தமிழ் சங்கங்கள்
கேள்வி 1: தமிழ் இலக்கியப் படைப்புகள் உலகளாவிய அளவில் மற்ற நாட்டின் அறிஞர் /எழுத்தாளர்களால் எத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது? பொதுவாக இந்தியாவெங்கும் தமிழ் இலக்கியம் என்றால் பழந்தமிழ் இலக்கியம் என்றே நினைத்துக் கொள்கிறார்கள். நவீன தமிழ்இலக்கியம் பற்றி பிற மாநிலங்களுக்கு அதிகம் தெரியாது. இந்திய அளவிலான இலக்கியக்கூட்டங்களுக்குப் போகும் போதெல்லாம் அவர்கள் வியப்போடு இப்படி எல்லாம் தமிழில் எழுதுகிறார்களா எனக்கேட்கிறார்கள். இன்றைய இலக்கியம் குறித்து இந்திய மொழிகளில் அறிமுகமேயில்லை. பின்பு எப்படி உலக அரங்கிற்குத் தெரிந்திருக்ககூடும். வெளிநாட்டுப் …