உருவாக்கம்
தற்செயலாக எனது எழுத்துகளை வாசிக்கத் துவங்கி அதிலிருந்து தன்னை ஒரு கவிஞரான வளர்த்துக் கொண்ட கவிஞர் மாதவன் அதிகன் குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
தற்செயலாக எனது எழுத்துகளை வாசிக்கத் துவங்கி அதிலிருந்து தன்னை ஒரு கவிஞரான வளர்த்துக் கொண்ட கவிஞர் மாதவன் அதிகன் குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
மேசை என்றால் மேசை ஜெர்மன்மூலம் : பீட்டர் பிக்ஃசெல் (Peter Bichsel) தமிழில்: ந.சுசீந்திரன் நான் ஒரு முதியவனைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இனி எந்த வார்த்தையுமே பேச மாட்டாத, சிரிக்கவும் கோபப் படவும் கூட சோம்பற் படும் தூங்கிப்போன முகங்கொண்ட ஒரு முதியவனைப் பற்றி. அந்தச் சிறு நகரின் ஒரு தெரு முனைச் சந்திக்கருகில் அவன் வீடு. அவனைப் பற்றி இன்னும் மேலதிகமாகச் சொல்லிக் கொண்டு போவதால் ஆகப்போவது எதுவுமில்லை. மற்றவர்களை விட அவனொன்றும் வித்தியாசமான …
வருகின்ற சனிக்கிழமை 13.06.2015 மாலை ஐந்தரை மணிக்கு சாகித்ய அகாதமி சார்பில் நடைபெறும் கதாசந்தி நிகழ்வில் பசித்த மிருகம் என்ற எனது புதிய சிறுகதையை வாசிக்க இருக்கிறேன். கதை வாசித்தலைத் தொடர்ந்து இக்கதை உருவான விதம் குறித்த உரையும் எனது சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது நிகழ்ச்சி நடக்குமிடம் : பாரதீய வித்யாபவன். சிற்றரங்கு. மயிலாப்பூர். சென்னை நேரம் : 5:30 pm நாள்: 13.06.2015 சனிக்கிழமை. (அரங்கம் மயிலாப்பூர் கபாலி கோவில் அருகில், …
அஷ்டமாசித்தி – ஜப்பானிய பழங்கதை தமிழில் : புதுமைப்பித்தன் (யாஸோ – கிதான் என்ற புராதன ஜப்பானிய கிரந்தத்திலிருந்து எடுக்கப்பட்டது.) டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள்ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந்து பௌத்த சித்திரங்களைக் காட்டியும் தர்மத்தை ஜனங்களிடை உபதேசித்தும் பிழைத்து வந்தான். தினம் தினம் அவன் கியோன் ஆலயத்தின் பிரகாரத்தில் உள்ள பெரிய மரத்தில் ஒரு …
இம்மாத அந்திமழை இதழில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது
நன்றி. செல்லமே இதழ்
காற்றில் பனித் துகள்கள் பறந்து கொண்டிருக்கின்றன. சுழன்று ஆடும் மரக்குதிரையின் மீது பனி பொழிகிறது. நான்கு வயது பாங் குயிங் அதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறான் இப்படிதான் Little Red Flowers திரைப்படம் துவங்குகிறது. கிண்டர் கார்டன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உலகைச் சித்தரிக்கும் அற்புதமான படமது. இத்தனை குழந்தைகளை எப்படி நடிக்க வைத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் பாங் குயிங்காக நடித்துள்ள சிறுவன் அசத்துகிறான். சீனத்திரைப்படங்கள் என்றாலே மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள் அல்லது வரலாற்றையும் …
சாகித்ய அகாதமி சார்பில் நடைபெற உள்ள எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் நான் பங்கு பெற்று எனது சிறுகதைகள் குறித்து உரையாற்ற இருக்கிறேன் கதாசந்தி என்ற இந்த இலக்கிய நிகழ்வு ஜுன் 13 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் நடைபெற உள்ளது வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
தீபம் – கான்ஸ்டாண்டின் செமினாவ் தமிழில் நா. பாஸ்கரன் நான் உங்களிடம் சொல்லப்போகும் இந்த நிகழ்ச்சி 1944-ம் வருஷம் செப்டம்பர் மாதம் பத்தொன்பதாம் தேதி நடந்தது. பெல்கிரேட், ஏற்கனவே கைப்பற்றப்பட்டு விட்டது. சாவா நதியின் மேலுள்ள பாலமும், அதன் ஓரத்திலுள்ள ஒரு சிறிய அரண் இவை மட்டுமே ஜெர்மானியர்களின் வசம் இருந்தது. அன்று உதயத்தில், செஞ்சேனை வீரர்கள் ஐவர் அந்தப் பாலத்தின் மீது ஏறுவது …
1969ம் ஆண்டு வெளியான The Secret of Santa Vittoria படத்தை நேற்றிரவு பார்த்தேன். Stanley Kramer இயக்கியது, ஆன்டனி குயின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ராபர்ட் கிரக்டன் நாவலை படமாக்கியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகள் குறித்து நிறையத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன, இப்படமும் உலகப்போரில் முசோலினியின் வீழ்ச்சி ஒரு சிறுநகரை எப்படிப் பாதிக்கிறது என்பதையே களமாகக் கொண்டிருக்கிறது, சாண்டா விட்டோரியா வட இத்தாலியில் உள்ள சிறிய ஊர். ஒயின் தயாரிப்புக்குப் புகழ்பெற்றது. அங்கே சிறியதொரு ஒயின் விற்பனையகம் நடத்துகிறாள் …