கர்நாடகப் பயணம்
கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவின் கூர்க்கில் இருந்தேன். விட்டு விட்டுப் பெய்யும் மழை. இதமான காற்று. காபித்தோட்டத்தின் நடுவே அமைந்த விடுதி. மிகவும் அமைதியானது. பரபரப்பான நகரவாழ்விலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டேன். குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி ‘பைலகொப்பா’ எனும் இடத்தில் அமைந்திருக்கும் பௌத்த தங்கக் கோயிலை காணச் சென்றிருந்தேன். சீன ஆக்ரமிப்பு காரணமாக திபெத்தை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதில் இரண்டாவது பெரிய திபெத்திய …