குறுங்கதை 66 கப்பல் நூலகம்

ஜே.எஸ்.பிரதானா என்ற கப்பலில் ராமபத்ரன் நூலகராகயிருந்தார்.. ஆங்கிலம், பிரெஞ்சு ஸ்பானிஷ் உள்ளிட்ட பதினாறு மொழிகளில் வெளியான புத்தகங்கள் அங்கிருந்தன. 1950களில் அந்தக் கப்பலின் கேப்டனாக இருந்த வின்சன்ட் ஸ்மித் தீவிர வாசிப்பாளர் என்பதால் அரிய புத்தகங்களை வாங்கிச் சேகரித்திருந்தார் ராமபத்ரன் கப்பல் நூலகத்தின் பொறுப்பாளராகப் பணிக்குச் சேர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. வருஷத்தின் ஒன்பது மாதங்கள் கப்பலில் வேலை. மூன்று மாதங்கள் விடுமுறை. அப்போதும் அவர் சொந்த ஊருக்குப் போனதில்லை. துறைமுக நகரங்களில் புத்தகங்கள் வாங்குவதற்காகக் கடைகடையாகத் …

குறுங்கதை 66 கப்பல் நூலகம் Read More »

குறுங்கதை 65 கர்னலின் நாற்காலி.

அந்த மரநாற்காலி கர்னல் ஜேம்ஸ் ஃபார்லாங்கிற்காகவே செய்யப்பட்டது. அவர் ஆறடிக்கும் அதிகமான உயரம் என்பதால் அவரது உடலமைப்பிற்கு ஏற்ப தேக்கு மரத்தில் நாற்காலி செய்து கொடுத்தார் பெருமாள் ஆசாரி. 19வது படைப்பிரிவின் தலைவராகவும் நிலக்காட்சி ஓவியராகவும் இருந்த ஜேம்ஸ் ஃபார்லாங் தான் பயணம் செய்யும் இடங்களுக்கெல்லாம் அந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வருவதற்காகவே சவரிமுத்துவை நியமித்திருந்தார்கள். அவன் நாற்காலியின் இருபக்கமும் கயிறுகள் போட்டு அதை முதுகில் சுமந்தபடியே வருவான். ஏற முடியாத மலைப்பகுதியாக இருந்தால் நாற்காலியில் ஜேம்ஸ் …

குறுங்கதை 65 கர்னலின் நாற்காலி. Read More »

மார்லன் பிராண்டோவும் சாப்ளினும்.

சார்லி சாப்ளின் தனது படங்களில் தானே கதாநாயகனாக நடிப்பதே வழக்கம். ஆனால் அவர் மார்லன் பிராண்டோவை நாயகனாக நடிக்க வைத்து A Countess from Hong Kong என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டுமே சாப்ளின் நடித்திருக்கிறார். நேற்றிரவு A Countess from Hong Kong பார்த்தேன். சாப்ளின் முதன்முறையாக வண்ணத்தில் உருவாக்கிய படம். சாப்ளின் இயக்கிய லைம்லைட் படம் வெற்றி பெறவில்லை. அத்தோடு அமெரிக்காவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வாழ்ந்த சாப்ளின் …

மார்லன் பிராண்டோவும் சாப்ளினும். Read More »

குறுங்கதை 64 ரிங் மாஸ்டர்

சர்க்கஸிலிருந்த அந்தச் சிங்கம் மூன்று வேடிக்கைகளைச் செய்தது. முக்காலியில் ஏறி நின்று இரண்டு கால்களைத் தூக்கி சல்யூட் அடிப்பது. கால்பந்து ஒன்றைக் காலால் உதைத்து விளையாடுவது, நெருப்பு வளையம் ஒன்றில் பாய்ந்து தாவுவது என இந்த மூன்றையும் சிங்கம் செய்யும் போது அரங்கம் அதிரும். பார்வையாளர்கள் கூச்சலிடுவார்கள். கைதட்டுவார்கள். ரிங் மாஸ்டர் பணிவுடன் தலை வணங்கி அந்தப் பாராட்டினை ஏற்றுக் கொள்வான். பின்பு சிங்கத்தின் பிடரியைத் தடவி விட்டு ஒரு வளர்ப்பு நாயைப் போல கூண்டிற்குக் கூட்டிச்செல்வான். …

குறுங்கதை 64 ரிங் மாஸ்டர் Read More »

குறுங்கதை 63 கூட்டாஞ்சோறு

அந்த ஊரின் சிறந்த சமையற்காரர்களாக இருந்த எவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதிலும் துரையப்பா, சாமியார் போலச் சாயவேஷ்டி தான் கட்டிக் கொள்வார். சமைக்கிறவன் துறவியாக இருக்க வேண்டும் என்பது போலிருக்கும் அவரது தோற்றம். கல்யாண வீடுகளில் துரையப்பா சமையல் என்றால் தனி விசேசம். எல்லாத் திருமண வீடுகளுக்கும் சமைக்க அவர் ஒத்துக் கொள்வதில்லை. துரையப்பாவை கட்டாயப்படுத்தி எவரும் சமைக்க வைத்துவிட முடியவே முடியாது. அவரது சம்பளம் 1001 ரூபாய். அதில் பாதியைக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார் …

