சஞ்சாரம் விமர்சனம்

– அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் . 375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று. ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது. இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு நான் சென்றேன். இந் நாவலைப் பற்றி ராமகிருஷ்ணன் ஒன்று சொன்னார். அவருக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாதாம். இசையை ரசிப்பது வேறு; இசையைப் …

சஞ்சாரம் விமர்சனம் Read More »

நாயன சஞ்சாரம்

கரிசல்காட்டு காற்றலைகளில் நாயன சஞ்சாரம் மதுரை வாசகன் *** வேறு எந்த வாத்தியத்தைவிடவும் கிராமத்து மக்களுக்கு நாதஸ்வரம் கேட்பதே பிடித்தமானதாக இருக்கிறது. அந்த இசையை, தங்களின் மண்ணின் இசையாகவே விவசாயிகள் நம்பினார்கள். கரிசலின் தொல்நினைவுகளை எல்லாம் நாதஸ்வரம் மீட்டுத் தருவதாகவே கருதினார்கள். -எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் வாசிக்கையில் பழகிய மனிதர்களோடு நமக்குப் பிடித்த ஊரில் அலைவதைப் போலிருந்தது. சஞ்சாரம் நாவலைக் குறித்து பதிவெழுதத் திண்ணையில் அமர்ந்தபோது காற்றலைகளில் ‘அங்க இடி முழங்குது.. கருப்பசாமி தங்க கலசமின்னுது’ பாடல் …

நாயன சஞ்சாரம் Read More »

புத்தகம் பேசுது

புத்தகம் பேசுது இதழில் சஞ்சாரம் நாவலுக்கு  தே. லட்சுமணன் எழுதியுள்ள விரிவான விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது. நன்றி புத்தகம் பேசுது. மார்ச் 2015

உருதுக்கதை

ஜோகிந்தர் பால் – உருதுக்கதை என் நாவலில் வரும் கதாநாயகனும் கதாநாயகியும் என்மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள் நாவலின் கடைசியில் தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நான் செய்திருந்த முடிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சரியான சந்தர்ப்பம் வருவதாகக் காத்திருந்தார்கள். முடிவில் ஒருநாள் நாவலில் இருந்து வெளியேறி மறைந்து போய்விட்டார்கள். நாவலின் பிரதி முழுவதும் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவேயில்லை எப்படிக் கண்டுபிடிப்பது, எங்கே போயிருப்பார்கள், எனக்குக் கவலை உண்டானது அவர்களைக் கண்டுபிடிக்கமுடிந்தால் உடனடியாகத் …

உருதுக்கதை Read More »

உயிர்மையில்

உயிர்மை மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து லஷ்மி சரவணக்குமார் எழுதிய விமர்சனம் வெளியாகியுள்ளது நன்றி: உயிர்மை

கணையாழி

கணையாழி மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய விரிவான விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது நன்றி: கணையாழி

சா. தேவதாஸ்

எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான சா. தேவதாஸ் அவர்களுக்கு இந்த ஆண்டிற்குரிய மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது  அறிவிக்கபட்டுள்ளது. லடாக்கிலிருந்து கவிழும் நிழல் என்ற பபானி பட்டாச்சார்யா நூலின் மொழிபெயர்ப்பிற்காக இந்த விருது அளிக்கபடுகிறது. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

காலத்தின் திறவுகோல்

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது ஸ்டீபன் ஸ்வேக்கின் The Society Of The Crossed Keys கதையை மையமாகக் கொண்டு எடுக்கபட்ட படமது ஸ்டீபன் ஸ்வேக் (Stefan Zweig) ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் எழுதிய யாரோ ஒருத்தியின் கடிதம், ராஜவிளையாட்டு போன்ற நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கபட்டுள்ளன., உலக அரங்கில் இவர் காப்காவிற்கு இணையாகப் பேசப்படுகிறார். இவரது குறுநாவல்கள், நாவல்கள் பல திரைப்படங்களாக உருவாக்கபட்டுள்ளன, A Letter from an …

காலத்தின் திறவுகோல் Read More »