சண்டையிடும் சாப்ளின்
அகிரா குரசேவா படங்களில் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற தொஷிரோ மிபுன் குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன். Mifune: The Last Samurai (2015) என்ற ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் Steven Okazaki. கிழிந்த உடையுடன் வறுமையில் சுற்றித்திரிந்த இளைஞன் எப்படிப் புகழ்பெற்ற நடிகனாக உருவாகிறான் என்பதை ஆவணப்படம் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பு பாணி பெரிதும் முகபாவத்துடன் மட்டுமே தொடர்புடையது. மார்லன் பிராண்டோ போன்ற அரிதான நடிகர்களே மொத்த உடலையும் காட்சிக்கேற்ப மாற்றவும் பயன்படுத்தவும் கூடியவர்கள். …