முகிலினி

மிளிர்கல் நாவலின் மூலம் தமிழ் இலக்கியச்சூழலில் தனிக்கவனம் பெற்ற எழுத்தாளர் இரா.முருகவேளின் புதிய நாவல் முகிலினி பொன்னுலகம் பதிப்பகம் சார்பில் வருகின்ற 26 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு  ருஷ்ய கலாச்சார மையத்தில் வைத்து வெளியிடப்படவுள்ளது. அந்த நிகழ்வில் நாவலை வெளியிட்டு உரையாற்றுகிறேன். நண்பர்கள். வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

தமிழ் சிறுகதைகள்

தமிழின் மிகச்சிறந்த  சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து The Tamil Story: Through the Times, Through the Tides என்ற புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் திலீப்குமார். சிறுகதைகளை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் சுபஸ்ரீ கிருஷ்ணசாமி. தமிழ் சிறுகதைகளை முதன்மைப்படுத்தி ஆங்கிலத்தில் இவ்வளவு பெரிய தொகைநூல் இதுவரை வெளியானதில்லை. இதுவே முதல்முறை. இதற்காக திலீப்குமாருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் The Tamil Story: Through the Times, Through the Tides புத்தகத்தை Tranquebar பதிப்பகம் மார்ச் …

தமிழ் சிறுகதைகள் Read More »

அரவிந்தனின் இரண்டு நாவல்கள்

பயணம், பொன்னகரம் என்ற அரவிந்தனின் இரண்டுநாவல்களைச் சமீபத்தில் வாசித்தேன். பத்திரிக்கையாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இலக்கியக் கட்டுரைகள் எழுதுபவராகவுமே அவரை அதிகம் அறிந்திருக்கிறேன். அவர் இந்தியாடுடே மற்றும் காலச்சுவடு இதழ்களில் பணியாற்றிய நாட்களில் சிலதடவைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் அவரது புனைவெழுத்தை வாசித்ததில்லை. இந்த இரண்டுநாவல்களில் முதலாவதாகப் பொன்னகரத்தை வாசிக்கத் துவங்கினேன். முக்கியக் காரணம் அதன் தலைப்பு. புதுமைபித்தனின் புகழ்பெற்ற சிறுகதை ஒன்றின் தலைப்பாகும் .இந்நாவல் புதுமைப்பித்தன் கதையோடு எவ்விதமாகவும் தொடர்பற்றது. சுந்தர ராமசாமியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் …

அரவிந்தனின் இரண்டு நாவல்கள் Read More »

திருலோக சீதாராம்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் திருலோக சீதாராம். சிறப்பான மொழியர்ப்பு. 1962 ஆகஸ்ட் 9ம் தேதியன்று ஹெஸ்ஸே காலமான செய்தியை ரேடியோவில் கேள்விபட்ட திருலோகம் தனது உறவினர்களில் ஒருவர் இறந்து போனது போலப் பதறிப்போயிருக்கிறார் அதைக்கண்ட மனைவி யாரு இறந்து போனது எனக்கேட்டதற்கு, என் சொந்தம். உனக்கு இதுல தீட்டு இல்லை என்று சொல்லிவிட்டு ஹெஸ்ஸேயிற்க்காக தான் தீட்டு காக்கவில்லை என்றாலும் உடனே ஒரு முழுக்கு போட …

திருலோக சீதாராம் Read More »

விழா புகைப்படங்கள்

நேற்று சாகித்ய அகாதமி நிறுவன நாள் உரை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் மாலன் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்து சாகித்ய அகாதமி குறித்த விரிவான தகவல்களையும் ,அகாதமியின்  பன்முகச்செயல்பாடுகளையும் பகிர்ந்து கொண்டார். எழுத்தாளர் சா.கந்தசாமி, விருட்சம்  அழகியசிங்கர், திருப்பூர்கிருஷ்ணன், கே.எஸ், கண்ணன், ஹிந்தி பேராசிரியர் பாலசுப்ரமணியன்,  இலக்கியவெளிவட்டம் நடராசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். சாகித்யஅகாதமியை நேரு உருவாக்கிய விதம் குறித்த அறிமுகத்துடன் அதன் அறுபத்திரெண்டு ஆண்டுகாலப் பணிகளின்  நிறைகுறைகள் பற்றி விரிவாகப்பேசினேன். சாகித்ய அகாதமி சென்னை …

விழா புகைப்படங்கள் Read More »

சாகித்ய அகாதமி உரை

மார்ச்- 12 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்யாபவனில் நடைபெற உள்ள சாகித்திய அகாதமி நிறுவன நாள் விழாவில் உரையாற்றுகிறேன்.  இதில் நண்பர்கள் , வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

கடலின் நியதி

கடல் பற்றித் தமிழில் ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கடற்புரத்து வாழ்க்கையைப் பற்றிய சிறுகதைகளும் நாவல்களும் மிகக்குறைவு. தோப்பில் முகமது மீரான், ஜோ டி குரூஸ் இருவரும் மீனவர்களின் வாழ்வியல் குறித்துச் சிறந்த நாவல்களை எழுதியிருக்கிறார்கள். வறீதையா கன்ஸ்தண்டீன் கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து சிறப்பாக எழுதிவருகிறார் அந்த வரிசையில் குமரிமாவட்ட மீனவர்களின் வாழ்க்கை குறித்துத் துறைவன் என்ற அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார் கிறிஸ்டோபர் ஆன்றணி. துறைவன் …

கடலின் நியதி Read More »

செவி சாய்

ஆன்டன் செகாவின் “துக்கம்”  என்ற சிறுகதையைத் தழுவி “செவி சாய்” என்ற குறும்படத்தை பவித்ரன் இயக்கியுள்ளார். செகாவ் கதையை தமிழ் சூழலுக்குப் பொருத்தமாக மாற்றியமைத்து அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஆட்டோ டிரைவராகச் சிறப்பாக நடித்துள்ள மகேந்திர பாபுவிற்கு என் வாழ்த்துகள் பவித்ரன் மற்றும் அவரது தொழில்நுட்ப குழுவினர்களுக்கு   மனம் நிரம்பிய பாராட்டுகள் SEVISAAI https://youtu.be/MdYarZ_tpYM

சஞ்சாரம் பதிவுகள்

சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டத்தின் வீடியோ பதிவுகள் நன்றி – Shruti.tv எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவல் குறித்த விமர்சன கூட்டத்தில் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் உரை நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு Chithra Balasubramanian speech about S. Ramkrishnan’s ‘Sanjaram’ Novel https://www.youtube.com/watch?v=XiSuKE2_1lQ எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவல் குறித்த விமர்சனக்கூட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ஏற்புரை மற்றும் வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் எஸ்.ரா. நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் …

சஞ்சாரம் பதிவுகள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கி உரை

சேலத்தில் நான் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் மற்றும் வாழ்க்கை பற்றிய ஆற்றிய உரையின் காணொளி இதனைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ருதி டிவி ரத்னம் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய  பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் யூடியூப் பகிர்வு: தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’- எஸ் ராமகிருஷ்ணன் https://youtu.be/gGWn18aTc6g