கற்பனைச் சேவல்
சிறுகதை அந்த மூன்று பேரும் தன்னிடமிருக்கும் சண்டைச்சேவலை விலை பேசி வாங்கிப் போவதற்காக வந்திருப்பதாகவே காயம்பு நம்பினார் மூவரும் வெள்ளை வேஷ்டி கட்டியிருந்தார்கள்.அதில் ஒருவருக்குத் தலை நரைத்துப் போயிருந்தது.வயது எப்படியும் ஐம்பதுக்கும் மேலிருக்கும்.இன்னொரு ஆள் கோடு போட்ட சட்டையை மடித்துவிட்டிருந்தான்.திருக்கை மீசை வைத்திருந்தான்.மூன்றாவது ஆள் குள்ளம்.அவன் கையில் ஊதா நிற கைப்பை ஒன்றிருந்தது.அவர்களைப் போன்ற வெளியாட்கள் இந்தக் கிராமத்திற்கு எப்போதாவது தான் வருகிறார்கள். காயாம்பு வேம்படி நிழலில் கிடந்த கல்லில் உட்கார்ந்தபடியே அவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.காயாம்புவிற்கு …