கூட்டத்தின் மனநிலை
1981ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் எலியாஸ் கானெட்டி. ஜெர்மன் மொழி எழுத்தாளரான இவர் எழுதிய Crowds & Power மிக சுவாரஸ்யமான புத்தகம். மனிதர்கள் ஏன் கூட்டமாகத் திரளுகிறார்கள். கூட்டத்தின் மனநிலை எப்படி உருவாகிறது. ஏன் கூட்டம் சேர்ந்தவுடன் வன்முறை ஏற்படுகிறது. தனிநபர் கூட்டத்தின் வழியாக என்ன மனநிலையை அடைகிறார். எது போன்ற கூட்டங்களைச் சமாளிக்க முடிவதில்லை என்று கூட்டத்திற்கும் அதிகாரத்திற்குமான உறவைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். பத்திரிக்கையாளர்கள். அரசியல் செயல்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய …