மறுபதிப்புகள்

விகடன் பிரசுரம் வெளியிட்டு வந்த எனது நூல்களான துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, சிறிது வெளிச்சம். இந்திய வானம்,  கேள்விக்குறி ஆகிய நூல்களுக்கான பதிப்புரிமை முடிந்துவிட்ட நிலையில் அவற்றை தேசாந்திரி பதிப்பகம் புதிய வெளியீடுகளாக கொண்டுவரவுள்ளது. இந்த நூல்களின் கிண்டில் ஈபுக்கையும் தேசாந்திரியே வெளியிடவுள்ளது. மறுபதிப்பு செய்யப்படும்  பணி தற்போது துவங்கியுள்ளது. விரைவில் இவை வெளியாகும்.

ஆங்கிலத்தில் இடக்கை நாவல்

எனது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  ப்ரீதம் சக்கரவர்த்தி மிகச்சிறப்பாக மொழியாக்கம்  செய்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் இதை வெளியிடுகிறது. நாவலின் பிரதியைச் செம்மைப்படுத்துவதில் வித்யா சுபாஷ். ராம்ஜி. காயத்ரி ஆகியோர் கடும் உழைப்பைத்  தந்திருக்கிறார்கள்.  சர்வதேச அரங்கில் இந்த நாவல் கவனம் பெற வேண்டும் என்ற கனவோடு ராம்ஜி இதை மிகச்சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். தமிழில் இந்நாவலின் நான்காவது பதிப்பு தற்போது வெளியாகிவுள்ளது. நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்ற  இடக்கை நாவல் ஆங்கிலத்திலும் அதற்கான …

ஆங்கிலத்தில் இடக்கை நாவல் Read More »

கால் முளைத்த கதைகள்

கால் முளைத்த கதைகள் விலை ரூ 100 பூமியில் மனிதர்கள் தோன்றிய கதை முதல் காகம் ஏன் கறுப்பாக உள்ளது என்பது வரை பல்வகைப்பட்ட இயற்கை சார்ந்த  நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் உலகெங்குமுள்ள பழங்குடி மக்களிடம் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றைத் தேடித்தொகுத்து சிறப்பான அறிமுகம் தந்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் •• புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட ஆறாம் வகுப்பு தமிழ் பாட நூலில் கால்முளைத்த கதைகளில் இருந்து ஒரு கதை பாடமாக வைக்கபட்டுள்ளது. நூலைப் பெற https://www.desanthiri.com/ தொடர்புக்கு …

கால் முளைத்த கதைகள் Read More »

நாவலெனும் சிம்பொனி

பவித்ரன் விக்னேஷ் சிறந்த இலக்கிய வாசகர். குறும்பட இயக்குனர் இவர் இலக்கியப் பெட்டி என்ற இணைய காணொளி பதிவு ஒன்றை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதில் எனது நாவலெனும் சிம்பொனி நூலைப் பற்றி சிறப்பான அறிமுகத்தை தந்திருக்கிறார் •• நாவலெனும் சிம்பொனி – எஸ். ராமகிருஷ்ணன் https://youtu.be/uPJ16Cd9ONM நன்றி பவித்ரன் விக்னேஷ் ••• நாவலெனும் சிம்பொனி விலை ரூ 200 நூலைப் பெற https://www.desanthiri.com/ தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், …

நாவலெனும் சிம்பொனி Read More »

46 வது தலைமுறை

வெற்றிகரமாக நடத்தப்படும் தொழில்கள் கூட இரண்டோ, மூன்றோ தலைமுறைக்கு அப்புறம் கைவிடப்பட்டுகின்றன. அரிதாக ஜவுளி மற்றும் தங்க நகை வணிகத்தில் ஐந்து தலைமுறை ஒரே தொழிலைத் தொடர்வதைக் காண்கிறோம். ஆனால் ஜப்பானிலுள்ள Hōshi Ryokan என்ற தங்கும்விடுதி ஹோன்சு தீவின் இஷிகவா பகுதியில் கி.பி.718ல் துவங்கப்பட்டு இன்று வரை நடைபெற்றுவருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்தத் தங்கும்விடுதியை தற்போது நடத்திவருபவர் அதன் 46 வது தலைமுறையைச் சேர்ந்தவர். 1300 ஆண்டுகள் ஒரு தொழிலை ஒரு குடும்பம் …

46 வது தலைமுறை Read More »

கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள்

(தடம் இதழில் எழுதி வரும் உலகக் கவிதைகள் குறித்த தொடரின்  கட்டுரை ) ஒவ்வோர் ஆண்டும் தமிழில் நிறைய கவிதை நூல்கள் வெளியாகின்றன. புதுப்புது கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆயினும் நவீன கவிதைகள் குறித்த விவாதங்கள், கவிதைக் கோட்பாடுகள், அழகியல் பற்றிய உரையாடல்கள் எதுவும் இலக்கியச் சூழலில் நடைபெறுவதில்லை. பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் சிற்றிதழ்களில் வெளியாவதோடு சரி. அவை உரிய கவனத்தையும் உரையாடலையும் உருவாக்கவில்லை. முக்கியக் கவிஞர்கள்கூட இவற்றைப் பொருட்படுத்தி விவாதிப்பது இல்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. …

கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள் Read More »

இசையே வாழ்க்கை

நகலிசைக் கலைஞன் என்ற நூலை நண்பர் ஒருவர் நேற்று பரிசாக அனுப்பியிருந்தார். அதை நேற்றிரவு வாசித்தேன் எங்கள் பகுதியில் ஊருக்கு ஊர் பொருட்காட்சி நடைபெறும். அதன் சிறப்பே மிகச்சிறந்த மெல்லிசை நிகழ்ச்சிகள். எம்.எஸ்.வி. சங்கர் கணேஷ், கங்கை அமரன் துவங்கி உள்ளுர் கலைஞர்கள் வரை பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபலமான பாடகர்களும் வருதுவண்டு. ஏழு மணிக்கு துவங்கி இரவு பனிரெண்டரை வரை கச்சேரி நடைபெறும். சில நாட்கள் கச்சேரி நீண்டு மூன்று மணியாகியிருக்கிறது. மக்கள் …

இசையே வாழ்க்கை Read More »

புதிய இசை

சிறந்த கவிஞரும் பாடகருமான நண்பர் ரவி சுப்ரமணியன் சங்கக் கவிதைகளில் தேர்வு செய்த சில பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார். அதில் ஒரு பாடலை அனுப்பியிருந்தார். அற்புதம். மிகச்சிறந்த இசையமைப்பு. குரல். பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். தனியான ஒரு இசைத்தொகுப்பாக இந்த பாடல்கள் வெளியானால் மிகுந்த வரவேற்பைப் பெறும். நண்பர் ரவி சுப்ரமணியனுக்கு என்  மனம் நிரம்பிய வாழ்த்துகள் மூன்று குறுந்தொகைப் பாடல்களின் ஐ கிளவுட் லிங்க்ஸ் https://soundcloud.com/ravisubramaniyan/41-kurunthokai-41 https://soundcloud.com/ravisubramaniyan/28-kurunthaokai-28 https://soundcloud.com/ravisubramaniyan/20-kurunthokai-20

வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவையில் கொடிசியா சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் ஒரு படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கிறது இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது. இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்படுவதாக கொடிசியா அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில்  ஜுலை 21ல் மாலையில் நடைபெறுகிறது இதையொட்டி எனது படைப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு …

வாழ்நாள் சாதனையாளர் விருது Read More »

உரை

அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுப்பிற்காக 2018ன் யுவ புரஸ்கார் விருது பெற்ற சுனில் கிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா சிறப்புரை : எஸ்.ராமகிருஷ்ணன் https://www.youtube.com/watch?v=BkPCznjGtBA