எந்த உலகில் வசிக்கிறோம்.

சதத் ஹசன் மண்டோவின் புகழ்பெற்ற கதை டோபா டேக் சிங். 1955ல் வெளியான இக்கதை லாகூரிலுள்ள பழமையான மனநலக்காப்பகம் ஒன்றில் வசிக்கும் பிஷன் சிங் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. தற்போது பாகிஸ்தானிலுள்ள டோபா டேக் சிங் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர் பிஷன் சிங். வசதியான விவசாயி. நிலப்பிரச்சனை காரணமாக மனநோயாளியாக மாறுகிறார். அவரை லாகூரிலுள்ள மனநலக்காப்பகத்தில் சேர்க்கிறார்கள். பதினைந்து ஆண்டுகள் அங்கே தங்கியிருக்கிறார். இரவிலும் சரி பகலிலும் சரி அவர் உறங்குவதேயில்லை. அது போல உட்காருவதுமில்லை. …

எந்த உலகில் வசிக்கிறோம். Read More »

குல்சாரின் நினைவுகள்

1940ம் வருடம் பழைய டெல்லியிலுள்ள ரோஷனாரா பாக். அங்கே  ஒரு ஸ்டோர் ரூம். மின்சார வசதி கிடையாது. அதில் பனிரெண்டு வயது சிறுவன் இரவில் தனியே இருக்கிறான். அவன் பிறந்த சில மாதங்களிலே அவனது அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் முகம் எப்படியிருக்கும் என்று கூட அவனுக்குத் தெரியாது. அம்மாவிற்கு புகைப்படம் கூட கிடையாது. அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு துணி வியாபாரம் செய்வதற்காக குடியேறியிருந்தது. பஜாரில் துணிப்பைகள் மற்றும் தொப்பி …

குல்சாரின் நினைவுகள் Read More »

புதுவை இளவேனில்

பாண்டிச்சேரி போவது என்றாலே இளவேனிலுடன் சுற்றுவது என்று தான் அர்த்தம். எப்போது பாண்டிச்சேரி சென்றாலும் புகைப்படக்கலைஞர் இளவேனிலைச் சந்தித்துவிடுவேன். தேர்ந்த வாசகர். எழுத்தாளர்களை நேசிக்கும் ப்ரியத்துக்குரிய தம்பி. எழுத்தாளர் கிராவை தாத்தா என்றே இளவேனில் அழைக்கிறார். கிராவும் தனது சொந்தப்பேரனைப் போல தான் இளவேனிலை நடத்துகிறார். இளவேனிலுடன் பேசிக் கொண்டிருப்பது உற்சாகம் தரக்கூடியது. சமீபத்தில் அவருக்காக கிரா ஒரு நாவலை எழுதித் தந்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அந் நாவலை வெளியிட இருக்கிறது. 96வயது வயதில் கிரா ஒரு …

புதுவை இளவேனில் Read More »

பிரபஞ்சனைச் சந்தித்தேன்

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தொடர் சிகிட்சைகள் பெற்று வரும் எழுத்தாளர் பிரபஞ்சனைக் காணுவதற்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். நண்பர் இளவேனில் உடன் வந்திருந்தார். புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்புப் பிரிவின் தனியறை… நலம்பெற்று புன்னகையுடன் எழுதிக் கொண்டிருக்கும் பிரபஞ்சனைக் காண சந்தோஷமாக இருந்தது. மருத்துவர்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கவனித்துக் கொள்கிறார்கள். பத்திரிக்கையாளர் பிஎன்எஸ் பாண்டியன் பெரும்துணையாக இருந்து  உதவிகளைச் செய்து வருகிறார். நண்பர்கள்,எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துப் …

பிரபஞ்சனைச் சந்தித்தேன் Read More »

ஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்

கடந்த வாரத்தில் எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே பற்றிய இரண்டு திரைப்படங்களைப் பார்த்தேன். ஒன்று அவரது காதலைப் பற்றியது. மற்றொன்று அவரது நட்பை பற்றியது. எழுத்தாளர்களில் ஹெமிவே பற்றிய அதிகமான நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கூடMrs. Hemingway என்ற நாவல் அவரது முதல் மனைவியைப் பற்றி வெளியாகியுள்ளது. PAPA: HEMINGWAY IN CUBA என்ற திரைப்படம் ஹெமிங்வே கியூபாவில் வசித்த போது அவருக்கும் இளம் பத்திரிக்கையாளரான எட் மைர்ஸிற்கும் உருவான நட்பைப் பற்றியது. இரண்டும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கபட்ட …

ஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள் Read More »

