அழகியசிங்கரின் கட்டுரைகள்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு விருட்சம் அழகியசிங்கரைத் தெரியும். இலக்கியத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அபூர்வமான மனிதர். கவிதைகள், சிறுகதைகள். கட்டுரைகள் எழுதி வருவதுடன் நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அதன் 100 வது இதழ் சமீபமாக வெளிவந்துள்ளது. நவீன விருட்சம் இதழில் எனது சிறுகதைகள் வெளியாகியிருக்கிறது. விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. …