2019ன் சிறந்த புத்தகங்கள்- 4

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது.. 110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். ஷங்கர் ராம சுப்ரமணியனின் கவித்துவம் தமிழ் மரபிலிருந்து தனது கிளைகளை விரித்துக் கொண்டிருக்கிறது. அசலான கவிமொழியும் பாடுபொருளும் கொண்ட இக்கவிதைகள் ஆழமும் செறிவும் கொண்டிருக்கின்றன. காலை வெளிச்சத்தைப் போலத் தூய்மையும் பேரழகும் கொண்டதாகயிருக்கின்றன வாசிக்கும் போது மனதில் சலனத்தை ஏற்படுத்தும் இக்கவிதைகள் வாசித்து …

2019ன் சிறந்த புத்தகங்கள்- 4 Read More »

2019ன் சிறந்த புத்தகங்கள்- 3

இந்து தமிழ் நாளிதழில் ஆசை எழுதி வந்த காந்தி பற்றிய தொடர் கட்டுரைகள்   ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது. அரிய புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் காந்திய நூல் வரிசையில் முக்கியமானது. ஆசை காந்தியை ஆழ்ந்து வாசித்திருக்கிறார். காந்தி குறித்து மிகச்சிறப்பான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். பத்திரிக்கையாளரின் துல்லியமும் எழுத்தாளரின் கவித்துவமும் ஒன்று சேர்ந்த இக்கட்டுரைகள்  இன்றைய தலைமுறைக்கு காந்தியை மிகச்சரியாக அடையாளப்படுத்துகின்றன. “காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் …

2019ன் சிறந்த புத்தகங்கள்- 3 Read More »

2019ன் சிறந்த புத்தகங்கள்- 2

வெயிலின் கவிதைகள் நவீனத் தமிழ் கவிதையுலகின் புதுக்குரல் என்றே சொல்வேன். ஜென் கவிதைகளில் வெளிப்படும் ஓங்கி ஒலிக்காத குரலைக் கொண்டு சமகாலப் பிரச்சனைகளை எழுதுகிறார் வெய்யில். அது முற்றிலும் புதிய வெளிப்பாட்டு முறை. கோபமும் ஆத்திரமும் இயலாமையும் வேதனையின் பெருமூச்சும் கொண்ட இக்கவிதைகள் தண்ணீரில் பிம்பமாகத் தெரியும் பெருமலையைப் போல எளிதாகத் தோற்றம் தருகின்றன. சுயம்புலிங்கமும் ஆத்மாநாமும் ஒன்று சேர்ந்தது போன்ற கவிதைகளை வெய்யில் எழுதுகிறார். வெளிப்பாட்டு முறையில் சுயம்புலிங்கத்தையும் கருப்பொருளில் ஆத்மாநாமையும் அவர் பிரதிபலிக்கிறார் என்றே …

2019ன் சிறந்த புத்தகங்கள்- 2 Read More »

2019ன் சிறந்த புத்தகங்கள்- 1

2019’ல் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களை பரிந்துரை செய்கிறேன் •• பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன். பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். பிணவறைக் காப்பாளரின் உலகமும் அநாதைப் பிணங்களின் புறக்கணிக்கபட்ட நிலையும்,  காப்பாளரின் மனத்தவிப்பும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன. ஜம்பு என்ற …

2019ன் சிறந்த புத்தகங்கள்- 1 Read More »

தேசாந்திரி அரங்கு

சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி 9 முதல் 21 வரை நடைபெறுகிறது. அதில் தேசாந்திரி அரங்கு எண் 396 & 397 புத்தகக் கண்காட்சி நடைபெறும் எல்லா நாட்களிலும் தேசாந்திரி அரங்கில் இருப்பேன். •

தஸ்தாயெவ்ஸ்கி உரை

நேற்று நூல்வனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தஸ்தாயெவ்கியுடன் ஒரு இரவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.  நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த அகரமுதல்வனுக்கும், மணிகண்டனுக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வினைப்  படமாக்கிய ஸ்ருதி டிவிக்கு அன்பும் நன்றியும். புகைப்படங்கள் நன்றி : ஸ்ருதி டிவி அகரமுதல்வன்.

யாமம் – மலையாளம்

எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஜனவரி கடைசிவாரம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது

மை டியர் செகாவ்

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள  மை டியர்  செகாவ் குறும்படம் YouTube ல் வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காணும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் chekhov short film link https://youtu.be/XzQhtG39qng