இலங்கை பயணம்
எட்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன். கிழக்கு மாகாண இலக்கியவிழாவில் சிறப்புரையாற்ற எழுத்தாளர் உமா வரதராஜன் அழைத்திருந்தார். கொழும்பில் துவங்கி யாழ்பாணம் வரை பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தேன். இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாகப் பார்வையிட்டேன். இந்த பயண அனுபவம் குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த பயணத்தில்எழுத்தாளர்கள் உமா வரதராஜன், ஹசீன், எஸ்.எல்.எம்.ஹனீபா, ஒட்டமாவடி அறபாத், திசேரா,மலர்செல்வன்.குழப்பிழான் சண்முகம், சாந்தன், யதார்த்தன் , கே.எஸ். சிவக்குமாரன், எம்.எம். நௌஷாத், சித்தாந்தன், பௌசர் சிராஜ் …