒன்றிலிருந்து தப்பியோடுகிறார்கள். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் துரத்துகிறார்கள். பரபரப்பான அந்தக் காட்சியின் முடிவில் அவர்கள் ரயிலில் தப்பிவிடுகிறார்கள். எதற்காக அவர்கள் தப்பியோடுகிறார்கள் என்பது பின்பகுதியில் தான் …

புகலிடம் தேடி. Read More »

குறுங்கதை 101 அவனது விளையாட்டு

அந்தச் சிறுவனுக்குப் பந்து அல்லது பொம்மைகளை வைத்து விளையாடுவதில் விருப்பமில்லை. அவன் காணும் பொருட்களுக்குப் புதிய பெயர்களை வைத்து விளையாடும் வழக்கம் கொண்டிருந்தான். குறிப்பாக அவன் வீட்டினைக் கடந்து தினமும் வாத்துக்கூட்டம் செல்வதைக் காணுவான். அந்தக் கூட்டத்தில் விடுபட்டது போலத் தனியே இரண்டு வாத்துகள் செல்வது வழக்கம். அந்த வாத்துகளுக்குக் கினா டினா என அவனாக ஒரு புதுப்பெயர் வைத்தான். தன் பெயர் பற்றி எதுவுமறியாத வாத்து எப்போதும் போல மெதுவாக நடந்து போனது. அந்த வாத்துகளுக்கு …

குறுங்கதை 101 அவனது விளையாட்டு Read More »

குறுங்கதைகள் – இயக்குநர் வசந்தபாலன்

இணையத்தில் நான் எழுதி வரும் குறுங்கதைகள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது வாசிப்பு அனுபவத்தை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி •• எஸ் ராவின் 100 குறுங்கதைகள் குறித்து வசந்தபாலன் இந்த பெருந்தொற்று காலத்தின் அருமருந்தாக ஜெயமோகன் எழுதிய 69 சிறுகதைகளையும், எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய 100 குறுங்கதைகளையும் கூறுவேன். தமிழ் இலக்கிய உலகில் கிழக்கு மேற்கும் ஆங்காரமாய் எழுந்து நிற்கும் யானைகள் இவர்கள். கொரோனோ பற்றிய செய்திகள் ஈக்களைப் போல …

குறுங்கதைகள் – இயக்குநர் வசந்தபாலன் Read More »

பருத்திப் பெண்டிர்

ஆர். பாலகிருஷ்ணன் IAS சங்க இலக்கியங்கள் குறித்துத் தொடர் உரைகளை இணையம் வழியாக நிகழ்த்தி வருகிறார். அதில் கடந்தவாரம்  பருத்திப் பெண்டிர் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார். ஆர். பாலகிருஷ்ணன் IAS தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதுடன் இந்திய ஆட்சிப்பணியின் மூத்த அதிகாரியாக இருப்பவர் என்பதால் புதிய வெளிச்சத்தில் சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்கிறார்.  இந்த உரை அவரது அறிவு விசாலத்தின் அடையாளம். தன்னை ஒரு தமிழ் மாணவன் என்று பெருமையோடு …

பருத்திப் பெண்டிர் Read More »

தேசாந்திரி இணையதளம்

தேசாந்திரி பதிப்பகத்தின் இணையதளம் புதிதாக வடிவமைக்கபட்டுள்ளது. ஆன்லைன் மூலம் எனது புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்கள் இதனைத் தொடர்பு கொள்ளவும் லாக்டவுன் காலச் சலுகையாக அனைத்து நூல்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி அறிவிக்கபட்டிருக்கிறது. வெளியூர்களுக்கு கூரியர் மூலம் புத்தகம் அனுப்பி தரப்படும். https://www.desanthiri.com/shop/ For More queries contact 044-23644947,+91 8778435129, 9600034659

வானம் காட்டும் உண்மை.

அ.திருவாசகம், அண்ணா நகர், மதுரை. •• சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’இந்திய வானம்’’ என்னும் புத்தகம் வாசித்தேன். எஸ். ராமகிருஷ்ணன்  தொடர்ந்து இந்தியாவெங்கும் பயணம் செய்து, அந்தப் பயணங்களின் வழியாக மக்ளின்  வாழ்க்கையின் இனிமைகளையும், அவர்களுக்குள்  உள்ளோடும் அவலங்களின் சாரத்தைப் பற்றியும் பதிவு செய்துள்ளார். அவரது  இந்திய வானம் என்ற நூல் பயணங்களைப் பற்றிச் சொல்லக்கூடியது. நூலைப் படிக்கும் போது, இன்னும் மாறாமல் மூலைமுடுக்குகளில் சிக்கியிருக்கும்  மாறா மனிதர்களின்  பண்பாடு, மொழி, கலாச்சாரம், வாழ்வியலை தேடிச் செல்ல …

வானம் காட்டும் உண்மை. Read More »

யாமம் விமர்சனம்

ஈநாடு என்ற தெலுங்கு நாளேடில் எனது யாமம் மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனம் வெளியாகியுள்ளது. நாவலை மிகச்சிறப்பாகப் பாராட்டியுள்ளார்கள். மொழிபெயர்ப்பாளர் பாலாஜிக்கு அன்பும் நன்றிகளும்

கதைகேளு கதைகேளு

வித்யா சுபாஷ் அமெரிக்காவில் வசிக்கிறார். ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ள எனது இடக்கை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை (The Final Solitude ) மிகச்சிறப்பாக திருத்தம் செய்து கொடுத்தவர் வித்யா சுபாஷ். சிறந்த இலக்கிய வாசகர். மொழிபெயர்ப்பாளர். இசையில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். அவர்  தனக்குப் பிடித்தமான சிறுகதைகளைத் தன் குரலில் பதிவு செய்து கதைகேளு கதைகேளு என்ற தலைப்பில் You tubeல் வெளியிட்டு வருகிறார். அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு. நேர்த்தியான கதை சொல்லல். கதையின் உணர்ச்சிகளை …

கதைகேளு கதைகேளு Read More »

தலாய்லாமா உரை

தினசரி காலை ஏழு மணிக்கு தலாய் லாமா இணையத்தின் வழியே உரையாற்றுகிறார். சில நாட்கள் கேள்வி பதில் பகுதியும் இடம்பெறுகிறது. அதைத் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். மிகச் சிறப்பான உரைகள். தலாய் லாமாவின் நிதானமும் சிரிப்பும் அபூர்வமானது. நேற்றைய உரையில் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டார் பண்டைய இந்தியாவை நவீன இந்தியா மறந்துவிட்டது. ஆனால் பண்டைய இந்தியாவோ நவீன இந்தியாவை நோக்கி தன் கையை நீட்டிக் கொண்டேயிருக்கிறது. மொழி வழியாக மட்டுமே இன்றும் பண்டைய இந்தியா நம்மோடு …

தலாய்லாமா உரை Read More »

குறுங்கதை 100 கடிகாரத் திருடன்

அந்தப் பிக்பாக்கெட் திருடன் முதன்முறையாகக் காந்தியை ஒரு ரயில் நிலையத்தில் தான் பார்த்தான். ஆயிரக்கணக்கில் மனிதர்கள். ஒரே தள்ளுமுள்ளு. ரயிலை விட்டு காந்தியை இறங்கவிடவில்லை. எங்கிருந்து இவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தார்கள். எதற்காக இந்த மனிதரை இப்படி வணங்குகிறார்கள் என்று அவனுக்குப் புரியவேயில்லை. ஆனால்  சட்டையில்லாத உடலுடன் அந்தக் கிழவர் புன்சிரிப்புடன் நிற்பதைப் பார்க்கையில் மனதில் ஏதோவொரு ஈர்ப்பு உருவானது. கூட்டத்தோடு சேர்ந்து அவனும் காந்தியைப் பார்த்துக் கையசைத்தான். காந்தி இரண்டு நிமிடங்கள் பிளாட்பாரத்தில் நின்று பேசிவிட்டு …

குறுங்கதை 100 கடிகாரத் திருடன் Read More »