இளம்பகவத்
இளம் ஐஏஎஸ் அதிகாரியான இளம்பகவத் நேற்று தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார். ஐஏஎஸ் தேர்விற்காகத் தயாராகும் பலரும் என்னை வந்து சந்திப்பதுண்டு. தமிழ் இலக்கியம், வரலாறு, நுண்கலைகள் சார்ந்து விவாதிப்பார்கள். விகடனில் கதாவிலாசம் எழுத துவங்கிய நாள் முதல் இளம்பகவத் என்னைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார். இந்திய ஆட்சிப்பணியில் உள்ள பலர் தீவிர இலக்கியவாசிப்புக் கொண்டவர்கள் என்பதை அறிவேன். தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை …