மோ-யானின் பசி.

2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மோ-யானின் நேர்காணல் ஒன்றை வாசித்தேன். மோ-யான் சாண்டோங்கில் ஒரு கிராமத்தில் பிறந்தார், அவரது தந்தை தனியார் கிராம பள்ளியில் படித்தவர், அறிவுஜீவி. ஆகவே பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். மோயானின் சகோதரர் ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். மோ-யான் பல்கலைகழத்தில் படித்த நாட்களில் தான் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டார் பெரும்பான்மை எழுத்தாளர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதவே ஆசைப்படுகிறார்கள். குறிப்பாகக் குழந்தைப் …

மோ-யானின் பசி. Read More »

குறுங்கதை 74 கோவில் யானை.

யானை கொட்டடிக்குள் சிறுவர்களை அனுமதிக்கமாட்டார்கள். தகரக்கூரை வேய்ந்த பழைய கொட்டடியது. சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான யானை அங்கேயிருந்தது. ஒரு ஊரில் ஒரேயொரு யானை மட்டும் தனியே வாழ்வது விசித்திரமானது. அதற்குத் துணையே கிடையாதா என்று சிறுவர்கள் பேசிக் கொள்வார்கள். அந்த யானையை வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் கோவிலுக்கு அழைத்து வருவார்கள். மற்ற நாட்களில் அது கொட்டடியிலே தானிருக்கும். யானைப்பாகன் அழுக்கான வேஷ்டி கட்டியிருப்பான். சதா யானையின் அருகில் உட்கார்ந்து பீடி பிடித்துக் கொண்டிருப்பான். யானையின் கண்கள் …

குறுங்கதை 74 கோவில் யானை. Read More »

ஜமீலா

நேற்றிரவு சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Chinghiz Aitmatov) எழுதிய ஜமீலா நாவலை மையமாகக் கொண்ட ஜமீலா(Dzhamiliya) திரைப்படத்தைப் பார்த்தேன். 1968ல் வெளியான இப்படத்தை இரினா போப்லாவ்ஸ்கயா மற்றும் செர்ஜி யூட்கேவிச் இயக்கியிருக்கிறார்கள். சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ”முதல் ஆசிரியர்” மகத்தான படைப்பு. அது போலவே அவரது சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, மற்றும் குல்சாரி நாவலும் சிறப்பான படைப்புகள். ஜமீலா நாவலை வாசிக்கையில் ஜமீலாவின் தோற்றம் நம் மனதில் தனித்துவமிக்கதாக எழும். அதற்கு நிகரான ஒரு பெண்ணை ஜமீலாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். …

ஜமீலா Read More »

புதிய உரைகள்

தேசாந்திரி youtube சேனலில் வெளியாகியுள்ள புதிய உரைகள் TOTTO-CHAN ஜன்னலில் ஒரு சிறுமி – அறிமுகம் https://youtu.be/aY89jPESR_Q ஈசாப் ஒரு அறிமுகம் https://youtu.be/c5SByiZF4Ao

குறுங்கதை 73 முயல் பொம்மை

விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த அவனுக்கு மாதத்தில் இருபது நாள் வெளியூர் செல்ல வேண்டியதாகியிருந்தது. ஆரம்பத்தில் புதுப்புது தங்கும் விடுதியினைத் தேடிப் போய்த் தங்குவான். ஆனால் நான்கு ஆண்டுகள் அனுபவத்தின் முடிவில் எந்த ஊரில் எந்த லாட்ஜ் சிறந்தது. என்ன உணவகத்தில் சாப்பிடலாம் என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். பெரும்பாலும் அவனது வேலை காலை பத்து மணிக்குத் துவங்கி மதியம் இரண்டு மணியோடு முடிந்துவிடும். மாலை ஆறுமணிக்குப் பிறகே அடுத்த ஊருக்குக் கிளம்புவான். மதியம் சாப்பிட்டு விட்டு …

குறுங்கதை 73 முயல் பொம்மை Read More »

லேர்மன்தேவ்வின் காதல்.

லேர்மன்தேவ் என்ற ரஷ்ய தொலைக்காட்சிக்காக உருவாக்கபட்ட  திரைப்படத்தைப் பார்த்தேன். மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப்படம். மிகையில் லேர்மன்தேவ்(Mikhail Lermontov) எழுதிய நம் காலத்து நாயகன் (A Hero of Our Time) படித்திருக்கிறீர்களா. ரஷ்ய நாவல்களில் மிகவும் தனித்துவமானது. லேர்மன்தேவ் ரஷ்யாவின் புகழ்பெற்ற கவிஞர். ஒரேயொரு நாவல் தான் எழுதியிருக்கிறார். சில நாடகங்களையும் ஐந்து கவிதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். தனது 27வது வயதில் Duel எனப்படும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் லேர்மன்தேவ். புஷ்கினை தனது ஆதர்சமாகக் கொண்ட …

லேர்மன்தேவ்வின் காதல். Read More »

குறுங்கதை 72 ஆரஞ்சு நிறப்பந்து

கல்கத்தாவிலிருந்து அந்தக் கால்பந்தை வாங்கி வந்திருந்தார் மாமா. கதிருக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. எப்போது விடியும் எப்போது மைதானத்திற்குக் கொண்டு போய் விளையாடலாம் என இரவெல்லாம் காத்துக் கொண்டிருந்தான். சேலஞ்ச் என்று எழுதப்பட்ட ஆரஞ்சு நிறப் பந்து. அது போன்ற ஒன்று யாரிடமும் கிடையாது. அந்தப் பெருமையோடு அதிகாலையில் மைதானத்தை நோக்கி நடந்து போக ஆரம்பித்தான். காந்தி மைதானம் மிகப்பெரியது. அதன் மேற்கு பக்கம் எப்போதும் பெரிய பையன்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். போட்டிகள் கூட அங்கே நடப்பதுண்டு. …

குறுங்கதை 72 ஆரஞ்சு நிறப்பந்து Read More »

குறுங்கதை 71 வாஸ்கோடகாமாவின் அடிமை.

1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா கோழிக்கோடு துறைமுகத்திற்குக் கப்பலில் வந்திறங்கிய போது அவனுடன் மூர் இனத்தைச் சேர்ந்த சில அடிமைகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் தான் மிலா. உண்மையில் அது அவனது பெயரில்லை. அவனது விசித்திர உருவத்தைக் கண்ட மக்கள் அவனை மிலா என்று அழைத்தார்கள். மன்னரின் விருந்தினராக வாஸ்கோட காமா மூன்று மாதங்கள் தங்கியிருந்த நாட்களில் மிலா சுற்றுப்புறக் கிராமங்களில் அலைந்து திரிந்தான். நீர் நிலைகளும் வானுயர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் மிளகுகொடிகளும் பசுக்களும் அழகான …

குறுங்கதை 71 வாஸ்கோடகாமாவின் அடிமை. Read More »

மோபிடிக் எனும் இதிகாசம்.

ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபிடிக் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமான இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். ஒவ்வொரு முறை வாசித்து முடிக்கும் போதும் மாபெரும் இதிகாசம் ஒன்றை வாசித்து மீண்டது போல வியப்பு மேலிடவே செய்யும். மிகவும் நுட்பமாக, கவித்துவமாக எழுதப்பட்ட அமெரிக்க நாவல். 19ம் நூற்றாண்டில் நடைபெற்ற திமிங்கல வேட்டை பற்றிய ஆவணத்தொகுப்பு போல நாவலில் நுட்பமான விபரங்களை எழுதியிருக்கிறார் மெல்வில். மோபிடிக் நாவலை நான்கு முறை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். அத்தோடு காமிக்ஸ் …

மோபிடிக் எனும் இதிகாசம். Read More »

குறுங்கதை 70 ஒரு சொல்.

ஆம்பலார் என்று அழைக்கப்படும் ஆம்பல் கந்தசாமி கவிராயருக்கும் மேலகரம் கச்சிநாதனுக்கும் இடையில் நன்னூல் சூத்திரம் ஒன்றுக்குப் பொருள் சொல்லுவதில் ஏற்பட்ட கருத்து மோதல் தீராப்பகையாக மாறியது. ஆம்பலார் தனது கருத்துக்கு ஆதரவாகப் புகழ்பெற்ற தமிழறிஞர் பலரையும் ஒன்று சேர்ந்தார். இது போலவே கச்சிநாதனையும் தமிழ்ப் புலவர்கள் பலரும் ஆதரித்தார்கள் இந்தக் கருத்துவேறுபாட்டின் காரணமாக ஆம்பலார் கலந்து கொள்ளும் விழா எதிலும் கச்சிநாதன் கலந்து கொள்வதில்லை. கச்சிநாதன் தலைமை பதவி வகித்த பொதிகை தமிழாய்வு மலரில் ஆம்பலாரோ, அவரது …

குறுங்கதை 70 ஒரு சொல். Read More »