சிறுவர்களுக்கான புத்தகங்கள்

சிறார்களுக்காக நான் எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் எனக்கேட்டு கனடாவிலிருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு அனுப்பிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். ஆன்லைனில் வாங்க விரும்புகிறவர்கள் கீழ் கண்ட முகவரியை தொடர்பு கொள்க : டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078.  தமிழ்நாடு. இந்தியா Ph”+91 44 65157525 , Cell +91 9940446650 Mail: discoverybookpalace@gmail.com சென்னை : …

சிறுவர்களுக்கான புத்தகங்கள் Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 31

ஷா ஆலம் முகாமின் ஆவிகள் உருதுக்கதை : அஸ்கர் வஜாஹத் (Asghar Wajahat) தமிழில் – ராகவன் தம்பி ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன. இந்தக் கொடுமையான நரகவேதனையிலிருந்து ஆண்டவரால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும். என்ன ஒரு மிகப் பயங்கரமான அமளி இது? உங்களுடைய குரலையே உங்களால் மிகவும் பலவீனமாகத்தான் கேட்க முடிகிற அளவுக்கு கூக்குரலும் ஓலமும், முனகலும், பேரழுகையும் …

எனக்குப் பிடித்த கதைகள் 31 Read More »

நெ.து.சு.விருது

கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் 103வது பிறந்தநாள் விழா இன்று அவரது சொந்த ஊரான நெய்யாடுபாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அவரது பெயரில் வழங்கப்படும் நெ.து.சு.விருது எனக்கு அளிக்கபட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது நெய்யாடுபாக்கம். செய்யாற்றின் கரையிலுள்ள சிறிய கிராமம். அங்கே நெ.து.சுவால் உருவாக்கபட்ட துரைசாமி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இவ்விழா நடைபெற்றது. கிராமத்துப் பொதுமக்கள், மாணவர்கள் முன்னிலையில் டாக்டர் ஏ.எம், சுவாமிநாதன் IAS. (Retd) இந்த விருதை எனக்கு வழங்கினார். நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தமிழ் …

நெ.து.சு.விருது Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 30

மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர்.  தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது  மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும்  ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் …

எனக்குப் பிடித்த கதைகள் 30 Read More »

ம.பொ.சி.விழா

சிலம்புச் செல்வர் டாக்டர்.ம.பொ.சிவஞானம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா அக்டோபர் 5 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இடம் :  டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி (சத்யா ஸ்டுடியோ) ராஜா அண்ணாமலைபுரம். சென்னை 28 ••

காந்தி ஜெயந்தி

காந்தி சர்வ சமய பிரார்த்தனை மைய நண்பர்கள் NFDC உதவியுடன் வருகின்ற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளன்று சென்னையில் உள்ள சத்தியம்,அபிராமி,சாந்தி,பெரம்பூர் எஸ்2 ஆகிய நான்கு தியேட்டர்களில் காலைக்காட்சியாக ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி  படத்தின் தமிழ் வடிவத்தை  இலவசமாகத் திரையிட  உள்ளார்கள். அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்.

எனக்குப் பிடித்த கதைகள் 29

இறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள் – ஆர்தர் சி கிளார்க் தமிழில் :  ஆர்.அபிலாஷ் ”இது சற்று விசித்திரமான வேண்டுகோள் தான்”, பாராட்டத்தக்க கட்டுப்பாடு என்று தான் எதிர்பார்த்த ஒன்றுடன் டாக்டர் வாக்னர் கேட்டார். “எனக்கு தெரிந்த வரையில் ஒரு திபத்திய மடாலயத்துக்கு ஆட்டோமெட்டிக் சீக்குவன்ஸ் கணினி வழங்கும்படி கேட்கப்பட்டது இதுவே முதன் முறை. நான் அத்துமீறி ஆர்வம் காட்ட விரும்பவில்லை, ஆனால், உங்கள் உ …ம்… நிறுவனத்துக்கு இத்தகைய ஒர் எந்திரத்தினால் பயனுண்டு என்று நான் …

எனக்குப் பிடித்த கதைகள் 29 Read More »

விளம்பரப்படம்

ஆரண்யகாண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள புதிய விளம்பரப்படத்தைப் பார்த்தேன். மிகச்சிறப்பாக உள்ளது. ஸ்டாப் மோஷன் முறையில் உருவாக்கபட்ட இந்த விளம்பரப் படத்திற்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் உருவாக்கம் பற்றிய யூடியூப் வீடியோவை அவசியம் பாருங்கள். தனித்துவத்துடன் இதனை இயக்கியுள்ள தியாகராஜன் குமாரராஜாவிற்கும் சிறந்த ஒளிப்பதிவு செய்துள்ள ஜீவா சங்கருக்கும், தொழில்நுட்ப குழுவினர்களுக்கும், மனம் நிரம்பிய பாராட்டுகள். Make Room For Something New | Open Up With Stayzilla …

விளம்பரப்படம் Read More »