பொள்ளாச்சியில்
கவிஞர் தேவதச்சனுக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 27 சனிக்கிழமை காலை பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. அந்த விழாவில் தேவதச்சன் கவிதைகள் குறித்து நான் உரையாற்றுகிறேன்
கவிஞர் தேவதச்சனுக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 27 சனிக்கிழமை காலை பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. அந்த விழாவில் தேவதச்சன் கவிதைகள் குறித்து நான் உரையாற்றுகிறேன்
அனுபவ் சின்ஹா இயக்கி ஆயுஷ்மான் குரானா நடித்த Article 15 படம் பார்த்தேன். சமகால இந்திய சினிமாவின் சாதனைப்படங்களில் ஒன்று. சாதிய அரசியலை நேரடியாகப் பேசும் படம். சாதியத்தின் வேர்கள் எங்கெல்லாம் புதைந்திருக்கின்றன என்பதைப் படம் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது. காவல்துறையின் சாகசங்களை மட்டுமே திரையில் பார்த்துப் பழகிய பொதுமக்களுக்கு இந்தப்படம் காட்டும் உண்மை முகத்தில் அறைவது போலிருக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் அயன் ரஞ்சன் (ஆயுஷ்மான் குரானா )நேரடியாகத் தன்னோடு பணியாற்றுகிறவர்களிடம் அவர்கள் என்ன சாதி என்று …
தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை என்ற இணையதளம் ஒன்றை உருவாக்கி தொடர்ந்து எழுதி வருகிறார் சர்வோத்தமன் சடகோபன் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மிக ஆழமான பார்வை கொண்ட கட்டுரைகள் இவரது கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர விருப்பம் கொண்டவர் சர்வோத்தமன் . தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் தனித்து நூலாக்க வேண்டியவை. இவரது இணையதளத்தில் ஜப்பானிய கவியான ட்டய்கு ரியோக்கன் கவிதைகளை தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார். அதில் எனக்கு …
சிறந்த மொழிபெயர்ப்பாளரும், சிறுகதை ஆசிரியருமான கார்த்திகைப் பாண்டியன் உலக இலக்கியத்திலிருந்து சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்து வருகிறார். கோவையிலுள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் கார்த்திகைப் பாண்டியன் தீவிர வாசகர். சமகால உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்காக 2018-க்கான ஆத்மாநாம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மொழிபெயர்ப்பில் வெளியான யுகிமோ மிஷிமாவின் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் நாவல் குறிப்பிடத்தக்க படைப்பு. தற்போது கார்த்திகைப் பாண்டியன் லத்தீன் அமெரிக்காவின் …
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படத்தைக் கண்டேன். Susan Lacy இயக்கியுள்ளார் . 2h 27min ஒடக்கூடியது ஸ்பீல்பெர்க்கின் திரைப்படங்களுக்குப் பின்னே சொந்த வாழ்வின் தடயங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை அவரது உரையாடலின் வழியே அறிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் 1946ல் பிறந்தவர் ஸ்பீல்பெர்க் அவரது தந்தை கணிணி தயாரிப்பில் ஈடுபட்ட என்ஜினியர். அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பவர். தந்தையின் செல்லமாக வளர்ந்தார் ஸ்பீல்பெர்க். அவரது தாய் Leah Adler தந்தையின் …
அவளது வீடு என்ற எனது சிறுகதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு தினேஷ் கதையை மொழியாக்கம் செய்துள்ளார்
ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரமான திலீப்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். Dilip Kumar: The Substance and the Shadow என்ற நூல் யூசுப்கான் என்ற பெஷாவரைச் சேர்ந்த இளைஞன் திலீப்குமார் என்ற நட்சத்திரமாக உருவான கதையை மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. சினிமாவோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு குடும்பத்திலிருந்து உருவானவர் திலீப்குமார். அவர் சினிமாவில் நடிக்கிற விஷயம் அவரது தந்தைக்குக் கூடத் தெரியாது. போஸ்டரில் திலீப்குமாரின் படத்தைப் பார்த்தபிறகே தந்தை அது பற்றி விசாரித்து …
ஜுனியர் விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டினைப் பெற்ற நூல் விலை ரூ 275 இன்றைய இளைஞனின் மனநிலையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள நாவல் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது விலை ரூ 175 தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்து பாராட்டினைப் பெற்ற நூல். சாலையோர புத்தகக் கடைகளில் கிடைத்த அரிய நூல்களையும், பழைய புத்தக்கடைக்காரர்களின் வாழ்க்கையும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு விலை ரூ 250 தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி …
தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கபட்டுள்ளது. உலக இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாக கருதப்படும் தேவமலர் குறுநாவலை மீள்பதிப்பு செய்துள்ளது தேசாந்திரி. தேசாந்திரி பதிப்பகத்தின் நூல்களை ஆன்லைனில் பெறலாம் அல்லது அலுவலக முகவரியில் தொடர்பு கொண்டு பணம் செலுத்தி கூரியரில் பெறலாம்.
பொள்ளாச்சியில் செயல்படும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதச்சனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. தேவதச்சனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் ஜுலை 27 அன்று விருது வழங்கும் விழா பொள்ளாச்சி என்.ஜி. எம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தேவதச்சன் கவிதைகள் குறித்து நான் உரையாற்றுகிறேன் ••••