வான்கோவின் கடைசி கடிதம்
ஓவியர் வான்கோவின் (Vincent vanGogh)வாழ்க்கை குறித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் LOVING VINCENT. திரையில் இப்படத்தைக் காண்பது பரவசமூட்டுகிறது. வான்கோவின் ஒவியங்கள் உயிர்பெற்று கண்முன்னே கடந்து போகின்றன. அவர் வரைந்த உருவங்கள் நம்முன்னே நடமாடுகிறார்கள். வான்கோவின் சீற்றமிக்கக் கோடுகள் திரையில் அலைபோல எழுந்து மறைகின்றன. வான்கோவின் நீலம் வான்கோவின் மஞ்சள், சிவப்பு என அவரது வண்ணக்கலவைகளே படத்தின் ஆதாரவண்ணங்கள். ஒவியத்திலிருந்தே ஒரு திரைப்படத்தை உருவாக்கமுடியும் என்ற நவீன தொழில்நுட்பத்தின் சாதனைப்படைப்பு இதுவென்பேன். அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் …