குறுங்கதை 63 கூட்டாஞ்சோறு Read More »

குறுங்கதை 62 சிறியதே அழகு

பிரம்மாண்டமான மலையின் அருகில் அமைந்திருந்தது அந்தப் பௌத்த மடாலயம். அதில் இளந்துறவிகள் நிறைய இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு புதுப் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்றைய நாளின் பயிற்சியாகப் பிக்கு தரசக் எதிரேயுள்ள மலையைச் சிறியதாக்கும்படி கட்டளையிட்டார். இவ்வளவு பெரிய மலையை எப்படிச் சிறியதாக்குவது என இளந்துறவிகளுக்குத் தெரியவில்லை. அவர்கள் மலையின் அருகே சென்று கண்மூடி தியானம் செய்தார்கள். சிலர் மந்திரம் சொன்னால் சிறியதாகிவிடும் என நினைத்து உச்சாடனம் செய்தார்கள். ஒருவராலும் மலையைச் சிறியதாக்க முடியவில்லை. மாலை நேரம் பிக்கு தரசக் அங்கே வந்து …

குறுங்கதை 62 சிறியதே அழகு Read More »

மக்கத்துச் சால்வை

ஈழப்படைப்பாளிகளில் எஸ்.எல்.எம். ஹனீபா முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஹனீபாவின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. இலங்கை சென்ற போது ஓட்டமாவடியில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அழகான வீடு. நிறையப் பழமரங்கள். கிழக்கிலங்கை படைப்பாளிகள் பலருக்கும் அவர் தான் ஞானத்தந்தை. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமியின் கதைமரபில் வரக்கூடியவர். அவரது மக்கத்துச் சால்வை முக்கியமான சிறுகதைத் தொகுப்பு தேர்ந்த ஓவியர் போலவே ஹனீபா காட்சிகளைக் கண்முன்னே தீட்டிக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் நம் முன்னே நடமாடுகிறார்கள். கிழக்கிலங்கை இஸ்லாமியப் பண்பாட்டை மிகவும் நுட்பமாகக் கதைகளில் …

மக்கத்துச் சால்வை Read More »

குறுங்கதை 61 பேசாத்துணை

ரோசி டிசோசா என்ற அந்தப் பெண்ணிற்குக் கடைசிவரை துணையாக இருந்தது அந்த நாய் மட்டுமே. அவள் நோயுற்ற தருணங்களில் கூட அந்நாய் படுக்கையின் அருகிலே இருந்தது. சில நேரம் ரோசி இரவில் நோயின் வேதனை தாங்கமுடியாமல் அழுவாள். அப்போது அந்த நாய் அவளது கைகளை நக்கி தனது அன்பைத் தெரிவிக்கும். அவளை மருத்துவமனையில் அனுமதித்த நாட்களில்  நாய் வார்டின் உள்ளே வந்துவிட்டது. மருத்துவமனையினுள் நாயிற்கு அனுமதியில்லை என வெளியே துரத்திவிட்டார்கள். அப்படியும் அந்நாய் மருத்துவமனை வளாகத்தை விட்டுப் …

குறுங்கதை 61 பேசாத்துணை Read More »

குறுங்கதை 60 பெயர் எழுதப்பட்ட கால்பந்து

அப்பாவின் நினைவாக வீட்டிலிருந்தது அந்தக் கால்பந்து. அதில் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் யாவும் கையெழுத்திடப்பட்டிருந்தன. மங்கிய அந்த எழுத்துகளைக் கொண்டு ஒன்றிரண்டு பெயர்களை மட்டுமே வாசிக்க முடிந்தது. கால்பந்து விளையாட்டில் அப்பா கோல்கீப்பராக இருந்தார். அப்பா பரிசாகப் பெற்ற சில கோப்பைகள் வீட்டிலிருந்தன. ஆனால் அவர் கால்பந்து விளையாடுவது போல ஒரு புகைப்படம் கூட வீட்டில் இல்லை. எத்தனையோ மேட்ச் விளையாடியிருப்பாரே ஒன்றில் கூடவா புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. அல்லது அந்தப் புகைப்படங்களைத் தொலைத்துவிட்டார்களா ?. எங்கள் …

குறுங்கதை 60 பெயர் எழுதப்பட்ட கால்பந்து Read More »

சிறுவர்களின் கனவு.

Good Morning என்ற ஜப்பானியத் திரைப்படத்தைப் பார்த்தேன். யசுஜிரோ ஓசு இயக்கியது.கூழாங்கற்கள் அளவில் சிறியதென்றாலும் தனித்துவமான அழகு கொண்டவை. ஓசுவின் படங்களும் அப்படியானதே, அவரது பிரதான கதைக்களம் குடும்பம். ஜப்பானியக் குடும்ப உறவின் பல்வேறு தளங்களை விவரிப்பதே அவரது படங்கள். அது போலவே காலமாற்றம் ஜப்பானிய வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அவரது படங்கள் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். ரயில் பாதைகளும் ரயிலும் யசுஜிரோ ஓசுவிற்கு மிகவும் விருப்பமானவை. அவற்றைக் குறியீடுகள் போலவே பயன்படுத்துகிறார் இப்படத்தில் 1950களில் ஜப்பானிய வாழ்க்கை …

சிறுவர்களின் கனவு. Read More »