கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான கவிக்கோ விருது வழங்கப்படுகிறது.
கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் பணமும் பாராட்டு பத்திரமும் கொண்டது.
நவீன தமிழ் கவிதையுலகின் நிகரற்ற கவியாக விளங்கும் தேவதச்சனுக்கு இவ் விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.
விருது வழங்கும் நிகழ்வு நவம்பர் 9 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு
வேலூர் சத்துவாச்சாரியிலுள்ள சோலை அரங்கத்தில் நடை பெறுகிறது.
