மோனேயின் நீர் அல்லிகள்
பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே (Claude Monet – 1840-1926) இயற்கையை துல்லியமாக வரைவதில் முதன்மையானவர். இவரது ஒவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் கண்டிருக்கிறேன் Water Lilies என்ற ஒவிய வரிசை அபாரமானது. இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. இயற்கையை நேரில் காணும் போது பெரிய பொருட்கள் மட்டுமே கண்ணில் விழுகின்றன. அவற்றையே மனம் பிரதானமாக அவதானிக்கிறது. உள்வாங்கிக் கொள்கிறது. காற்றினால் தண்ணீரில் ஏற்படும் அலைகளையோ, ஒளி ஊடுருவி விளையாடுவதையோ. பூக்களின் திறந்த …