டால்ஸ்டாயின் கைகள்

லியோ டால்ஸ்டாயோடு மிகுந்த நட்பு கொண்டிருந்தார் மாக்சிம் கார்க்கி.  பலமுறை தேடிச் சென்று டால்ஸ்டாயை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பினை பற்றி நினைவுக்குறிப்புகளில் டால்ஸ்டாயின் கைகளைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார். டால்ஸ்டாயின் நரம்புகள் புடைத்த பெரிய கைகளைக் காணும் போது லியனார்டோ டாவின்சியின் கைகளைப் போலவே தோன்றியது. இரண்டு பேர்களின் கைகளும் தொட்டதையெல்லாம் கலையாக்கியவை. மாயத்தன்மை கொண்ட கைகள். பேசிக் கொண்டிருக்கும் போது டால்ஸ்டாயின் கைகள் அசைந்து கொண்டேயிருந்தன. கடவுளை போல அவர் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. அந்த உரையாடலின் …

டால்ஸ்டாயின் கைகள் Read More »

இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள்.

ரிச்சர்ட் பெவேர் மற்றும் லாரிசா வோல்கோகன்ஸ்கி (Richard Pevear and Larissa Volokhonsky) இருவரும் ரஷ்ய இலக்கியங்களின் புதிய மொழியாக்கங்களைச் செய்து வருபவர்கள். தம்பதிகளான இருவரும் இணைந்து Leo Tolstoy,  Fyodor Dostoevsky,Mikhail Bulgakov ,Nikolai Gogol. Boris Pasternak, Anton Chekhov ஆகியோரின் முக்கியப் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சசோதரர்கள் நாவல் இதுவரை ஆறு முறை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆறில் இவர்களின் மொழிபெயர்ப்பே மிகச்சிறப்பானது. ரிச்சர்ட் பெவேர் ஒரு அமெரிக்கர். …

இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள். Read More »

மதவிலக்கம்

1901ம் ஆண்டு ரஷ்ய கிறிஸ்துவத் திருச்சபை மதவிரோதக் குற்றசாட்டின் பெயரால் லியோ டால்ஸ்டாய்யை மதவிலக்கம் செய்தது. இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ரஷ்யாவில் நிறைய விவாதங்கள் நடைபெற்றன. திருச்சபையினரிடம் மண்டியிட்டுத் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கறாராக அறிவித்தார் டால்ஸ்டாய் . ஆனால் அவரது மனைவி சோபியா தன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கபட்டுவிடுமே என்று பயந்து எப்படியாவது திருச்சபையை;ச் சமாதானப்படுத்த முயன்றார். அந்த முயற்சிகளுக்காக முக்கிய அரச பிரதிநிதிகள். மதகுருமார்களைத் தொடர்பு கொண்டார் ஆனால் திருச்சபை தன்னுடைய …

மதவிலக்கம் Read More »

மின்சார மனிதன்

புதிய சிறுகதை அப்போது எனக்கு வயது பனிரெண்டு. எங்கள் ஊருக்கு ராயல் சர்க்கஸ் வந்திருந்தது. ஜவகர் மைதானத்தில் தான் கூடாரம் அமைத்திருந்தார்கள். அந்தச் சர்க்கஸிற்கு ஒரு காண்டாமிருகம் வந்திருந்தது. பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்த்திருந்த காண்டாமிருகத்தை நேரில் காண வேண்டும் என்பதற்காகவே நான் சர்க்கஸ் போக ஆசைப்பட்டேன். வேறு எந்த மிருகத்தையும் விடக் காண்டாமிருகமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரும்புக் கவசம் போன்ற அதன் உடல் அமைப்பும் ஒற்றைக் கொம்பும் உடலுக்குப் பொருந்தாத குரலும் காண்டாமிருகத்தின் மீது தனியானதொரு …

மின்சார மனிதன் Read More »

ரே பிராட்பெரியின் நேர்காணல்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கையில் அது எழுப்பும் நினைவுகளே அதன் மீதான விருப்பத்தை உருவாக்குகின்றன. நேற்று ரே பிராட்பெரியின் (Ray Bradbury) நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். ரே பிராட்பெரி எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர். அவரது நேர்காணல்களின் வழியே அவரது புனைவின் பின்புலத்தையும், அவர் எழுத்தாளராக உருவான சூழலையும் புரிந்து கொள்ள முடிந்தது. உலகெங்கும் எழுத்தாளர்கள் ஒன்று போலத் தான் உருவாகிறார்கள் போலும். பிராட்பெரியின் நேர்காணல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலுமான பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிதாக …

ரே பிராட்பெரியின் நேர்காணல்கள். Read More »