தும்பி வா

நேற்றைய தி இந்து  நாளிதழில்  ஓ.என்.வி. குரூப்பிற்கான அஞ்சலியாக ஆதி வள்ளியப்பன் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதியிருக்கிறார். இப்பாடல் எனக்கு மிகவும் விருப்பமானது.  இளையராஜாவின் இசை சாதனைகளில் ஒன்றான இப்பாடலை பாலுமகேந்திரா மிகச்சிறப்பாக படமாக்கியுள்ளார். இக்கட்டுரையை எழுதிய ஆதி வள்ளிப்பனுக்கும் வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள். •••• நினைவலைகள்: ‘தும்பி வா’ தந்த ஓ.என்.வி. குரூப் – ஆதி வள்ளிப்பன் மலையாளம் – தெரியாது ஓ.என்.வி. குரூப் – தெரியாது பாலுமகேந்திராவின் ‘ஓளங்கள்’ – தெரியாது …

தும்பி வா Read More »

எனக்குப்பிடித்த கதைகள் 33

மணலில் மறைந்த நாணயம் எர்னெஸ்ட் பக்லர் தமிழில் : ராஜ் கணேசன். இறுதிச்சடங்கு நடப்பதற்கு முந்தைய நாள் மாலை நானும் எனது அக்காவும் வயல்வெளியில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருபவர்கள், தங்கள் சிறுவயது நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது போல நாங்கள் எங்கள் இளம்பிராயத்து நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அக்கா என்னிடம், “ஒரு நாள் மதியம் நீ தொலைந்து போனதாக நினைத்து நாங்கள் தேடினோமே உனக்கு நினைவிருக்கிறதா?” …

எனக்குப்பிடித்த கதைகள் 33 Read More »

தமிழ் புத்தக நண்பர்கள்

தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு  கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் தோறும் ஒரு புத்தக விமர்சனக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதம் 23ம் தேதி மாலை  5:45 மணிக்கு எனது சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெற உள்ளது. Date:   Tuesday, 23rd February, 2016, Time: 5.45 p.m. to 8.15 p.m. Venue:   Tag Centre, New No. 69, T.T.K.Rd., Alwarpet, (Opp. Narada Gana    Sabha), Chennai 600018 Book of …

தமிழ் புத்தக நண்பர்கள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம்

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் விதமாக தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் குறித்து சேலம் பாலம் புத்தகக் கடையில் பிப்ரவரி 21 ஞாயிறு காலை 10 மணிக்கு உரையாற்றுகிறேன். இந்த நாவலை எம்.ஏ.சுசீலா தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கிறது இடம் Paalam -The Book Meet No 35, Advaitha Ashramam Road, Fair Lands, Salem – 636004, Opposite Bus Stand +(91)-427-2335952  +(91)-8807402807, …

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் Read More »

பெரம்பலூர் புத்தகத் திருவிழா

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் நாளை (01. 02. 2016  திங்கள் கிழமை ) மாலை ஆறு மணிக்கு எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கிலும். பாரதி புத்தகாலய அரங்கிலும், புலம் அரங்கிலும், விகடன் பதிப்பக அரங்கிலும் எனது புத்தகங்கள் கிடைக்கின்றன

புகைப்படங்கள்-2

இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது நன்றி புகைப்படங்கள் : பிரபு காளிதாஸ்

விழா புகைப்படங்கள்

இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த  அனைவருக்கும்  நன்றி அன்பிற்குரிய நண்பர்கள் ஜென்ராம், ஜி.குப்புசாமி, கமலாலயன், மாரிமுத்து, டி.லட்சுமணன் , அருணகிரி,  முத்துகிருஷ்ணன்  ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நன்றி புகைப்படங்கள் : பிரபு காளிதாஸ்

டால்ஸ்டாயின் வாழ்க்கை

டால்ஸ்டாயின் வாழ்க்கை மற்றும் இறுதிஊர்வலம் குறித்த அரிய காணொளிக் காட்சிகள். LEO TOLSTOY on Film https://youtu.be/oxHr1ku9DGI Leo Tolstoy – The Last Years https://youtu.be/rh1vYrogvNE Tolstoy Death & Funeral.mov https://youtu.be/U8M-Y1OMJhw Tolstoy Biography https://youtu.be/5YOywSV3zB4 The Trouble with Tolstoy https://youtu.be/F0_fE22qjBE