சலூனுக்குள் புத்தகங்கள்

காலையில் தூத்துக்குடியிலிருந்து ஒருவர் தொலைபேசியில் அழைத்து நான் மில்லர்புரத்தில் சலூன் வைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். சலூனுக்கு வருபவர்கள் படிப்பதற்காகச் சிறிய புத்தக அலமாரி ஒன்றை வைத்திருக்கிறேன். அதில் நாற்பது ஐம்பது புத்தகங்கள் உள்ளன. நிறையப் பேர் ஆர்வமாகப் புத்தகம் எடுத்துப் படிக்கிறார்கள். இது மட்டுமின்றி யூடியூப்பிலுள்ள உங்களது இலக்கிய உரைகளை ஆடியோவாக்கி அதை ஸ்பீக்கரில் ஒலிக்கவிடுகிறேன். பலரும்  ஆர்வமாகக் கேட்கிறார்கள். இன்னும் அதிகமான புத்தகங்கள் சலூனில் வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எது போன்ற …

சலூனுக்குள் புத்தகங்கள் Read More »

பூமியை வணங்குகிறார்கள்

புனித யாத்திரைக்குச் செல்லுவது உலகெங்கும் உள்ள வழக்கம். எல்லாச் சமயங்களிலும் புனித யாத்திரை முக்கியக் கடமையாகக் குறிப்பிடப்படுகிறது. நடந்தே புனித தலங்களுக்குச் செல்வது உயர்வான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பாதயாத்திரை செல்வது தலைமுறையாகத் தொடரும் பழக்கம். கிறிஸ்துவச் சமயத்திலும் இது போன்ற புனித யாத்திரைகள் இருக்கின்றன. காண்டர்பரி தேவாலயத்திற்குப் பாதயாத்திரை போனவர்களின் கதையைத் தான் ஆங்கிலத்தில் சாசர் காண்டர்பரி கதைகள் என எழுதியிருக்கிறார். திபெத்திலுள்ள பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் செல்லும் புனித யாத்திரை வியப்பூட்டக்கூடியது. லாசாவிலுள்ள பௌத்த …

பூமியை வணங்குகிறார்கள் Read More »

உலக கவிதைகள் 1- சியோ ஜியோங்-ஜூ

சியோ ஜியோங்-ஜூ கொரியாவின் முக்கிய கவிஞர். (Seo Jeong-ju) ஐந்து முறை நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர், மிதாங் என்ற புனைபெயரில் எழுதியிருக்கிறார். பதினைந்து கவிதை தொகுதிகள் வெளியாகியுள்ளன. கொரிய நவீன கவிதையின் தந்தையாக கருதப்படுகிறார். கவிதைகள் குறித்து சிறப்பாக உரைகளையும் ஆற்றியிருக்கிறார். இவரது Poems of a Wanderer தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான கவிதைகள். தமிழில் இவரது கவிதைகள் ஏதும் வெளியாகியுள்ளதாக தெரியவில்லை.  சங்க தமிழ் கவிதையின் சாயலை இவரிடம் காணமுடிகிறது. குறிப்பாக இயற்கையின் …

உலக கவிதைகள் 1- சியோ ஜியோங்-ஜூ Read More »

இயற்றமிழ் வித்தகர் விருது

தமிழ் இலக்கியத்தின் மீதும் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் பற்றும் அன்பும் கொண்டவர்  வைகோ. கலிங்கத்துபரணி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் என அவர் ஆற்றிய விரிவான இலக்கிய உரைகளைக் கேட்டிருக்கிறேன். மடைதிறந்த வெள்ளம் போலக் கருத்துகளைப் பொழிவார். வாழும் காலத்திலே எழுத்தாளர்களைக் கௌரவித்துக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் பைந்தமிழ் மன்றம் என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு ஆண்டிற்கு ஒரு இலக்கியவாதியைத் தேர்வு செய்து பொற்கிழியோடு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான இயற்றமிழ் …

இயற்றமிழ் வித்தகர் விருது Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள்- 2

கூழாங்கற்கள் பாடுகின்றன ஜென் கவிதைகள் குறித்த நூல் விலை 75 கோடுகள் இல்லாத வரைபடம் புகழ்பெற்ற வரலாற்று யாத்ரீகர்களைப் பற்றிய நூல் விலை ரூ 75 புத்தக கண்காட்சியின் போது முதல் வெளியீடாக வந்து விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளன உலகை வாசிப்போம் உலக இலக்கியத்தின் சாதனையாளர்களைப் பற்றிய நூல் விலை 200 தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் புதிய சிறுகதைத் தொகுப்பு விலை 150 காட்சிகளுக்கு அப்பால் உலக சினிமா குறித்த நூல் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள்- 2 Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் 1

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ள புதிய நூல்கள் உப பாண்டவம் மகாபாரதம் குறித்த நாவல். பத்து பதிப்புகளுக்கும் மேலாக விற்பனையில் சாதனை படைத்த நாவல். விலை ரூ 375 சஞ்சாரம் நாதஸ்வரக்கலையை மையமாகக் கொண்ட நாவல். விலை  340 உலக இலக்கியப் பேருரைகள் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, அராபிய இரவுகள், ஹோமர், ஷேக்ஸ்பியர் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்புநூல் விலை 325 செகாவ் வாழ்கிறார் உலகின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாறும் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் 1 Read More »

ஸ்ரீதேவி

இந்திய திரையுலகின் ஒப்பற்ற நாயகி ஸ்ரீதேவி மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்பதுகளின் இளைஞர்களில் ஸ்ரீதேவியைக் காதலிக்காதவர்களேயில்லை. ஸ்ரீதேவி பற்றி இயக்குனர் ராம் கோபால் வர்மா எழுதிய கட்டுரையை கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் தமிழில் மொழியாக்கம் செய்து சில ஆண்டுகள் முன்பாக வெளியிட்டிருந்தார் அழியாத நினைவுகளில் வாழும் ஸ்ரீதேவிக்காக  இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன் •• எனது ஸ்ரீ – ராம் கோபால் வர்மா தமிழில்: ஷங்கர் விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, …

ஸ்ரீதேவி Read More »

விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள். புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது. …

விஷமாகும் காய்கனிகள் Read More »

எழுத்தாளனின் அரசியல்

நார்வீஜிய எழுத்தாளர் நட் ஹாம்சன் ஹிட்லருக்கு ஆதரவு அளித்துப் பேசியும் எழுதியும் வந்தார் என்பது இன்றைக்கும் விமர்சிக்கபடும் விஷயம் ( இவர் பெயரை நுட் ஹாம்சுன் என உச்சரிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழில் இவர் நட் ஹாம்சன் என்றே அறியப்படுகிறார் ) நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான ஹாம்சனின் புகழ்பெற்ற நாவல் தமிழில் நிலவளம் எனக் க.நா.சு மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த அற்புதமான நாவலை க.நா.சு எப்படித் தேடிக்கண்டுபிடித்து வாசித்து மொழி பெயர்த்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது உலகின் …

எழுத்தாளனின் அரசியல் Read More »