மதுரை சென்றுள்ளேன்
சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை காரணமாக மூன்று நாட்களாக மின்சாரமில்லை, குடிநீரில்லை. உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை. தீவைப்போல சென்னை மிதக்கிறது. வெளியே எங்கும் போக முடியாத நிலை, எனது வீட்டின் முன்புள்ள சாலையில் நான்கடி தண்ணீர் வெள்ளம். காய்ச்சல் பரவி பலருக்கும் நோய். வயிற்றுப்போக்கு. பகலிலும் வெளிச்சமில்லை, பாதி இருட்டு, ஐந்து மணிக்கெல்லாம் முழு இருட்டாகிவிட்டது. சென்னையின் இருண்ட காலமிது. போன், நியூஸ் பேப்பர், ஏடிஎம் எதுவும் கிடையாது. அவசர உதவிக்கு தரப்பட்ட எந்த எண்ணும் வேலை செய்யவில்லை. …