வண்ணம் கலந்த சொற்கள்
பிரசாந்தி சேகர் எழுதிய காஃப்கா பற்றிய கட்டுரை ஒன்றை சில வருஷங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். மிகச்சிறந்த கட்டுரை. நினைவிலேயிருந்தது. நேற்றிரவு திடீரென அதை மீண்டும் வாசிக்க வேண்டும் போலிருந்தது. காலச்சுவடு இணையதளத்தில் தேடி மீண்டும் வாசித்தேன். அபாரமான மனஎழுச்சிதரக்கூடிய கட்டுரை. இதுவரையாரும் காஃப்கா பற்றி இப்படியொரு கட்டுரையை எழுதியதில்லை. ஒரு எழுத்தாளனை மிகத் தீவிரமாக உள்வாங்கியிருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும். தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழை கோணங்கி கல்குதிரைக்காக கொண்டுவந்த போது கவிஞர் தேவதச்சன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதினார். …