சஞ்சாரம் விமர்சனம்
அவலத்தின் வலி உணர்த்தும் ஓர் இசைப்பயணம் பேராசிரியர் ராமகுருநாதன் காவிரி மண்ணுக்குரிய பெருமை அது கலைகளின் தாயகமாக ஒருகாலத்தில் இருந்ததுதான். இசை, நாடகம், நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் தஞ்சை மாவட்டத்திற்குத் தனித்தன்மை உண்டு. கலைஞர்கள் பலரை உருவாக்கி உலவ விட்டது அந்தக் காவிரி மண். இசைக்கலைஞர்களில் குறிப்பாக நாதஸ்வர இசைக் கலைஞர்களில் சிறப்புக்குரியோராகப் பலர்தஞ்சை மண்ணால் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்தவர்கள். அவர்களில் சிலர் இந்திய அளவில் புகழ் பெற்றவர்கள். காவிரி மண்ணுக்கு மட்டும் இந்தப் பெருமை …